My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

முட்டைக்குள் ஒளிந்திருக்கும் சிறப்புகள்!

முட்டைக்குள் ஒளிந்திருக்கும் சிறப்புகள்! P4240026 5f8e9f6a1c4d423da55ac23f0eb416dc https://pachaiboomi.net/9876-2/

கோழி முட்டை, சத்துகள் நிறைந்தது மட்டுமன்றி, கலப்படமே செய்ய முடியாத உணவுப் பொருளாகும். ஒரு நாளைக்கு 20 கோடி முட்டைகளை உற்பத்தி செய்யும் இந்தியா, முட்டை உற்பத்தியில் உலகில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் மட்டும் ஒரு நாளைக்கு 5 கோடி முட்டைகள் உற்பத்தி ஆகின்றன. ஆனாலும், ஓராண்டில் நாம் சாப்பிடுவது சுமார் 50 முட்டைகளை மட்டுமே. உலகச் சுகாதார நிறுவனமும், அகில இந்திய மருத்துவக் கழகமும், ஒரு மனிதன் ஆண்டுக்கு 180 முட்டைகளை உண்ண வேண்டும் என்கின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, மெக்சிகோ மக்கள், ஆண்டுக்கு 300-450 முட்டைகளை உண்கின்றனர்.

உலக முட்டை நாள்

இத்தாலியில் உள்ள போலோக்னா நகரில் 1964 இல் நடைபெற்ற இரண்டாவது பன்னாட்டு முட்டை மாநாட்டில், அகில உலக முட்டைக் கழகம் உருவானது. இது, ஆண்டுதோறும் முட்டைகளை மிகுதியாக உற்பத்தி செய்யும் பண்ணையாளருக்கு, அகில உலக முட்டை உற்பத்தியாளர் விருதை வழங்கிச் சிறப்பிக்கிறது.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

வியன்னாவில் 1996 இல், நடைபெற்ற அகில உலக முட்டைக் கழகத் தீர்மானப்படி, ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் இரண்டாம் வெள்ளிக் கிழமை, உலக முட்டை நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த முட்டைக் கழகத்தில் 55 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

முட்டையை உண்பதன் நன்மைகள்

முட்டையில் 210 மி.கி. கொழுப்பு உள்ளது. இதனால், இரத்தக் கொழுப்பு மிகுந்து உடல் எடை கூடும் என்னும் தவறான எண்ணம் மக்களிடம் உள்ளது. முட்டையில் உள்ள டயடரி கொழுப்புக்கும், இரத்தக் கொழுப்புக்கும், எவ்விதத் தொடர்பும் கிடையாது.

டயடரி கொழுப்பு, நேரடியாக உடலில் இரத்தக் கொழுப்பாக மாற்றப்படுவது இல்லை. ஆனால், இரத்தக் கொழுப்புக்கு, நமது உணவுப் பழக்கம், பயிற்சியின்மை மற்றும் மரபு சார்ந்த நோய்களே காரணம்.

கொழுப்பு என்பது, உடலிலுள்ள அனைத்துச் செல்களிலும் இருக்கும் கொழுப்பைப் போன்ற பொருளாகும். வைட்டமின் டி மற்றும் பித்த உப்புகள் உற்பத்திக்கு, கொழுப்பு அமிலங்கள் குடலில் சேர்வதற்கு, பாலியல் ஹார்மோன்கள் உற்பத்திக்கு, நரம்புகளைக் காப்பதற்கு, இந்தக் கொழுப்புப் பயன்படுகிறது.

வேக வைத்த முட்டை செரிப்பதற்கு 92 கலோரி செலவாகிறது, ஆனால், முட்டையில் 80 கலோரி தான் உள்ளது. இதனால், உடலிலிருந்து 12 கலோரி கூடுதலாகச் செலவாகிறது. எனவே, தேவையற்று இருக்கும் கொழுப்புக் கரைந்து உடல் பொலிவடையும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

நூறு கிராம் இறைச்சியில், 194 கலோரியும், 100 கிராம் பருப்பில் 350 கலோரியும் உள்ளன. ஆனால், 100 கிராம் முட்டையில் 160 கலோரி தான் உள்ளது. எனவே, முட்டையைச் சாப்பிட்டால் உடல் கனக்கும், உடல் சூடாகும் என்பதெல்லாம் தவறான கருத்தாகும். ஆகவே, ஒவ்வொருவரும் அரை முட்டை வீதம் தினமும் உண்ண வேண்டும்.

புரதமுள்ள முட்டையை, புற்றுநோய், சிறுநீரகச் சிக்கல் உள்ளோர் சாப்பிடலாம். இதிலுள்ள சுண்ணாம்பு, காயங்கள் விரைவில் ஆறவும், உடைந்த எலும்புகள் சீக்கிரம் சேரவும் பயன்படுகிறது.

லூடின், ஜீஜான்தீன் ஆகியன தசைத் தளர்ச்சியைத் தடுக்கும். உடலில் நோயெதிர்ப்பு சக்தியைக் கூட்ட, கண்புரை நோயைத் தடுக்க, எலும்புகளை வலுவாக்க, முட்டை உதவுகிறது.

ஒரு முட்டையில் 31 கிராம் புரதம், தேவையான 9 வகை அமினோ அமிலங்கள் உள்ளன. இதிலுள்ள 300 மைக்ரோ கிராம் கோலின், மூளை நன்கு செயல்பட, நரம்பு மண்டலம், இதயம் மற்றும் இரத்த ஓட்டம் சீராக இயங்க உதவுகிறது.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

முட்டையிலுள்ள கொழுப்பு 5 கிராம் மட்டுமே. அதிலும், நிறைவற்ற கொழுப்பு 1.5 கிராம் தான் உள்ளது. எனவே, ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகளைச் சாப்பிட்டால் கூட, உடல் பாதிக்கப்படாது என்பதோடு, சீராகவும் இருக்கும்.

முட்டையைத் தொடர்ந்து சாப்பிட்டால், இரத்த உறைவு வராது. இதனால், இரத்த ஓட்டம் சீரடைந்து, மாரடைப்பும் நெஞ்சுவலியும் தடுக்கப்படும். ஒரு வாரத்தில் 6 முட்டைகளைச் சாப்பிடும் பெண்களுக்கு, மார்பகப் புற்றுநோய் ஏற்படுவது 44 சதம் குறைந்து விடுகிறது.

முட்டையில் உள்ள கந்தகத்தால், முடியும், நகங்களும் நன்கு வளர்கின்றன. இதிலுள்ள லெசிதீன் அமினோ அமிலம், கல்லீரலின் செயலைக் கவனிப்பதுடன், இரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிவதையும் தவிர்க்கிறது.

சிறுநீரகக் கற்கள், பித்தப்பை கற்கள் ஏற்படுவதும் முட்டையால் தடுக்கப்படுகிறது. இதிலுள்ள மீதியோனைன் அமினோ அமிலம், நியூக்ளிக் அமில உற்பத்திக்குப் பயன்படுவதால் செல்கள் வளர்கின்றன.

சர்க்கரை மற்றும் இதய நோயாளிகள், தோல் நோயாளிகளுக்கு முட்டை சிறந்த உணவாகும். இதிலுள்ள போலிக் அமிலம் சிவப்பணு உற்பத்திக்கு உதவுகிறது. கரு நன்றாக வளர்ந்து குழந்தை நல்ல முறையில் பிறப்பதற்கு, கர்ப்பிணிகள் முட்டைகளை நிறைய உண்ண வேண்டும்.

புரதம் மிகுந்தும், கொழுப்புக் குறைந்தும் உள்ள முட்டையின் வெள்ளைக் கருவில், பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், காப்பர், ஜிங்க், இரும்பு ஆகிய சத்துகளும், ரிபோபிளேவின் நியாசின், பி12 வைட்டமின், போலியேட் மற்றும் கோலின் வைட்டமின்னும் உள்ளன.

முட்டை கெடுவதற்கான காரணங்கள்

அதிக வெப்பம், காற்றின் ஈரப்பதம் சரியின்றி இருத்தல், நுண்ணுயிரிகள், முட்டைகளைத் தவறாகக் கையாளுதல் ஆகியவற்றால் முட்டைகள் கெடுகின்றன. எனவே, முட்டைகளைப் பாதுகாக்க, முட்டை ஓடுகளை ஈரமான பஞ்சு அல்லது உப்புக் காகிதத்தால் சுத்தப்படுத்தலாம்.

ஒரு லிட்டர் நீரில், ஒரு கிலோ சுண்ணாம்பு, 225 கிராம் உப்பைச் சேர்க்க வேண்டும். பிறகு, இதை ஐந்து லிட்டர் நீரில் கலந்து வைக்க வேண்டும். பின்பு, தெளிந்த சுண்ணாம்பு நீரை வடித்து, அதில் முட்டைகளை 18 மணி நேரம் நன்கு மூழ்க வைத்து எடுத்தால், அறை வெப்ப நிலையில் 3-4 வாரங்கள் கெடாமல் இருக்கும்.

குளிர்ப்பதனக் கிடங்குகளில் சேமிக்கலாம். முட்டையின் அருகில் மல்லிகை, பெருங்காயம், வெங்காயம், பூண்டு போன்ற வாசனைப் பொருள்கள் மற்றும் அழுகும் பழங்களை வைக்கக் கூடாது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு

1980-81 ஆம் ஆண்டு கோழிப் பண்ணையர்க்கு இக்கட்டான காலமாகும். கோழித்தீவன மூலப் பொருள்கள் விலை 250 சதம் ஏறியது; முட்டை விலை மிகவும் குறைந்தது. இதனால் இந்தியா முழுவதும் 40 சதம் கோழிப் பண்ணைகள் மூடப்பட்டன.

இதையடுத்து, 1982 மே மாதம் 14 ஆம் தேதி டாக்டர் பி.வி.ராவ், இந்தியா முழுதுமுள்ள பண்ணையாளர்களைக் கூட்டி, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவைத் தொடக்கி வைத்தார்.

இக்குழுவில், 25,000க்கும் மேற்பட்ட பண்ணையாளர்கள் உள்ளனர். உலகில் இந்தளவில் எந்தச் சங்கமும் செயல்படவில்லை. இக்குழு, உள்ளூர்க் குழு, மண்டலக் குழு, நிர்வாகக் குழு என மூன்றடுக்கு முறையில் செயல்படுகிறது. எனது முட்டை, எனது விலை, எனது வாழ்க்கை என்னும் தத்துவத்தில் இயங்குகிறது.

இவ்வமைப்பின் பணிகள்

முட்டை விலையை முடிவு செய்தல். முட்டை இருப்பை, விற்பனையை முறைப்படுத்துதல். நாட்டிலுள்ள கோழிப் பண்ணையாளர்களை ஒருங்கிணைத்தல். வேலை வாய்ப்பைப் பெருக்குதல். முட்டை ஏற்றுமதிக்கு நடவடிக்கை எடுத்தல்.

தேவைப்படும் போது அரசின் உதவியோடு தீவனம் வாங்குதல். முட்டைகளை உண்பதால் ஏற்படும் நன்மைகளை, உடல் நலத்தைத் தெரிவிக்கும் வகையில், உலக முட்டை நாள் விழாக்களை நடத்துதல்.

முட்டைகளை நிறையச் சாப்பிடும் நிலை வர வேண்டும். ஆண்டுக்கு 150-200 முட்டைகளைச் சாப்பிட்டு உடல் நலத்தைக் காப்போம். ஒரு நாளைக்கு ஒரு முட்டை சாப்பிட, மருத்துவரை விலக்கி வைக்கலாம்.


முட்டைக்குள் ஒளிந்திருக்கும் சிறப்புகள்! Dr.Jegath Narayanan e1612953778555 https://pachaiboomi.net/9876-2/

டாக்டர் ஏ.ஆர்.ஜெகத் நாராயணன்,

மேனாள் இணை இயக்குநர், கால்நடைப் பராமரிப்புத் துறை, கன்னங்குறிச்சி, சேலம் – 636 008.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • நிலையான மற்றும் கூடுதல் பால் உற்பத்திக்கான வழிமுறைகள்!

  • கறவை மாடுகளின் சூலகத்தில் உருவாகும் நீர்க்கட்டிகள்!

  • கறவை மாடுகளில் ஏற்படும் மலட்டுத் தன்மைக்கான காரணிகள்!

  • எருமைகளில் சினைப்பருவ நிர்வாகம்!

  • கறவை மாடுகளில் ஏற்படும் கருச்சிதைவு நோய்!

  • கறவை மாடுகளுக்கு அடர் தீவனம் அளிப்பது எப்படி?

  • ஆடுகளுக்குத் தீமை செய்யும் பார்த்தீனியம்!

  • கோழிப் பண்ணைக்கான இடத்தேர்வும் பண்ணை அமைப்பும்!

  • வளர்கோழிப் பராமரிப்பு முறைகள்!