My page - topic 1, topic 2, topic 3
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

படைப்புழுக் கட்டுப்பாடு!

டைப்புழுக்களைக் கட்டுப்படுத்த, மக்காச்சோளத்தை விதைத்த 15-20 நாட்களில், அசடிராக்டின் 1 ஈசி மருந்தை பத்து லிட்டர் நீருக்கு 20 மில்லி அல்லது இமாமெக்டின் பென்சோயேட் 5 எஸ்.ஜி 4 கிராம் அல்லது நொவலூரான் 10 ஈ.சி. 15 மில்லி வீதம் கலந்து கைத்தெளிப்பான் மூலம் அல்லது பேட்டரியில் இயங்கும் நாப்சாக் தெளிப்பானால் ஏக்கருக்கு 100 லிட்டர் நீரைப் பயன்படுத்தித் தெளிக்க வேண்டும்.

மக்காச்சோளத்தை விதைத்த 40-45 நாட்களில், பத்து லிட்டர் நீருக்கு தயோடிகார்ப் 75 டபிள்யூ.பி 20 கிராம் அல்லது ஸ்பினிட்டோராம் 12 எஸ்.சி. 5 மில்லி அல்லது மெட்டாரைசியம் அனிசோபிலியே 80 கிராம் வீதம் கலந்து கைத்தெளிப்பான் மூலம் அல்லது பேட்டரியில் இயங்கும் நாப்சாக் தெளிப்பானால் ஏக்கருக்கு 200 லிட்டர் நீரைப் பயன்படுத்தித் தெளிக்க வேண்டும்.

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

மக்காச்சோளத்தை விதைத்த 60-65 நாட்களில், பத்து லிட்டர் நீருக்கு ப்ளுபென்டியாமைட் 480 எஸ்.சி. 9 மில்லி அல்லது குளோரன்ட்ரான்லிபுரோல் 18.5 எஸ்.சி. 5 மில்லி வீதம் கலந்து, கைத்தெளிப்பான் அல்லது பேட்டரியில் இயங்கும் நாப்சாக் தெளிப்பானால் ஏக்கருக்கு 200 லிட்டர் நீரைப் பயன்படுத்தித் தெளிக்க வேண்டும்.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!