My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

நீரின் அருமை!

Water Recovery

முந்நூற்று அறுபது கோடி ஆண்டுகளாக நிலத்தில் சேகரிக்கப்பட்ட நீரை, வெறும் முந்நூறு ஆண்டுகளில் மனிதர்கள் தீர்த்து விட்டார்கள். மழை நிச்சயமில்லை என்னும் நிலை ஏற்பட்டு விட்டதால், நீராதாரங்களை உயிர்ப்பித்தாக (Water Recovery) வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

குடிநீர்ப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி மேலும் மேலும் ஆழ்துளைக் கிணறுகளை அமைக்கத் தேவையில்லை. ஏற்கெனவே, பயனற்றுக் கிடக்கும் ஆழ்துளைக் கிணறுகளை உயிர்ப்பித்து நீரைப் பெற முடியும். இதைப் போல் வறண்டு கிடக்கும் ஏரிகளையும் உயிர்ப்பித்து (Water Recovery) விவசாயத்தைச் செழிக்க வைக்கலாம் என்கிறார், பெங்களூரைச் சேர்ந்த பொறியியல் வல்லுநர் ஐயப்ப மசாகி.

சாக்கடைக் கழிவுநீரை நிலத்தில் 20 அடிக்குக் கீழே கொண்டு சென்று விட்டால் போதும். மண் அடுக்குகளே அதைச் சுத்திகரித்து விடும். இந்தியாவில் சராசரியாகப் பெய்யும் ஆண்டு மழையளவு குறையவில்லை. ஆனால், மழை பெய்யும் காலமும், இடமும் மாறியிருக்கின்றன. குறிப்பிட்ட சில பகுதிகளில் அதிகளவு மழையும், சில பகுதிகளில் அறவே மழையே பெய்யாத நிலையும் தற்போது உள்ளது.

பூமியிலுள்ள 1.4 பில்லியன் கன கிலோ மீட்டர் நீர்ப்பரப்பில் 97% கடலில் உப்பு நீராக உள்ளது. பூமியிலுள்ள நன்னீரின் அளவு 36 மில்லியன் கன கிலோ மீட்டர் பரப்பாகும். இதில், 28 மில்லியன் கன கிலோ மீட்டர் பரப்பிலுள்ள நீர் உறைந்த நிலையில் அண்டார்டிக் மற்றும் கீரீன்லாந்து பகுதிகளில் உள்ளது.

ஆறு, ஏரி, குளங்களில் நாம் பயன்படுத்தும் நிலையில் உள்ள நீரின் அளவு 0.5% தான். அதாவது, 8 மில்லியன் கன கிலோ மீட்டர் பரப்பாகும். பூமியின் பரப்பில் சுமார் 66% கடல்களால் சூழப்பட்டுள்ளது. பூமியிலுள்ள மொத்தக் கடல் நீரின் அளவில் பாதிக்கும் மேற்பட்ட நீர், பசிபிக் பெருங்கடலில் உள்ளது.

கடல் நீர், தட்பவெப்ப நிலை மாற்றத்துக்கு ஆதாரமாக விளங்குகிறது. கடல் உணவுப் பொருள்கள், உப்புகள், தாதுப் பொருள்கள், கடல்வாழ் உயிரினங்கள் ஆகியன கடல்களில் உள்ளன. அங்குள்ள உயிரினங்களில் 80%க்கும் அதிகமான உயிரினங்கள் இன்னும் கண்டறியப்படாமல் உள்ளன.

உயிரினங்கள் கடலிலிருந்து தான் உருவாயின. அதிகமான உயிரின வகைகள் கடலிலேயே உள்ளன. தாதுப்புகள், நீரில் கரையும் வாயுக்கள், கனிமங்கள் ஆகியன கடல் நீரில் இருப்பதால், பல்வேறு உயிரின வகைகள் வளர்ந்து பெருகும் சூழ்நிலை ஏற்படுகிறது.

வெப்ப நீரோட்டம் கடலின் மேற்பரப்பிலும், குளிர் நீரோட்டம் கடலின் அடிப்பகுதியிலும் ஆறுகளைப் போல ஓடிக் கொண்டே உள்ளன. இவை ஒன்றோடொன்று கலப்பதால் நிலப்பரப்பில் தட்ப வெப்பநிலை கட்டுக்குள் உள்ளது. மேலும், இவை தொடர்ந்து கடலின் அடிப்பகுதிக்குப் பிராண வாயுவை எடுத்துச் செல்லவும், மேல்மட்டத்துக்குச் சத்துப் பொருள்களைக் கொண்டு வரவும் உதவுகின்றன.

அட்லாண்டிக் பெருங்கடலில் ஓடும் கல்ஃப் வெப்ப நீரோட்டம், இங்கிலாந்தில் விவசாயப் பண்ணைகள் இயங்கவும், கனடாவில் துருவக் கரடிகள் வாழவும் காரணமாக அமைகிறது. கடல்களின் மேற்பரப்பு வெப்பம் 270 செல்சியஸ் முதல் – 10 செல்சியஸ் வரை உள்ளது. இதுவே காற்று, மழை காற்றழுத்தம், ஈரப்பதம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் காரணியாகும். வங்காள விரிகுடாவில் உண்டாகும் உயர்ந்த, தாழ்வான காற்றழுத்த மண்டலங்களால் தான், இந்தியாவின் பருவக் காற்றுகள் உருவாகின்றன.

உலகின் பல பகுதிகளில் தட்பவெப்ப நிலையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும், எல்நினோ விளைவுகள் பசிபிக் கடலில் உண்டாகும் வெப்பநிலை மாற்றத்தால் தான் நிகழ்கின்றன. 


பசுமை


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

மேலும் படிக்கலாம்:

  • எல்-நினோ காலத்தில் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய உத்திகள்!

  • இட்டேரி என்னும் காட்டுப் பாதை!

  • வண்ணத்துப் பூச்சிகளின் வகைகள்!

  • மரங்களை வளர்ப்போம்! மழைநீரைச் சேமிப்போம்!

  • வீராணம் ஏரி பிறந்த கதை!

  • அடர்த்திக் குறையும் இந்திய வனப் பகுதிகள்!

  • உடல் வலிவை, உள்ளத் தெளிவைத் தரும் சதுரகிரிப் பயணம்!

  • அழிந்து வரும் இந்திய வனப் பகுதிகள்!

  • பெருங்கடல் நீரோட்டங்களும் விளைவுகளும்!