My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மஞ்சள் பயிரில் நோய் மேலாண்மை!

மஞ்சள் பயிரில் நோய் மேலாண்மை! leaf spot in turmeric https://pachaiboomi.net/546-32/

தோட்டக்கலைப் பயிர்களில் மிகவும் முக்கியமானது மஞ்சள் பயிர். தமிழகத்தில் பல மாவட்டங்களில் பெரும்பாலும் இதைப் பயிரிடுகின்றனர். இந்தப் பயிரைத் தாக்கும் நோய்களான வேரழுகல், இலைப்புள்ளி, கருகல் ஆகியன, அதிக மகசூல் இழப்பை ஏற்படுத்தும். கிழங்கழுகல் மற்றும் வேரழுகல் நோயால் பாதிக்கப்பட்ட பயிரின் இலை நுனியில் தொடங்கும் வாடல், இலை முழுவதும் பரவுவதால், இலையானது கருகி விடும். வேர் மிகவும் சுருங்கி விடும்.

தீர்வு: இதைக் கட்டுப்படுத்த, இந்நோய்ப் பரவல் அதிகமாக இருக்கும் இடங்களில், மாற்றுப் பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும். நீர்த் தேக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். பாதிப்பு இல்லாத கிழங்குகளை விதையாகப் பயன்படுத்த வேண்டும்.

அடுத்து, இலைப்புள்ளி நோய் மிகவும் முக்கியமானது. இதனால், பாதிக்கப்பட்ட பயிரின் இலையின் இரு பகுதியிலும் உருண்டை அல்லது வட்டமான புள்ளிகள் சிறிய மற்றும் பெரிய வடிவில் காணப்படும். இரண்டு அல்லது மூன்று புள்ளிகள் சேர்ந்து ஒழுங்கற்ற வடிவத்தில் உருவாகிக் காய்ந்து இருக்கும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

தீர்வு: இதைக் கட்டுப்படுத்த, மஞ்சள் விதைக் கிழங்குகளை, 0.25 சதவீத காப்பர் ஆக்சி குளோரைடு கரைசலில் 2 நிமிடம் நனைத்து எடுத்து நட வேண்டும். நோயெதிர்ப்புத் திறனுள்ள டி.டி.எஸ்.டு.டி.எஸ்.4, டி.எஸ்.79, டி.எஸ்.88 ஆகிய இரகங்களைப் பயிரிட வேண்டும்.

அடுத்து, இலைக்கருகல் நோயால் பாதிக்கப்பட்ட இலைகளின் இரண்டு பக்கங்களிலும் 1-2 மி.மீ. அளவில் நிறையப் புள்ளிகள் தோன்றிக் கெட்டியாக மூடியிருக்கும். மேலும், இலைகளின் பச்சை நிறம், செம்பழுப்பு நிறமாக மாறி விடும். இலைகளில் உள்ள புள்ளிகள் ஒன்று சேர்ந்து, ஒழுங்கற்ற பெரிய புள்ளியாக மாறி விடும்.

தீர்வு: இந்நோயைக் கட்டுப்படுத்த, நிலத்தைச் சுத்தமாக வைக்க வேண்டும். இருபது நாட்கள் இடைவெளியில், 0.1 சதவீத போர்டாக்ஸ் கலவை அல்லது 0.25 சதவீத காப்பர் ஆக்சி குளோரைடு அல்லது 0.2 சதவீத ஜனீப் மற்றும் மேங்கோசெப் மருந்தைத் தெளிக்கலாம். நோயெதிர்ப்புத் தன்மையுள்ள சைனா மற்றும் ஜாவெளி விதைக் கிழங்குகளைத் தேர்வு செய்து பயிரிட வேண்டும்.


மஞ்சள் பயிரில் நோய் மேலாண்மை! PSENTHILKUMAR e1755684928570 https://pachaiboomi.net/546-32/

முனைவர் ப.செந்தில் குமார்,

முனைவர் க.நாகேஸ்வரி, முனைவர் பி.செந்தில் முருகன், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், ஏற்காடு, சேலம் மாவட்டம்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • ஆண்டு முழுவதும் பயன் தரும் தீவனப் பயிர்கள்!

  • மானாவாரிக்கு ஏற்ற புதிய வீரிய ஒட்டு மக்காச்சோளம்!

  • தர்ப்பூசணியில் அதிக மகசூலுக்கான வழிமுறைகள்!

  • நெற்பயிரைத் தாக்கும் நோய்களும் அவற்றுக்கான தீர்வுகளும்!

  • குறைந்த நீரில் கை கொடுக்கும் சிறுதானியங்கள்!

  • மா சாகுபடி சிறக்க உதவும் உயிர் உரங்கள்!

  • பாரம்பரிய நெல் இரகங்களுக்கு ஏற்ற பட்டங்கள்!

  • மலர் சாகுபடியில் மனம் போல் காசு பார்க்கலாம்!

  • மிளகாய் சாகுபடி தொழில் நுட்பங்கள்!