My page - topic 1, topic 2, topic 3

நீரிழிவு நோய்க்கான எளிய சித்த மருத்துவம்!

நீரிழிவு நோய்க்கான எளிய சித்த மருத்துவம்!

ங்கே நீரிழிவு நோயைப் போக்க உதவும் எளிய மருத்துவ முறைகளைப் பற்றிப் பார்க்கலாம்.

தினமும் 1-3 தேக்கரண்டி வீதம், கோவைக்காய்ச் சாற்றைனை அருந்தி வரலாம்.

கேழ்வரகுக் கஞ்சி, அடை போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

தினமும் இருவேளை 2-4 கிராம் நாவல் கொட்டைப் பொடியை 50 மி.லி. வெந்நீரில் கலந்து குடித்து வரலாம்.

நிழலில் உலர்த்தித் தயாரித்த மாங்கொழுந்துப் பொடியை, தினமும் இருவேளை 1-3 கிராம் வீதம் நீரில் கலந்து பருகி வரலாம்.

தினமும் இருவேளை 4-10 கிராம் ஆவாரம் பட்டைப் பொடி வீதம் எடுத்து 30 நிமிடம் வெந்நீரில் ஊற வைத்துக் குடித்து வரலாம்.

தினமும் இருவேளை 5 கிராம் ஆலம்பட்டைப் பொடியை 50 மி.லி. நீரில் கலந்து பருகி வரலாம்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

தினமும் இருவேளை ஒரு கிராம் உலர் அத்திப்பழம் வீதம் எடுத்து நீரில் கலந்து பருகி வரலாம்.

மூங்கில் அரிசியைக் கஞ்சியாகக் காய்ச்சிக் குடித்து வரலாம்.

தினமும் இருவேளை 3 கிராம் கருஞ்சீரகப் பொடி 3 கிராம் வெந்தயப் பொடி வீதம் எடுத்துக் கலந்து உணவுக்கு முன் எடுத்துக் கொள்ளலாம்.

தினமும் 1-5 கிராம் கடல் அழிஞ்சிலில் நீரை விட்டு, கால் பங்காகச் சுண்டக் காய்ச்சி அருந்தி வரலாம்.

எளிய உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகாசனங்களைச் செய்து வரலாம்.


அயோத்திதாசப் பண்டிதர் தேசிய சித்த மருத்துவமனை, தாம்பரம் சானட்டோரியம்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும் படிக்கலாம்:

  • வெங்காயம் தரும் நன்மைகள்!

  • தும்பையின் மருத்துவப் பயன்கள்!

  • இரத்தப் போக்கைக் குணப்படுத்தும் வில்வம்!

  • மஞ்சளின் சிறப்புகள்!

  • முடக்கத்தான் கீரையின் பயன்கள்!

  • குப்பைமேனியின் மருத்துவக் குணங்கள்!

  • அறுகம்புல் மருத்துவக் குணங்கள்!

  • தூதுவளை மற்றும் கற்றாழையின் நன்மைகள்!

  • உணவாகி மருந்தாகி நலந்தரும் எள்!