My page - topic 1, topic 2, topic 3

காளானை ஏன் உணவாகப் பயன்படுத்த வேண்டும்?

காளானை ஏன் உணவாகப் பயன்படுத்த வேண்டும்?

காளான் என்பது, பூசண வகையைச் சேர்ந்த, பச்சையம் இல்லாத கீழ்நிலைத் தாவரம். காளான்கள் பல்வேறு வடிவங்கள் மற்றும் நிறங்களில் உள்ளன. காளானில் மக்களுக்குத் தேவையான அனைத்துப் புரதச் சத்துகள், உயிர்ச் சத்துகள், தாதுப்புகள் இருப்பதால், இதை, பாதுகாப்பான வேளாண் உணவுப் பொருள் என்று கூறலாம்.

பொதுவாக, குடை, சிப்பி, கிழங்கு, புனல் போன்ற உருவங்களில் காளான்கள் இருக்கும். வைக்கோல் காளானின் அடிப்பகுதி, கிண்ணத்தைப் போலவும், மொட்டுக் காளான் தண்டின் நடுப்பகுதி, வட்டத் தட்டைப் போலவும் இருக்கும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மனித இனத்தில் தோன்றும் பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாக, காளான் பயன்படுகிறது. குறிப்பாக, இதய நோய், நீரிழிவு, புற்று நோய் மற்றும் மலச்சிக்கலைக் குணமாக்கும் உணவுப் பொருளாகப் பயன்படுகிறது. கிழக்கத்திய நாடுகளில், காளான்களில் இருந்து, பல்வேறு நோய்களுக்கான மருந்துகளைத் தயாரித்து ஏற்றுமதி செய்கிறார்கள்.

உலர்ந்த காளானில் 18.9 சதம் புரதம், 1.7 சதம் கொழுப்பு, 58 சதம் மாவுப்பொருள், 11.1 சதம் நார்ப்பொருள், 9.3 சதம் சாம்பல் சத்து ஆகியன உள்ளன. இந்திய உணவில் முக்கியப் பங்காற்றும் தானியங்களில் உள்ள லைசின், டிரிப்டோபன் போன்ற அமினோ அமிலங்கள் காளானில் நிறைந்து உள்ளன.

உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்கள், உயிர்ச் சத்துகள், தாதுப்புகள், உயர்வகைப் புரதம், நார்ச்சத்து ஆகியன மிகுந்துள்ளன. மேலும், காளானில், கொழுப்பும் சர்க்கரையும் குறைவாக இருப்பதால், இதய நோய், வயிற்றுப் புண் மற்றும் நீரிழிவுப் பாதிப்புள்ள அனைவருக்கும், காளான் சிறந்த இயற்கை உணவாகும்.

கேனோடெர்மா, லென்டினஸ், ஆரிக்குலேரியா, கிரிபோலா போன்ற காளான் வகைகளில் இருந்து, புற்று நோய், மஞ்சள் காமாலை, மற்றும் பால்வினை நோய்க்கான மருந்து, மாத்திரை, மருந்துக் குப்பி, டானிக் ஆகியன தயாரிக்கப் படுகின்றன.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

இவற்றை, சீனா, கொரியா, தைவான், பிலிப்பைன்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகள் தயாரித்து வருகின்றன. நமது நாட்டிலும் இத்தகைய பொருள்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

ஜப்பானில் மட்டும் ஆண்டுக்கு 358 மில்லியன் டாலர் அளவுக்கு, கோரியோலஸ் வெர்சிகலர் என்னும் காளானில் இருந்து, புற்று நோய் மருந்து தயாரிக்கப்படுகிறது. இது, அந்நாடு தயாரிக்கும் புற்று நோய் மருந்தில் கால் பங்காகும். இதைப் போலச் சீனாவிலும், கேனோடெர்மா, கிரிபோலா, லேன்டினஸ், ஹப்சிசைகஸ் போன்ற மருத்துவக் காளான்களை வளர்த்து வருகின்றனர்.

இந்தியாவில் இருந்து மோர்ச்செல்லா போன்ற மருத்துவக் காளான்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மோர்ச்செல்லா காளான் ஏற்றுமதி மூலம், நம் நாட்டுக்கு ஆண்டுதோறும் 100 கோடி ரூபாய் அந்நியச் செலாவணியாகக் கிடைக்கிறது. ஒரு கிலோ மோர்ச்செல்லா காளானின் விலை 3,000 ரூபாயாகும்.

காளான்களின் மருத்துவப் பண்புகள்

அகாரிகஸ் பைஸ்போரஸ்: செரிப்புத் திறன் கூடும். நரம்புத் தளர்ச்சி, வலிப்பைக் குறைக்கும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

அகாரிகஸ் கேம்பஸ்டிரிஸ்: ஸ்டபைலோ காகஸ், சால்மோ னெல்லா, எஸ்செர்ச்சியா ஆகிய பாக்டீரியாக்கள் மூலம் ஏற்படும் காய்ச்சல் போன்றவற்றைக் குணமாக்கும்.

அமானிடா மஸ்காரியா: இதிலுள்ள மஸ்ஸிமால் மற்றும் இபோடெனிக் அமிலம், நரம்பு நோய்கள், வலிப்பு, கண் எரிச்சல், இதய நோயைக் குணமாக்கும்.

ஆரிகுலேரியா பாலிரைகா: உடல் நலம், தடையில்லா இரத்தச் சுழற்சிக்கு ஏற்றது. இதிலுள்ள டிரைகிளிசரைடு, பாச்போலிபிட் ஆகியன, குடல் இறக்கம், வயிற்றுக் கோளாறைக் குணமாக்கும்.

பொலிடஸ் எடுலிஸ்: இதன் சாறு, தசைப்பிடிப்பு, மூட்டுவலியைக் குறைக்கும். இன்புளுயன்சா காய்ச்சல் மற்றும் முடக்குவாதத்தை ஏற்படுத்தும் வைரசைக் கட்டுப்படுத்தும்.

கோலோசைபா இன்டிகா: வயிற்றுப்புண், மலச்சிக்கல் மற்றும் இரத்த அழுத்தத்தைக் குணமாக்கும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

கேல்வேசிய ஜய்ஜான்டிஸ்: இதிலுள்ள கேல்வேசின் புற்றுநோய்க் கட்டிகளைக் கரைக்கும்.

கிளைட்டோசைப் இல்லுடன்ஸ்: பிளாஸ்மோடியம் போன்ற கிருமிகளை எதிர்க்கும் இல்லுடின் எம் மற்றும் இல்லுடின் எஸ் இதில் உள்ளன.

கிரிபோலா பிரன்டோசா: உடலுக்கு நோய்த் தடுப்பு சக்தியைத் தருகிறது. இரத்தழுத்தம், நீரிழிவு, மலச்சிக்கலுக்கு நல்ல மருந்து. இதன் சாறு எய்ட்ஸ் கிருமிகளை அழிக்கும்.

பிளாமுல்லினா வெலுடைப்ஸ்: இதிலுள்ள புரதம், புற்றுநோய்க் கிருமிகளையும், சால்மனெல்லா டைபி மற்றும் ஸ்டைலோ காக்கஸ் பாக்டீரியா மூலம் ஏற்படும் காய்ச்சலையும் தடுக்கும்.

பிளிரேட்டஸ் ஆஸ்டிரியேட்டஸ்: மூட்டுவலி, தசைப் பிடிப்புக்கு நல்ல மருந்து.

வால்வேரியல்லா வால்வேசியஸ்: புற்றுநோய்க் கிருமிகளை அழிக்கும்.

இப்படி, தொடக்கக் காலத்தில் உணவாக மட்டுமே பயன்பட்டு வந்த காளான்களின் மறுபக்கத்தைப் புரட்டிப் பார்த்த அறிவியல் உலகம், அவற்றிலுள்ள சர்க்கரை, புரதம் மற்றும் டிரைடெர்பினாய்டு மூலக் கூறுகளின் மருத்துவக் குணங்களை வெளியே கொண்டு வரும் வகையில் செயலாற்றிக் கொண்டுள்ளது.


முனைவர் பெ.த.சரவணன், முனைவர் க.சித்ரா, அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி, திருச்சி – 620 027.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும் படிக்கலாம்:

  • நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முறைகள்!

  • சம்பா மற்றும் தாளடிக்கான நெல் இரகங்கள்!

  • ஜப்பானிய காடை வளர்ப்பு – 1

  • ஜப்பானிய காடை வளர்ப்பு முறை!

  • மரவள்ளி இலையில் மக்களுக்கான உணவுப் பொருள்கள்!

  • விளைச்சலைக் கெடுக்கும் எலிகளும் கட்டுப்பாடுகளும்!

  • முயல் வளர்ப்பும் விற்பனை வாய்ப்புகளும்!

  • பழ ஈக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

  • சங்க இலக்கியத்தில் காட்டப்படும் யாடும் ஆடும்!