My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

சிட்ரொனெல்லா வாசனைப் புல் சாகுபடி!

சிட்ரொனெல்லா வாசனைப் புல் சாகுபடி! Citronella grass cultivation https://pachaiboomi.net/5465-23/

சிட்ரொனெல்லாவின் அறிவியல் பெயர் Cymbopogon nudrus. இது, Poaceae குடும்பத்தை, Plantae என்னும் பெருங் குடும்பத்தைச் சார்ந்தது. இது, ஒருவகை வாசனைப் புல்லாகும். இதன் இலைகளில் இருந்து கிடைக்கும் வாசனை எண்ணெய், சோப்பு மற்றும் வாசனைத் திரவியங்கள் தயாரிப்பில், ஜெரேனியால், சிட்ரொனெல்லால் போன்ற வாசனை வேதிப் பொருள்கள் தயாரிப்பில், கொசு மற்றும் பூச்சிகளை அழிக்கும் பூச்சிக்கொல்லித் தயாரிப்பில் பயன்படுகிறது.

சிட்ரொனெல்லா இரகங்கள்

சிட்ரொனெல்லாவில் பையோ 13, மந்தாகினி, மன்ஜூஷா ஆகிய மேம்பட்ட இரகங்கள் உள்ளன. ஜாவா என்பது சாகுபடியில் இருக்கும் சிறந்த வகையாகும்.

மண்ணும் தட்ப வெப்பமும்

சிட்ரொனெல்லா எல்லா வகை மண்ணிலும் வளரும். ஆனாலும், மணல் கலந்த வண்டல் மண், கரிசல் மண் மிகவும் ஏற்றவை. சாகுபடி நிலம் நல்ல வடிகால் வசதியுடன் இருக்க வேண்டும். மண்ணின் கார அமில அளவு 6.6-8.0 வரை இருக்கலாம்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

சிட்ரொனெல்லா, வெப்ப மண்டல, மிதவெப்ப மண்டலத்தில் நன்றாக வளரும். மண்ணில் நல்ல ஈரமும் நல்ல வெய்யிலும் இருக்க வேண்டும். ஆண்டுதோறும் பரவலாக மழை பெய்யும் பகுதிகளில் மானாவாரிப் பயிராக இடலாம். பாசன வசதி இருந்தால் இறவைப் பயிராக இடலாம்.

இனப்பெருக்கம்

சிட்ரொனெல்லா வாசனைப் புல்லை, அதன் தூர்கள் மூலம் பயிர்ப் பெருக்கம் செய்யலாம். இவ்வகையில், ஏக்கருக்கு 15,000 தூர்கள் தேவைப்படும். சாகுபடி செய்ய ஜூன், ஜூலை மாதங்கள் ஏற்றவை. அதாவது, மழைக்காலத்தில் நட வேண்டும்.

நிலம் தயாரிப்பு

நிலத்தை நன்கு உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன் ஏக்கருக்குப் பத்து டன் தொழுவுரத்தை அடியுரமாக இட வேண்டும். அடுத்து, வரிசைக்கு வரிசை 60 செ.மீ. இடைவெளியில் பார்களை அமைத்து, 45 செ.மீ. இடைவெளியில் தூர்களை நட வேண்டும். நடவுக்கு முன், தூர்களில் உள்ள காய்ந்த வேர்கள் மற்றும் இலைகளை நீக்கிவிட வேண்டும்.

உரம்

ஏக்கருக்குப் பத்து டன் தொழுவுரத்தை அடியுரமாக இட வேண்டும். மேலும், 22 கிலோ யூரியா, 95 கிலோ சூப்பர் பாஸ்பேட், 24 கிலோ பொட்டாசையும் அடியுரமாக இட வேண்டும். அடுத்து, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை 22 கிலோ யூரியாவை மேலுரமாக இட வேண்டும்.

பயிர்ப் பராமரிப்பு

இந்தப் புல் நன்றாக வளர்ந்து நிலத்தை மூடி விடுவதால் களைகள் வளராது. நான்கு மாதங்களில் தூர்களில் மண்ணை அணைத்து விட வேண்டும். அடுத்து, ஒவ்வொரு அறுவடைக்குப் பிறகும் மண் அணைத்தல் அவசியமாகும். மழையற்ற காலத்தில் 7-10 நாட்களுக்கு ஒருமுறை பாசனம் செய்ய வேண்டும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

பயிர்ப் பாதுகாப்பு

சிட்ரொனெல்லா இலைகளைச் சிவப்புச் சிலந்திப் பூச்சிகள் தாக்கும். இதனால், இலைகள் மஞ்சளாக மாறுவதுடன் சுருண்டும் காணப்படும். இதைத் தவிர்க்க, ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. டைமெத்தோயேட் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

அறுவடை

ஆறு மாதங்களில் முதல் அறுவடைக்கு வரும். பிறகு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யலாம். தரையில் இருந்து பத்து செ.மீ. உயரம் விட்டு விட்டு, அறுவடை செய்ய வேண்டும். நிழலில் ஒருநாள் உலர வைத்து, எண்ணெய்யை எடுக்கலாம். ஒருமுறை பயிரிட்டால், 3-4 ஆண்டுகள் மகசூலைத் தரும்.

மகசூல்

அறுவடை செய்த 24 மணி நேரத்தில் எண்ணெய்யை எடுத்து விட வேண்டும். ஒரு ஏக்கர் புல்லில் இருந்து 100-120 கிலோ எண்ணெய் கிடைக்கும்.


DR.K.PARAMESWARI

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

முனைவர் கா.பரமேஸ்வரி,

இணைப் பேராசிரியர், பட்டு வளர்ப்பியல் துறை, வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம், கோவை மாவட்டம்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • மகசூல் உற்பத்தியில் தேனீக்களின் பங்கு!

  • பெரோமோன் மற்றும் ஒட்டும் பொறிகள் மூலம் பூச்சி மேலாண்மை!

  • வெற்றியைத் தரும் வெட்டிவேர் சாகுபடி!   

  • பால் தந்தால் தான் தரமான தீவனம் தருவீர்களா?

  • இயற்கை வேளாண்மை என்றால் என்ன?

  • விவசாயத்தில், திட்டமிடல், முதலீடு, உழைப்பு அவசியம்!

  • பயிர்களுக்குப் பயன்படும் மண்புழுக் குளியல் நீர்!

  • புண்ணாக்கு வகைகளில் உள்ள சத்துகள்!

  • தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை 2026-2027!