My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

நூற்புழுக்களை எதிர்த்து வளரும் பயிர் இரகங்கள்!

நூற்புழுக்களை எதிர்த்து வளரும் பயிர் இரகங்கள்!

நூற்புழுக்கள் மண்ணில் மறைந்திருந்து பயிர்களுக்குச் சேதம் விளைவிக்கிறது. வேரில், முடிச்சுகள் ஏற்படுதல், அழுகல் ஏற்படுதல், வளர்ச்சிக் குன்றுதல், இலைகள் மஞ்சள் நிறமாகி உதிருதல் போன்றவை, நூற்புழுக்கள் தாக்கிய பிறகு தெரியும் அறிகுறிகளாகும்.

எனவே, இந்த நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த, பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன. நூற்புழுக் கொல்லிகள், எதிர் உயிரிகள், மண்ணை வெப்ப மூட்டுதல், கோடை உழவு செய்தல் போன்றவை சிறந்த முறைகளாகும். எனினும், இம்முறைகள் பணத்தைச் செலவிடும் முறைகளாகும். ஆனால், நோயெதிர்ப்புத் தன்மையுள்ள பயிர்களை சாகுபடி செய்தால், பண விரயம் இல்லாமல் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம். மேலும், நூற்புழுக்களின் வாழ்க்கைச் சுழற்சியையும் மட்டுப்படுத்தலாம்.

நெல் பயிரில், வெண்நுனி இலை நூற்புழு, வேர் நூற்புழுத் தாக்குதலைக் குறைக்க, டி.பி.எஸ்.1 மற்றும் டி.கே.எம்.9 போன்ற இரகங்களைத் தேர்வு செய்யலாம்.

வாழையில், வேரழுகல் மற்றும் வேர்த் துளைப்பான் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த, மட்டி இரகத்தைப் பயிரிடலாம்.

தக்காளியில் வேர் முடிச்சு நூற்புழுத் தாக்குதல் மிகையாக இருக்கும். இதைக் கட்டுப்படுத்த, ஹிஸார் லலித் என்னும் இரகத்தைப் பயிர் செய்யலாம்.

உருளைக் கிழங்கில், முட்டைக்கூடு நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த, குப்ரி சுவர்ணா இரகம் சிறந்ததாகும்.

பப்பாளியில், மொச்சை வடிவ நூற்புழுக்கள் மற்றும் வேர் முடிச்சு நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த, கோ.3, கோ.6 ஆகிய இரகங்களைப் பயிரிடலாம்.


நூற்புழுக்களை எதிர்த்து வளரும் பயிர் இரகங்கள்!

முனைவர் ப.செந்தில் குமார்,

முனைவர் ம.நெ.புத்தர், முனைவர் க.கிருஷ்ண சுரேந்தர், மண்டல ஆராய்ச்சி நிலையம், பையூர், கிருஷ்ணகிரி – 635 112.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

மேலும் படிக்கலாம்:

  • எல்-நினோ காலத்தில் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய உத்திகள்!

  • உணவுப் பொருள்களில் மறைந்திருக்கும் அஃப்ளாடாக்சின் நச்சு!

  • உலக மருத்துவ ஆய்வுகளில் கவனம் பெறும் பிரண்டை!

  • உயிர்ம வேளாண்மைச் சான்றைப் பெறுவது எப்படி?

  • மேலே மின்சார உற்பத்தி; கீழே பயிர் சாகுபடி!

  • நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முறைகள்!

  • சம்பா மற்றும் தாளடிக்கான நெல் இரகங்கள்!

  • ஜப்பானிய காடை வளர்ப்பு – 1

  • ஜப்பானிய காடை வளர்ப்பு முறை!