விவசாயிகள், தங்களின் சாகுபடிப் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ள உதவும் வகையில், புதிய பயிர்க்கடன் திட்டம் ஒன்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
திட்டத்தின் பெயர்: இணையவழிப் பயிர்க்கடன் வழங்கும் திட்டம்
தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, அவர் இதைத் தொடக்கி வைத்தார். இதன்மூலம், இனிப் பயிர்க்கடன் வேண்டி விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு, விண்ணப்பித்த அன்றே கடன் கிடைத்துவிடும்.
தருமபுரியைத் தொடர்ந்து விரைவில் தமிழ்நாடு முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.
பயிர்க்கடன் திட்டத்தின் சிறப்பம்சங்கள்
விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் கிடைத்துவிடும்.
அதிகபட்சம் 5 இலட்சம் ரூபாய் வரைக் கடன் கிடைக்கும்.
கடனைச் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தினால், அரசு சார்பில் வட்டி மானியம் மற்றும் ஊக்கத் தொகை வழங்கப்படும்.
எங்கு விண்ணப்பிக்கலாம்?
அருகில் உள்ள வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது தனியார் வங்கிகள்.
உழவன் செயலி அல்லது வங்கிகளின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள்.
தேவையான ஆவணங்கள்
அடங்கல் / இ-அடங்கல், சிட்டா.
ஆதார் அட்டை.
வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல்.
பயிர்க்கடன் நிபந்தனைகள்
விண்ணப்பதாரர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
சொந்தமாக நிலம் இருக்க வேண்டும் அல்லது குத்தகைதாரராக இருக்கலாம்.
ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்கும் விவசாயிக்கு, 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஏற்கனவே பெற்றுள்ளக் கடன்களை முறையாகச் செலுத்தியிருக்க வேண்டும்.
இந்தியாவிலேயே முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், விவசாயிகளுக்கு உடனடி நிதியுதவியைக் கிடைக்கச் செய்து, சாகுபடிப் பணிகள் இனி தொய்வின்றி நடைபெற உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.