My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

இலை மற்றும் தண்டுத் துளைப்பான் விரட்டி!

தண்டுத் துளைப்பான்

“அண்ணே.. பயிருல இலைகளையும் தண்டுகளையும் துளைக்கிற பூச்சிகள எப்பிடிண்ணே கட்டுப்படுத்துறது?..’’

“தம்பி.. பயிர்களின் இலைகளையும் தண்டுகளையும் பூச்சிகள் தாக்கிச் சேதப்படுத்துனா விளைச்சல் குறஞ்சு போகும்ப்பா.. அதனால இந்த இலைகளையும் தண்டுகளையும் துளைக்கும் பூச்சிகளைச் சரியான நேரத்துல.. சரியான மருந்தைத் தெளிச்சுக் கட்டுப்படுத்தணும்.. இதுக்கு இயற்கையான மருந்தே இருக்குப்பா..’’

“அதுக்குப் பேரு என்னன்னு சொல்லுண்ணே..’’

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

“அதை இலை மற்றும் தண்டுத் துளைப்பான் விரட்டின்னு சொல்லுவாக..’’

“இதைத் தயாரிக்க என்னென்ன பொருள்கள் வேணும்ண்ணே?..’’

“இதைத் தயாரிக்க, ஆடாதொடை 500 கிராம், பீச்சங்கு ஒரு கிலோ, சீதாப்பழ விதை 100 கிராம், சிறியா நங்கை 500 கிராம், தங்கரளிக் காய் அல்லது சீதா தழை ஒரு கிலோ, சோற்றுக் கற்றாழை ஒரு கிலோ, மஞ்சள் தூள் 100 கிராம், தேவையான அளவு புற்று மண், புகையிலைத் தூள் ஒரு கிலோ வேணும்ப்பா..’’

“சரிண்ணே.. செய்முறையைப் பத்திச் சொல்லுண்ணே..’’

“இப்போ நான் சொன்ன பொருள்களில் புகையிலைத் தூள், மஞ்சள் தூள், புற்றுமண் தவிர மற்ற பொருள்களை ஒன்றாகக் கலந்து பசையைப் போல நல்லா அரச்சுக்கிறணும்.. அடுத்து, அஞ்சு லிட்டர் கொதிநீரில் புகையிலைத் தூளைப் பன்னிரண்டு மணி நேரம் ஊற வைக்கணும்.. இதில், ஏற்கெனவே அரச்சு வச்சுருக்கும் கலவையைக் கலந்து ரெண்டுமூணு நாள் ஊற விட்டால் புளிச்சு வரும்.. இந்தக் கலவையோட மஞ்சள் தூளையும், புற்று மண்ணையும் சேர்த்துப் பசையைப் போல ஆக்குனா.. இலை மற்றும் தண்டுத் துளைப்பான்களைக் கட்டுப்படுத்தும் இடுபொருள் தயார்..’’

“சரிண்ணே.. இதை எப்படிப் பயன்படுத்துறது?..’’

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

“அதாவது.. ஒரு கிலோ பசையை 100-125 லிட்டர் தண்ணியில கலந்து, கைத்தெளிப்பான் அல்லது விசைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்.. இதனால.. பயிரோட இலைகளையும் தண்டுகளையும் துளைக்கும் புழுக்கள் கட்டுப்படும்.. நஞ்சில்லா உணவுப் பொருள்கள் கிடைக்கும்.. குறைந்த செலவில இதைத் தயாரிக்கலாம்.. சுற்றுச்சூழலுக்கு ஆதரவான இடுபொருளுப்பா..’’

“நல்லதுண்ணே.. நானு வர்றேண்ணே..’’


பசுமை


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

உங்கள் கருத்து?

மேலும் படிக்கலாம்:

  • பல பயிர்கள் சாகுபடி!

  • இலைப்பேன் விரட்டி!

  • பூச்சி விரட்டித் தயாரிப்பு!

  • உடனடி பயிர் வளர்ச்சிக்கு அமுதக் கரைசல்!

  • ஊர் மந்தை: நுண்ணுயிர் இலைக்கருகல் நோய் விரட்டி!

  • தசகவ்யாவைத் தயாரிப்பது எப்படி?

  • தேமோர்க் கரைசலைத் தயாரிப்பது எப்படி?

  • அண்ணே.. காய்ப்புழுக்களை விரட்டுவதைப் பற்றி சொல்லுங்கண்ணே..!

  • ஏண்ணே.. பஞ்சகவ்யாவைத் தயாரிப்பது எப்படி?