My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

பசுமைக் குடிலில் நூற்புழுக்கள் நிர்வாகம்!

பசுமைக் குடிலில் நூற்புழுக்கள் நிர்வாகம்! Greenhouse for nematode https://pachaiboomi.net/54654-6/

சுமைக்குடில் சூழலில் சாகுபடி செய்வது, வேளாண் பெருமக்களிடம் அதிகரித்து வருகிறது. இம்முறையில், செடிவகைக் காய்கறிகள், கொடிவகைக் காய்கறிகள், கொய்மலர்கள் ஆகியவற்றை சாகுபடி செய்து அதிக மகசூலைப் பெறலாம்.

ஆனால், இந்தச் சூழ்நிலையில், நூற்புழுக்கள் பல்கிப் பெருகப் பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றில், கோடையுழவு செய்ய முடியாத நிலையும், பயிற்சுழற்சி முறையைப் பின்பற்ற இயலாமையும் முக்கியமானவை. சொட்டுநீர்ப் பாசன முறையைக் கையாள்வதால், ஈரப்பதம் வேரைச் சுற்றியே இருக்கும். இது, நூற்புழுக்கள் பெருகிட ஏற்ற சூழ்நிலையாகும். குறிப்பிட்ட இடத்தில் வேர்களின் வளர்ச்சி அதிகளவில் இருப்பது, நூற்புழுக்களுக்கு ஏதுவான நிலையாகும்.

நூற்புழுக்கள் மட்டுமின்றி, இதர பூசணங்களும் ஒரே இடத்தில் பல்கிப் பெருகுவதால், பயிர்கள் எளிதாக நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகும். மேலும், தொடர்ந்து குறிப்பிட்ட மருந்துப் பொருளையே பயன்படுத்துவதால், நோய்க்காரணிகள், இரசாயனக் கொல்லிகளை எதிர்த்து நிற்கும் திறனைப் பெற்று விடுகின்றன.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

அறுவடைக்குப் பிறகு, வேர், கிழங்கு போன்ற கழிவுகளை அகற்றாமல் விடுவதால், பசுமைக் குடில்களில் நூற்புழுக்களின் தாக்கம், சற்று மிகையாகத் தென்படும். குடிலில் நிலவும் மேலான வெப்பம், நிலையான ஈரப்பதம், பயிருக்கு இடும் மிகையான உரம் போன்றவை, நூற்புழுக்கள் பெருகிட உகந்தவையாக இருக்கும்.

இந்தச் சூழ்நிலையை மாற்ற முடியாது. ஆனால், நூற்புழுக்களை எளிதாக மேலாண்மை செய்யலாம். மண் கலவையை முறையாகப் பரிசோதனை செய்தல், ஏக்கருக்கு 12.5 டன் மட்கிய தொழுவுரம் இடுதல், கேந்திச் செடிகளைப் பயிரிட்டு, ஒன்று அல்லது மூன்று மாதங்களில் மடக்கி உழுதல் மற்றும் எக்டருக்கு 250 கிலோ வீதம் வேப்பம் புண்ணாக்கை இடுதல் மூலம், நுற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

மேலும், பண்ணைக் கருவிகளைத் தூய்மையாகப் பராமரித்தல், நூற்புழுக்கள் தாக்காத நாற்றுகளை நடுதல், நூற்புழுக்களுக்கு எதிர்ப்புத் தன்மையுள்ள பயிர்களைப் பயிரிடுதல், மற்றும் நூற்புழுக்கள் மிகுதியாக இருக்கும் நிலையில், எக்டருக்கு 33 கிலோ வீதம் கார்போபியூரான் குருணை மருந்தை இடுதல் மூலம், பசுமைக்குடிலில் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த முடியும்.


பசுமைக் குடிலில் நூற்புழுக்கள் நிர்வாகம்! PSENTHILKUMAR e1755684928570 https://pachaiboomi.net/54654-6/

முனைவர் ப.செந்தில் குமார்,

முனைவர் ம.நெ.புத்தர், முனைவர் க.கிருஷ்ண சுரேந்தர், மண்டல ஆராய்ச்சி நிலையம், பையூர், கிருஷ்ணகிரி – 635 112.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • ஆண்டு முழுவதும் பயன் தரும் தீவனப் பயிர்கள்!

  • மானாவாரிக்கு ஏற்ற புதிய வீரிய ஒட்டு மக்காச்சோளம்!

  • தர்ப்பூசணியில் அதிக மகசூலுக்கான வழிமுறைகள்!

  • நெற்பயிரைத் தாக்கும் நோய்களும் அவற்றுக்கான தீர்வுகளும்!

  • குறைந்த நீரில் கை கொடுக்கும் சிறுதானியங்கள்!

  • மா சாகுபடி சிறக்க உதவும் உயிர் உரங்கள்!

  • பாரம்பரிய நெல் இரகங்களுக்கு ஏற்ற பட்டங்கள்!

  • மலர் சாகுபடியில் மனம் போல் காசு பார்க்கலாம்!

  • மிளகாய் சாகுபடி தொழில் நுட்பங்கள்!