My page - topic 1, topic 2, topic 3
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

ஆடுகளுக்கான அடர் தீவனம்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019

ம் நாட்டில் ஆடுகள் பெரும்பாலும் மேய்ச்சல் நிலங்களை நம்பியே வளர்க்கப்படுகின்றன. ஆனால், ஆண்டு முழுவதும் புற்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. இதைப்போல வறட்சிக் காலத்திலும் ஆடுகளின் உற்பத்தித் திறன் பாதிக்கப்படுகிறது. இந்தப் பாதிப்பைச் சரி செய்ய, கறவை மாடுகளுக்கு வழங்கப்படுவதைப் போல ஆடுகளுக்கும் சரிவிகிதச் சமச்சீர் உணவு மிகவும் முக்கியம். அதனால், உலர் தீவனம் பசுந்தீவனத்துடன் அடர் தீவனத்தையும் ஆடுகளுக்குக் கொடுக்க வேண்டும்.

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

ஆடுகளின் ஊட்டத் தேவையானது, அதன் உடல் வளர்ச்சி, பராமரிப்பு, சினை மற்றும் பாலூட்டும் காலம், சுற்றுச்சூழல் மற்றும் அதன் தினசரி செயல்களைப் பொறுத்தே அமைகிறது. ஆடுகளுக்குத் தேவையான தரமான தீவனத்தைத் தயாரிக்கும் போது, தீவனத்தின் அடர்த்தி, சுவை, எளிதில் கிடைத்தல், விலை, செரிமானச் சக்தி ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். 

உயர் அளவு செயல்கள் காரணமாக, ஆடுகளின் உடல் பராமரிப்புக்கான தீவன அளவு, மாடுகளின் தேவையை விட அதிகமாகும். சினைக் காலத்தின் கடைசி இரண்டு மாதங்களில் அதிக ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. ஈன்ற நான்கு நாட்களுக்குப் பிறகு பால்மடி சார்ந்த சிக்கல்களைத் தவிர்க்க, தீவன அளவைக் குறைத்து, நார்ச்சத்தை மிகுதியாகச் சேர்க்க வேண்டும். இதற்குப் பிறகு தீவன அளவை முறைப்படுத்த வேண்டும்.

இவ்வகையில், ஆடுகளின் அதிகளவு உற்பத்தித் திறன் மற்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ள ஊட்டச்சத்தியல் குறியீடுகளைக் கவனத்தில் கொண்டு, கிருஷி ஆட்டுத் தீவனம் தயாரிக்கப்படுகிறது. கிருஷி ஆட்டுத் தீவனத்தில் உலர் நிலையில் (குறைந்த அளவில்) 17% புரதம்,  60% செரிக்கும் ஊட்டச் சத்துக்கள், 2.5% கொழுப்பு 1.5% கால்சியம், 0.7% மொத்த பாஸ்பரஸ் மற்றும் உலர் நிலையில் (அதிக அளவில்) 11% ஈரப்பதம், 14% நார்ச்சத்து ஆகியன அடங்கியுள்ளன. 

எளிதில் செரித்தல், உயர் தீவன மாற்றுத்திறன், அதிக உடல் வளர்ச்சி மற்றும் எடை, ஆரோக்கியமான தோல் மற்றும் சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தி ஆகியன, கிருஷி ஆட்டுத் தீவனத்தின் சிறப்புகளாகும். இத்தீவனத்தில் தேவையான அளவில் வைட்டமின்கள் மற்றும் தாதுப்புகள் சேர்க்கப்படுவதால், ஆடுகள் தக்க காலத்தில் கருவுறுதல் சாத்தியமாகிறது. கிருஷியின் ஆட்டுத் தீவனத்தில் யூரியா போன்ற பொருள்கள் எதுவும் கலக்கப்படுவதில்லை.

கிருஷி ஆட்டுத் தீவனத்தை, ஆடுகளின் உடல் அளவு, எடை ஆகியவற்றைப் பொறுத்து, அன்றாடம் 200 கிராம் முதல் 400 கிராம் வரை  கொடுக்கலாம். இத்துடன், தேவையான அளவு உலர் மற்றும் பசுந்தீவனத்தையும் கொடுக்க வேண்டும். கிருஷி ஆட்டுத் தீவனம் குச்சி வடிவில், 20 கிலோ மற்றும் 50 கிலோ பாலித்தீன் பைகளில் கிடைக்கிறது. 

ஆகவே, சினையாடுகள், பாலூட்டும் ஆடுகள், வளர்ந்த ஆடுகள் மற்றும் இரண்டு மாதங்களைக் கடந்த குட்டிகளுக்கும், கிருஷி ஆட்டுத் தீவனத்தைத் தொடர்ந்து கொடுத்து வந்தால், ஆட்டுப்பண்ணை இலாபத்தை அளித்து, பண்ணையாளர்களின் வாழ்க்கையில் பொருளாதார மலர்ச்சியை ஏற்படுத்தும். மேலும் விவரங்களுக்கு: 04294-223466.


பசுமை

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

உங்கள் கருத்து?