My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

உயிர் உரங்களும் அவற்றை இடும் அளவுகளும்!

Biofertilizers

உயிர் உரங்கள் (Biofertilizers), பயிர்களுக்கு வேண்டிய சத்துகளைத் தருவதில் மற்றும் பயிர்களைப் பாதுகாப்பதில், முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவ்வகையில், அவற்றின் பயன்கள் குறித்தும், பயன்படுத்தும் அளவுகள் குறித்தும் இங்கே பார்க்கலாம்.

அசோஸ்பயிரில்லம் (Biofertilizers)

  • இது, பயிர்களுக்குத் தழைச்சத்தைத் தருகிறது.
  • இதை, ஏக்கருக்கு 3 கிலோ வீதம் பயன்படுத்த வேண்டும்.

பாஸ்போபாக்டீரியா

  • இது, மண்ணில் கரையாத நிலையில் உள்ள மணிச்சத்தைக் கரைத்துப் பயிர்களுக்குத் தருகிறது.
  • இதை, ஏக்கருக்கு 3 கிலோ வீதம் பயன்படுத்த வேண்டும்.

மைக்கோரைசா(வேம்)

  • இது, பயிர்களுக்கு வேண்டிய மணிச்சத்து, கந்தகச்சத்து, துத்தநாகச்சத்து, சுண்ணாம்புச் சத்து போன்றவற்றை நிலத்திலிருந்து எடுத்துக் கொடுக்கும்.
  • இதை, ஏக்கருக்கு 3 கிலோ வீதம் எடுத்துப் பயன்படுத்த வேண்டும்.
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

பொட்டாஷ் பாக்டீரியா

  • இது, மண்ணில் உள்ள அங்ககச் சத்தையும், (Biofertilizers) கிட்டாத நிலையில் உள்ள சாம்பல் சத்தையும், பயிர்களுக்கு எடுத்துக் கொடுக்கும்.
  • இதை, ஏக்கருக்கு 3 கிலோ வீதம் பயன்படுத்த வேண்டும்.

டிரைக்கோடெர்மா விரிடி

  • இது, பயிர்களின் வேர்களைத் தாக்கும் அழுகல் நோயைக் கட்டுப்படுத்தும்.
  • இதை, ஏக்கருக்கு 2 கிலோ வீதம் எடுத்து இட வேண்டும்.

சூடோமோனாஸ் புளோரசன்ஸ்

  • இது, பயிர்களைத் தாக்கும், இலைப்புள்ளி நோய், வாடல் நோய், அழுகல் நோய் மற்றும் கருகல் நோயைக் கட்டுப்படுத்தும்.
  • இதை, ஏக்கருக்கு 2 கிலோ வீதம் எடுத்துப் பயன்படுத்த வேண்டும்.

பிவேரியா பேசியானா

  • இது, பயிர்களைத் தாக்கும், காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்தும்.
  • இதை, ஏக்கருக்கு ஒரு கிலோ வீதம் பயன்படுத்த வேண்டும்.

வெர்ட்டிசீலியம் லக்கானி

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

  • இது, பயிர்களைத் தாக்கும், சாறு உறிஞ்சிப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும்.
  • இதை, ஏக்கருக்கு ஒரு கிலோ வீதம் பயன்படுத்த வேண்டும்.

பெசிலியோ மைசிஸ்

  • இது, பயிர்களைத் தாக்கும், நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தும்.
  • இதை, ஏக்கருக்கு 2 கிலோ வீதம் எடுத்துப் பயன்படுத்த வேண்டும்.

மஞ்சள் ஒட்டுப்பொறி

  • இது, பயிர்களைத் தாக்கும், வெள்ளை ஈக்கள் மற்றும் தத்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கும்.
  • இதை, ஏக்கருக்கு 15-20 வீதம் பயன்படுத்த வேண்டும்.

நீலநிற ஒட்டுப்பொறி

  • இது, பயிர்களைத் தாக்கும், வெள்ளை ஈக்கள் மற்றும் பறக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும்.
  • இதை, ஏக்கருக்கு 5-10 வீதம் பயன்படுத்த வேண்டும்.

இனக்கவர்ச்சிப் பொறி

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

  • இது, காய்கறிப் பயிர்கள் மற்றும் முருங்கையைத் தாக்கும் பழ வண்டுகளைக் கவர்ந்து அழிக்கும்.
  • இதை, ஏக்கருக்கு 6 வீதம் எடுத்துப் பயன்படுத்த வேண்டும்.

முக்கியக் குறிப்புகள்

  • இயற்கை இடுபொருள்களையும், (Biofertilizers)பயிர்ப் பாதுகாப்புப் பொருள்களையும் முடிந்தவரை கலக்கக் கூடாது.
  • பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், மீன் அமிலம், ஈயக்கரைசல் ஆகிய இயற்கை இடுபொருள்களை; அசோஸ்பயிரில்லம், பாஸ்போபாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா ஆகிய உயிர்வழிக் கரைசல்களுடன் கலந்து மண்ணில் இடலாம். அதே நேரத்தில் இந்தப் பொருள்களில் வேப்பம் புண்ணாக்கைச் சேர்க்கக் கூடாது.
  • திரவநிலை உயிர்வழிப் பாதுகாப்புப் பொருள்களான வெர்ட்டிசீலியம் லக்கானி, பிவேரியா பேசியானா, பேசில்லஸ் துருஞ்சியன்ஸ் ஆகியவற்றுடன், அசோஸ்பயிரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியாவைக் கலக்கக் கூடாது.
  • முடிந்தவரை, பயிர்ப் பாதுகாப்புப் (Biofertilizers) பொருள்களைத் தனியாகவே பயன்படுத்த வேண்டும். பாக்டீரியா சார்ந்த பொருள்களை மண்ணில் பயன்படுத்த வேண்டும்.

–வேளாண்மைத்துறை


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • உயிரியல் நுண்ணறிவுடன் கூடிய அறிவுசார் வேளாண்மை!

  • நன்மை செய்யும் ஒட்டுண்ணிகள்!

  • நெல் தன் வரலாறு கூறுதல்!

  • தென்னையில் ஊடுபயிர்கள்!

  • குறைந்த செலவிலான கால்நடைத் தீவனம் அசோலா!

  • நம்பிக்கையும் அறிவியலும் சந்திக்கும் ஆடிப்பட்டம்!

  • பசுந்தீவன உற்பத்திக்கு உதவும் மழைத் துப்பாக்கிப் பாசனம்!

  • பயிர் வளர்ச்சி மற்றும் கூடுதல் மகசூலுக்கு உதவும் இலைவழி உரமிடல்!

  • தென்னை சாகுபடியில் உர மேலாண்மை!