My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

ஆடுகளுக்குத் தீமை செய்யும் பார்த்தீனியம்!

ஆடுகளுக்குத் தீமை செய்யும் பார்த்தீனியம்! Parthenium banner https://pachaiboomi.net/5795005-2/

பார்த்தீனியம் என்பது, வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் மேயும் பகுதிகளில் காணப்படும் தீய களைச்செடி ஆகும். இதனால், ஆடுகள் எப்படியெல்லாம் பாதிக்கப்படும் என்று பார்க்கலாம்.

மேய்ச்சல் நிலங்களில் பார்த்தீனியச் செடிகள் அதிகமாக இருந்தால், இவற்றை ஆடுகள் தவறுதலாக உண்ண நேரலாம். அப்போது, இந்தச் செடிகளில் உள்ள பார்த்தீனியம் என்னும் வேதிப்பொருளால் நச்சுத்தன்மை மற்றும் உடல்நலப் பாதிப்பு ஏற்படலாம்.

தீவனம் எடுப்பதில் ஏற்படும் சிக்கல்கள்

  • ஆடுகளுக்குப் பசியின்மை ஏற்படும்.
  • தீவனம் எடுக்கும் அளவு குறையும்.
  • ஆடுகளின் உடல் எடை குறையும்.
  • ஆடுகளின் உடல் வளர்ச்சிப் பாதிக்கப்படும்.
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

செரிமானத்தில் ஏற்படும் சிக்கல்கள்

  • வயிற்று எரிச்சல் ஏற்படலாம்.
  • செரிமானத்தில் சிக்கல் ஏற்படலாம்.
  • வயிற்றுப்போக்குப் போன்ற பாதிப்பு ஏற்படலாம்.

கல்லீரல், சிறுநீரகம் பாதிப்படைதல்

  • நீண்ட காலம் பார்த்தீனியச் செடிகளை உண்டால், உடல் உறுப்புகளில் பாதிப்பு ஏற்படலாம்.
  • குறிப்பாக, கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படலாம்.

பால் உற்பத்திக் குறைதல்

  • பால் தரும் ஆடுகள் குறைவாகத் தீவனம் எடுப்பதால், பால் உற்பத்திக் குறையலாம்.
  • உடல்நிலை மற்றும் உற்பத்தித் திறன் பாதிக்கப்படலாம்.

பிற பாதிப்புகள்

  • வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் பலவீனம் அடையலாம்.
  • அவற்றின் வளர்ச்சிக் குன்றலாம்.
  • பார்த்தீனியத்தின் நீண்டகால நச்சுத் தன்மையால், தீவிர உடல்நலப் பாதிப்பு ஏற்படலாம்.

களைக்கட்டுப்பாடு

  • பார்த்தீனியச் செடிகள் பூப்பதற்கு முன்பே அவற்றைப் பிடுங்கி அழித்து விட வேண்டும்.
  • செடிகளில் விதைகள் உருவாகும் முன் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமாகும்.

பாதுகாப்பான தீவனம்

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

  • ஆடுகளுக்கு, பார்த்தீனியம் கலக்காத தரமான பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனத்தை அளிக்க வேண்டும்.
  • களை விதைகள் கலந்த தீவனத்தைத் தவிர்க்க வேண்டும்.

மேய்ச்சல் மேலாண்மை

  • பார்த்தீனியம் அதிகமாக இருக்கும் இடங்களில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளை மேயவிடக் கூடாது.
  • மேய்ச்சல் நிலங்களில் உள்ள பார்த்தீனியச் செடிகளைப் பிடுங்கி அகற்ற வேண்டும்.

ஒருங்கிணைந்த களை நிர்வாகம்

  • பார்த்தீனியச் செடிகளை அகற்றுவதில், இயந்திர முறை, கை முறை மற்றும் பொருத்தமான முறைகளைக் கையாள வேண்டும்.
  • பார்த்தீனிய விதை உற்பத்தியைத் தடுப்பது மிகவும் அவசியம்.

கால்நடை மருத்துவர் ஆலோசனை

  • ஆடுகள் பார்த்தீனியச் செடிகளை உண்டிருக்கலாம் என்னும் சந்தேகம் வந்தால், அவற்றை உடனே கால்நடை மருத்துவரிடம் காட்ட வேண்டும்.
  • ஆடுகளில் காணப்படும் அறிகுறிகளுக்கு ஏற்ப, சிகிச்சை அளிக்க வேண்டும்.

வேளாண்மை அறிவியல் நிலையம், காளசமுத்திரம், கள்ளக்குறிச்சி – 606 301.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்: