My page - topic 1, topic 2, topic 3
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

நிலமற்ற வேளாண் தொழிலாளர் நலப் பாதுகாப்பு அதிகரிப்பு: விபத்து மரண இழப்பீடு ₹2 இலட்சம்!

வேளாண் தொழிலாளர்

நிலமற்ற வேளாண் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்த தமிழ்நாடு அரசு, அவர்களுக்கான நிதி மற்றும் நிவாரண உதவிகளை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது.

பெரும்பாலும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்கள், பயிர்ப் பராமரிப்புச் சமயங்களில் கிடைக்கும் வேலைகளை செய்துகொண்டு வாழ்வாதாரத்தைப் பார்த்துக் கொள்கிறார்கள்.

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

இந்த நிலையில் எதிர்பாராத இயற்கைப் பேரிடர்கள் மற்றும் பருவநிலை மாற்றங்களால், சில நேரங்களில் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகி விடுகின்றன. எனவே அவர்களின் குடும்ப நலனையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு, ஏற்கனவே வழங்கி வந்த நிதியுதவிகளை உயர்த்தி அறிவித்து இருக்கிறது.

பழையத் தொகை – புதியத் தொகை

  • விபத்து மரணத்துக்கான இழப்பீடு: ரூ.1,00,000 → ரூ.2,00,000

  • உடல் உறுப்பு இழப்பு ஏற்பட்டால்: ரூ.20,000 → ரூ.1,00,000 

  • இயற்கை மரணத்துக்கான நிவாரணம்: ரூ.20,000 → ரூ.30,000

  • இறுதிச் சடங்குக்கான நிதியுதவி: ரூ.2,500 → ரூ.10,000

திட்டத்தின் நோக்கம்

இந்த நிதி உயர்வுகள், கிராமப்புற – நிலமற்ற வேளாண் தொழிலாளர்களின் வாழ்வை மேம்படுத்துவதோடு, எதிர்பாராத நிகழ்வுகளால், அவர்களின் குடும்பம் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியைச் சமாளிக்க உதவுகிறது. இதன்மூலம், தொழிலாளர்களின் குடும்ப நலனும் சமூக பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது.

இதர அரசு திட்டங்கள்…

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!