My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

ஜப்பானிய காடை வளர்ப்பு!

Quail Farming

ப்பானிய காடை வளர்ப்பு இலாபம் தரும் தொழிலாகும். குறைந்த இடமும், குறைந்த முதலீடும் காடை வளர்ப்பின் சிறப்புகளாகும். நோய் எதிர்ப்புத் திறன் மிக்க காடைகளை இறைச்சிக்காக என்றால் 5-6 வாரங்களும், முட்டைக்காக என்றால் 52 வாரங்களும் வளர்க்க வேண்டும்.  

காடை இனங்கள்

நியூசிலாந்து காடை, சைனாக் காடை, கலிபோர்னியா காடை, ஜப்பானிய காடை, பாப் வெள்ளைக் காடை, மடகாஸ்கர் காடை, நியூகினியா மலைக்காடை எனப் பல வகைகள் உள்ளன. தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக் கழகமானது ஜப்பானிய காடைகளை அடிப்படையாக வைத்து, நந்தனம் 1, நந்தனம் 2, நந்தனம் 3, நாமக்கல் காடை 1, நாமக்கல் தங்கக் காடை ஆகிய இரகங்களை வெளியிட்டுள்ளது. இவற்றில் நாமக்கல் தங்கக் காடை முட்டைக்காக உருவாக்கப்பட்ட இனமாகும்.

வளர்ப்பு முறை

ஜப்பானிய காடைகளை ஆழ்கூள முறை, கூண்டு முறை, கலப்பு முறை என்று மூன்று முறைகளில் வளர்க்கலாம். இவற்றில், கூண்டுமுறை வளர்ப்பே சிறந்தது. ஆழ்கூள முறையில் ஒரு சதுர அடியில் ஐந்து காடைகளை வளர்க்கலாம். முதல் இரண்டு வாரம் வரையில் ஆழ்கூள முறையில் வளர்த்துப் பின் கூண்டுகளுக்கு மாற்றி வளர்ப்பதே சிறந்த பராமரிப்பு முறையாகும்.

தீவன மேலாண்மை
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

ஜப்பானிய காடைகளுக்கும் கோழித் தீவனத்தில் பயன்படுத்தப்படும் மூலப் பொருள்களே பயன்படுகின்றன. காடைக் குஞ்சுகளுக்கான தீவனம் 26-28% புரதமும், 2,800 கிலோ கலோரி எரிசக்தியும் கொண்டதாக இருக்க வேண்டும். இந்தத் தீவனத்தை 2 வாரம் வரை கொடுக்கலாம். இறைச்சிக் கோழிக்கான ஆரம்பக்காலத் தீவனம் 75 கிலோவுடன், 5 கிலோ வீதம் புண்ணாக்குத் தூளைக் கலந்து கொடுக்கலாம். இந்தத் தீவனக் கலவையில் தானியங்கள் பெரிதாக இருந்தால், மீண்டும் ஒருமுறை அரைத்துக் கொடுக்கலாம்.

இப்படித் தீவனத்தைக் கலந்து கொடுக்கும் போது, தேவையான புரதம், எரிசக்தி, தாதுப்புகள் உள்ளனவா என்பதை ஆய்வு மூலம் அறிந்து அளிக்க வேண்டும். ஆறு வாரம் வரையில் ஒரு காடை 400-500 கிராம் தீவனத்தை உண்ணும். ஆண் காடை 150-190 கிராம், பெண் காடை 180-210 கிராம் எடையை அடைந்த பிறகு விற்பனை செய்ய வேண்டும். சிறிய தட்டுகளில் சுத்தமான நீரைக் கொடுக்க வேண்டும்.

இனப் பெருக்கம்

ஒரு ஆணுடன் 2-3 பெண் காடைகளை இனச் சேர்க்கைக்கு விடலாம். ஏழாவது வாரத்தில் முட்டையிடத் தொடங்கும். பத்தாவது வாரத்தில் முட்டையிடும் தன்மை தீவிரமாகும். மாலையில் தான் முட்டைகளை இடும். முட்டையின் எடை 10 கிராம் இருக்கும். முட்டையின் மேல் பழுப்பு, கறுப்பு, நீலப் புள்ளிகள் இருக்கும்.  அடை வைக்கும் முட்டைகளை ஒரு வாரத்துக்கு மேல் சேர்த்து வைக்கக் கூடாது. அடை வைத்த 18 நாளில் முட்டைகள் பொரிந்து விடும். கோடையில் முட்டைகளைக் குளிர்ந்த சூழலில் சேமித்து வைக்க வேண்டும்.

குஞ்சுகள் பராமரிப்பு

காடைக் குஞ்சுகள் வளர்ப்பிடம் புரூடர் எனப்படும். இது ஒரு அடி உயரத்தில் வட்டமாக அட்டைகளால் அடைக்கப்பட்ட சிறிய பகுதியாகும். இங்கே, 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தை அளிக்க வேண்டும். இதை மின்விளக்கு மூலம் கொடுக்கலாம். தரையில் செய்தித்தாள் அல்லது காகிதத்தை விரித்து விட்டு அதன் மேல் குஞ்சுகளை வளர்க்க வேண்டும். இந்தத் தாளை அன்றாடம் மாற்ற வேண்டும். ஒரு குஞ்சுக்கு 75 சதுர செ.மீ. இடம் வேண்டும். தீவனம் மற்றும் குடிநீர்த் தட்டு 1.5-2 செ.மீ. உயரத்தில் இருக்க வேண்டும்.

ஒளி மேலாண்மை

ஜப்பானிய காடைகள் இனப்பெருக்க வயதை விரைவில் அடைய ஒரு நாளைக்கு 14-18 மணி நேரம் ஒளி கிடைக்க வேண்டும். இறைச்சிக்காக வளர்க்கும் போது ஒரு நாளைக்குச் சுமார் 8 மணி நேரம் ஒளி கிடைத்தால் காடையின் எடை கூடும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

நல மேலாண்மை

தாய்க்காடைகளுக்குப் போதுமான தாதுப்புகள், வைட்டமின்கள் கிடைக்கா விட்டால், கால்கள் வலுவற்ற மற்றும் நோஞ்சான் குஞ்சுகள் அதிகமாக உற்பத்தியாகும். காடைகளுக்கு, நுண்ணுயிர் நோய்களான, தொப்புள் ஒவ்வாமை, ஈகோலி நோய், கழிச்சல் மற்றும் காளான் நோய், நுரையீரல் ஒவ்வாமை, இராணிக்கெட், அம்மை போன்றவை ஏற்படலாம். இருப்பினும், கோழிகளை விட, ஜப்பானிய காடைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம்.

எனவே, முறையான தடுப்பு மருந்துகள் இதுவரை காடைகளுக்குத் தேவைப்படவில்லை. ஆகையால், போதுமான வெப்பம், குளிரிலிருந்து பாதுகாப்பு, முறையான கிருமி நீக்கம், சுத்தமான குடிநீர், தரமான கலப்புத் தீவனம் ஆகியவற்றைக் குஞ்சுகளுக்கு அளித்தால், காடைகளில் இறப்புகளைக் குறைத்து அதிக இலாபத்தை ஈட்டலாம்.

காடை இறைச்சியில் மதிப்பூட்டப்பட்ட பொருள்கள்

ஒரு காடையிலிருந்து 65-75% இறைச்சி கிடைக்கும். அதாவது, சுமார் 200 கிராம் காடையைச் சுத்தம் செய்தால் 140 கிராம் இறைச்சி கிடைக்கும். இந்த இறைச்சியில் அதிகளவில் 20.5% புரதமும், குறைந்தளவில் 5.8% கொழுப்பும் இருப்பதால், எல்லா வயதினருக்கும் ஏற்ற உணவாகக் கருதப்படுகிறது.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

சுவையுள்ள ஜப்பானிய காடை இறைச்சி பலவகை உணவு முறைகளில் பயன்படுகிறது. குறிப்பாக, தந்தூரி உணவுகளில் இதன் பயன்பாடு அதிகம். காடை முட்டையை வைட்டமின் பாம் (vitamin bomb) என அழைப்பதில் இருந்து, இதன் சிறப்பை அறியலாம். காடை முட்டை ஊறுகாய், பஜ்ஜி, கேக் போன்றவற்றைத் தயாரித்து நல்ல வருமானத்தை அடையலாம்.

ஒரு முட்டையின் விலை ரூ.1.50-2 வரையில் உள்ளது. ஒரு முட்டைக்கான உற்பத்திச் செலவு ரூ.1.00-1.25 ஆகும். ஆக ஒரு முட்டைக்கு ரூ.0.25-0.50 வீதம் இலாபம் கிடைக்கும். ஒருநாள் காடைக்குஞ்சின் விலை ரூ.6. இது சாப்பிடும் தீவனம் 500 கிராம். இதற்கான விலை ரூ.15. மற்ற செலவுகள் ரூ.2. ஆக மொத்தச் செலவு ரூ.23. ஒரு ஜப்பானிய காடை ரூ.30 வரையில் விற்கப்படுகிறது. நிகர இலாபமாக ஒரு காடை மூலம் ரூ.7 கிடைக்க வாய்ப்புள்ளது.     


ஜப்பானிய காடை வளர்ப்பு! Dr. V. Kumaravel e1634318731158 https://pachaiboomi.net/65464-5/

மருத்துவர் .குமரவேல்

முனைவர் சு.செந்தூர்குமரன், வேளாண்மை அறிவியல் நிலையம், குன்றக்குடி, சிவகங்கை மாவட்டம்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

உங்கள் கருத்து?

மேலும் படிக்கலாம்:

  • நிலையான மற்றும் கூடுதல் பால் உற்பத்திக்கான வழிமுறைகள்!

  • கறவை மாடுகளின் சூலகத்தில் உருவாகும் நீர்க்கட்டிகள்!

  • கறவை மாடுகளில் ஏற்படும் மலட்டுத் தன்மைக்கான காரணிகள்!

  • எருமைகளில் சினைப்பருவ நிர்வாகம்!

  • கறவை மாடுகளில் ஏற்படும் கருச்சிதைவு நோய்!

  • கறவை மாடுகளுக்கு அடர் தீவனம் அளிப்பது எப்படி?

  • ஆடுகளுக்குத் தீமை செய்யும் பார்த்தீனியம்!

  • கோழிப் பண்ணைக்கான இடத்தேர்வும் பண்ணை அமைப்பும்!

  • வளர்கோழிப் பராமரிப்பு முறைகள்!