My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

பப்பாளியில் நூற்புழு மேலாண்மை!

பப்பாளியில் நூற்புழு மேலாண்மை! PapayaFarming https://pachaiboomi.net/5646-21/

ப்பாளிப் பயிரைத் தாக்கும் மிக முக்கியமான நூற்புழுக்களான, வேர் முடிச்சு மற்றும் மொச்சை வடிவ நூற்புழுக்கள், விதைகளின் முளைப்புத் திறனையும், செடிகளின் வளர்ச்சியையும் குறைக்கும். இலைகள் வெளிர் மஞ்சள் நிறத்திலும், வேர்கள், மணிகள் கோர்த்ததைப் போன்ற தோற்றத்திலும் காணப்படும். மேலும், பாதிக்கப்பட்ட வேர்களில், நீர் மற்றும் சத்துகளை உறிஞ்சும் திறன் குறைந்து, இலைகளின் வெப்பநிலை அதிகமாகும். எனவே, இதை ஈடு செய்ய முடியாமல் செடிகளில் நீராவிப்போக்கு ஏற்படும்.

இதனால், ஒளிச்சேர்க்கைக்கு முக்கியமான, வளிமண்டல கார்பன் டை ஆக்சைடு வாயுவை எடுக்க முடியாமல், பச்சையம் குறைந்து, குறைவான ஒளிச்சேர்க்கையே நடைபெறும். எனவே, பழங்களின் எண்ணிக்கை குறைவதுடன், அவற்றின் வடிவமும் சிறுத்து விடுவதால், ஒரு செடிக்கு 10 முதல் 14 கிலோ வரை, பழ மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

தீர்வு: எனவே, இந்த நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த, நோயெதிர்ப்புத் திறனுள்ள கோ.1 இரகத்தைப் பயிரிடலாம். நாற்றுகளைத் தயாரிக்கத் தேவையான மண்ணை, நெடுநாள் வெய்யிலில் காய வைத்துப் பயன்படுத்தலாம். நாற்றுகள் உள்ள நெகிழிப் பைகளில், ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் வீதம் கலந்த, காப்பர் ஆக்சி குளோரைடு கரைசல் 25 மி.லி. மற்றும் 3 சதவீத பியூரிடான் குருணை மருந்து 1 கிராம் வீதம் கலந்து, நாற்றங்காலில் இட வேண்டும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும், குழிகளை எடுத்துக் கன்றுகளை நடுவதற்கு முன்பும் மற்றும் பூக்கள் பூக்கும் போதும், எக்டருக்கு 33 கிலோ, மூன்று சதவீத பியூரிடான் குருணை மருந்து வீதம் இட்டு, உயர் விளைச்சலைப் பெறலாம்.


பப்பாளியில் நூற்புழு மேலாண்மை! PSENTHILKUMAR e1755684928570 https://pachaiboomi.net/5646-21/

முனைவர் ப.செந்தில் குமார்,

முனைவர் க.நாகேஸ்வரி, முனைவர் பி.செந்தில் முருகன், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், ஏற்காடு, சேலம் மாவட்டம்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • ஆண்டு முழுவதும் பயன் தரும் தீவனப் பயிர்கள்!

  • மானாவாரிக்கு ஏற்ற புதிய வீரிய ஒட்டு மக்காச்சோளம்!

  • தர்ப்பூசணியில் அதிக மகசூலுக்கான வழிமுறைகள்!

  • நெற்பயிரைத் தாக்கும் நோய்களும் அவற்றுக்கான தீர்வுகளும்!

  • குறைந்த நீரில் கை கொடுக்கும் சிறுதானியங்கள்!

  • மா சாகுபடி சிறக்க உதவும் உயிர் உரங்கள்!

  • பாரம்பரிய நெல் இரகங்களுக்கு ஏற்ற பட்டங்கள்!

  • மலர் சாகுபடியில் மனம் போல் காசு பார்க்கலாம்!

  • மிளகாய் சாகுபடி தொழில் நுட்பங்கள்!