நீரின்றி அமையாது உலகு. எனவே, தமிழ்நாட்டில் மழைக்காலத்தில் கிடைக்கும் நீரைச் சேமித்து வைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்கங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.
வீராணம் ஏரி
அமைவிடம்: கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோயில் அருகில்.
கட்டப்பட்ட காலம்: கி.பி.907-கி.பி.953 வரை.
கொள்ளளவு: 41.48 மில்லியன் கன மீட்டர் (1,465 மில்லியன் கன அடி)
செம்பரம்பாக்கம் ஏரி
அமைவிடம்: காஞ்சிபுரம் மாவட்டம்.
கட்டப்பட்ட காலம்: பல்லவர் காலம்.
கொள்ளளவு: 88 மில்லியன் கன மீட்டர் (3,120 மில்லியன் கன அடி)
செங்குன்றம் புழல் ஏரி
அமைவிடம்: திருவள்ளூர் மாவட்டம், சென்னைக்கு அருகில்.
கட்டப்பட்ட காலம்: 1876.
கொள்ளளவு: 93 மில்லியன் கன மீட்டர் (3,300 மில்லியன் கன அடி)
சோழவரம் ஏரி
அமைவிடம்: திருவள்ளூர் மாவட்டம், சென்னைக்கு அருகில்.
கட்டப்பட்ட காலம்: 1877-க்கு முன்.
கொள்ளளவு: 25 மில்லியன் கன மீட்டர் (881 மில்லியன் கன அடி)
வெலிங்டன் ஏரி
அமைவிடம்: கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகில்.
கட்டப்பட்ட காலம்: 1923.
கொள்ளளவு: 60 மில்லியன் கன மீட்டர் (2,580 மில்லியன் கன அடி)
பூண்டி ஏரி
அமைவிடம்: திருவள்ளூர் மாவட்டம், சென்னைக்கு அருகில்.
கட்டப்பட்ட காலம்: 1944.
கொள்ளளவு: 91 மில்லியன் கன மீட்டர் (3,214 மில்லியன் கன அடி)
வீடூர் அணை
அமைவிடம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகில்.
கட்டப்பட்ட காலம்: 1959.
கொள்ளளவு: 17.13 மில்லியன் கன மீட்டர் (605 மில்லியன் கன அடி)
கோமுகி அணை
அமைவிடம்: விழுப்புரம், கல்வராயன் மலையடிவாரம், கச்சிராயபாளையம்.
கட்டப்பட்ட காலம்: 1965.
கொள்ளளவு: 15.86 மில்லியன் கன மீட்டர் (560 மில்லியன் கன அடி)
மணிமுக்தா அணை
அமைவிடம்: கள்ளக்குறிச்சிக்கு அருகில்.
கட்டப்பட்ட காலம்: 1970
கொள்ளளவு: 20.62 மில்லியன் கன மீட்டர் (737 மில்லியன் கன அடி)
பஞ்சப்பள்ளி அணை
அமைவிடம்: கிருஷ்ணகிரி மாவட்டம்.
கட்டப்பட்ட காலம்: 1977.
கொள்ளளவு: 13.98 மில்லியன் கன மீட்டர் (500 மில்லியன் கன அடி)
பாம்பாறு அணை
அமைவிடம்: கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை வட்டம், மாரம்பட்டி அருகில்.
கட்டப்பட்ட காலம்: 1983.
கொள்ளளவு: 7.2 மில்லியன் கன மீட்டர் (250 மில்லியன் கன அடி)
தும்பலஹள்ளி அணை
அமைவிடம்: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகில்.
கட்டப்பட்ட காலம்: 1983.
கொள்ளளவு: 3.68 மில்லியன் கன மீட்டர் (132 மில்லியன் கன அடி)
வாணியாறு அணை
அமைவிடம்: தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வெங்கடசமுத்திரம் அருகில்.
கட்டப்பட்ட காலம்: 1985.
கொள்ளளவு: 11.78 மில்லியன் கன மீட்டர் (418 மில்லியன் கன அடி)
கேசரக்குழிப்பள்ளம் அணை
அமைவிடம்: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகில்.
கட்டப்பட்ட காலம்: 1985.
கொள்ளளவு: 3.57 மில்லியன் கன மீட்டர் (134 மில்லியன் கன அடி)
சூளகிரி சின்னாறு அணை
அமைவிடம்: கிருஷ்ணகிரி மாவட்டம், எம்பள்ளி அருகில்.
கட்டப்பட்ட காலம்: 1986.
கொள்ளளவு: 2.21 மில்லியன் கன மீட்டர் (81 மில்லியன் கன அடி)
தொப்பையாறு அணை
அமைவிடம்: தருமபுரி மாவட்டம்.
கட்டப்பட்ட காலம்: 1986.
கொள்ளளவு: 8.46 மில்லியன் கன மீட்டர் (299 மில்லியன் கன அடி)
நாகாவதி அணை
அமைவிடம்: தருமபுரி மாவட்டம்.
கட்டப்பட்ட காலம்: 1986.
கொள்ளளவு: 4.65 மில்லியன் கன மீட்டர் (134 மில்லியன் கன அடி)
கெலவரப்பள்ளி அணை
அமைவிடம்: ஆவளப்பள்ளி அணை, ஓசூர் அருகில், கிருஷ்ணகிரி மாவட்டம்.
கட்டப்பட்ட காலம்: 1993.
கொள்ளளவு: 13.17 மில்லியன் கன மீட்டர் (481 மில்லியன் கன அடி)
இராஜாதோப்பு கானாறு அணை
அமைவிடம்: வேலூர் மாவட்டம்.
கட்டப்பட்ட காலம்: 1997.
கொள்ளளவு: 0.58 மில்லியன் கன மீட்டர் (20 மில்லியன் கன அடி)
மோர்தானா அணை
அமைவிடம்: வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டத்தில்.
கட்டப்பட்ட காலம்: 2001.
கொள்ளளவு: 7.40 மில்லியன் கன மீட்டர் (261 மில்லியன் கன அடி)
மிருகண்டா அணை
அமைவிடம்: திருவண்ணாமலை, கலசப்பாக்கம், மேல் சோழங்குப்பத்தில்.
கட்டப்பட்ட காலம்: 2005.
கொள்ளளவு: 2.47 மில்லியன் கன மீட்டர் (87.23 மில்லியன் கன அடி)
செண்பகத்தோப்பு அணை
அமைவிடம்: திருவண்ணாமலை, போளூர் வட்டம், சந்தவாசலில்,
கட்டப்பட்ட காலம்: 2007.
கொள்ளளவு: 8.13 மில்லியன் கன மீட்டர் (287.20 மில்லியன் கன அடி)
வள்ளி மதுரை அணை
அமைவிடம்: வேலூர் மாவட்டம், அரூர் அருகில்.
கட்டப்பட்ட காலம்: 2007.
கொள்ளளவு: 3.12 மில்லியன் கன மீட்டர் (110.33 மில்லியன் கன அடி)
ஆண்டியப்பனூர் ஓடை
அமைவிடம்: வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகில்.
கட்டப்பட்ட காலம்: 2007.
கொள்ளளவு: 3.18 மில்லியன் கன மீட்டர் (112.20 மில்லியன் கன அடி)
சாத்தையாறு அணை
அமைவிடம்: மதுரை மாவட்டம், பாலமேடு அருகில்.
கட்டப்பட்ட காலம்: 1965.
கொள்ளளவு: 1.59 மில்லியன் கன மீட்டர் (66 மில்லியன் கன அடி)
மஞ்சளாறு அணை
அமைவிடம்: தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகில்.
கட்டப்பட்ட காலம்: 1967.
கொள்ளளவு: 13.48 மில்லியன் கன மீட்டர் (477 மில்லியன் கன அடி)
சிற்றாறு அணை-1
அமைவிடம்: கன்னியாகுமரி மாவட்டம்.
கட்டப்பட்ட காலம்: 1972.
கொள்ளளவு: 16.99 மில்லியன் கன மீட்டர் (600 மில்லியன் கன அடி)
சிற்றாறு அணை-2
அமைவிடம்: கன்னியாகுமரி மாவட்டம்.
கட்டப்பட்ட காலம்: 1972.
கொள்ளளவு: 11.13 மில்லியன் கன மீட்டர் (393 மில்லியன் கன அடி)
கடனாநதி அணை
அமைவிடம்: திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகில்.
கட்டப்பட்ட காலம்: 1974.
கொள்ளளவு: 9.97 மில்லியன் கன மீட்டர் (352 மில்லியன் கன அடி)
இராமநதி அணை
அமைவிடம்: திருநெல்வேலி மாவட்டம்.
கட்டப்பட்ட காலம்: 1974.
கொள்ளளவு: 4.30 மில்லியன் கன மீட்டர் (152 மில்லியன் கன அடி)
பிளவுக்கல் பெரியாறு அணை
அமைவிடம்: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகில்.
கட்டப்பட்ட காலம்: 1976.
கொள்ளளவு: 5.44 மில்லியன் கன மீட்டர் (192 மில்லியன் கன அடி)
பிளவுக்கல் கோவிலாறு அணை
அமைவிடம்: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகில்.
கட்டப்பட்ட காலம்: 1976.
கொள்ளளவு: 3.77 மில்லியன் கன மீட்டர் (133 மில்லியன் கன அடி)
கருப்பா நதி அணை
அமைவிடம்: திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் அருகில்.
கட்டப்பட்ட காலம்: 1977.
கொள்ளளவு: 5.24 மில்லியன் கன மீட்டர் (185 மில்லியன் கன அடி)
மருதாநதி அணை
அமைவிடம்: திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் அருகில்.
கட்டப்பட்ட காலம்: 1979.
கொள்ளளவு: 4.93 மில்லியன் கன மீட்டர் 189 (மில்லியன் கன அடி)
குல்லூர் சந்தை அணை
அமைவிடம்: விருதுநகர் மாவட்டம்.
கட்டப்பட்ட காலம்: 1984.
கொள்ளளவு: 3.59 மில்லியன் கன மீட்டர் (127 மில்லியன் கன அடி)
குண்டாறு அணை
அமைவிடம்: திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை அருகில்.
கட்டப்பட்ட காலம்: 1983.
கொள்ளளவு: 0.71 மில்லியன் கன மீட்டர் (25 மில்லியன் கன அடி)
ஆனைக்குட்டம் அணை
அமைவிடம்: விருதுநகர் மாவட்டம்.
கட்டப்பட்ட காலம்: 1989.
கொள்ளளவு: 6.60 மில்லியன் கன மீட்டர் (126 மில்லியன் கன அடி)
வெம்பக்கோட்டை அணை
அமைவிடம்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகில்.
கட்டப்பட்ட காலம்: 1985.
கொள்ளளவு: 11.29 மில்லியன் கன மீட்டர் (399 மில்லியன் கன அடி)
நம்பியாறு அணை
அமைவிடம்: திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகில்.
கட்டப்பட்ட காலம்: 2000.
கொள்ளளவு: 2.33 மில்லியன் கன மீட்டர் (82 மில்லியன் கன அடி)
கோல்வார்பட்டி அணை
அமைவிடம்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகில்.
கட்டப்பட்ட காலம்: 1992.
கொள்ளளவு: 5.4 மில்லியன் கன மீட்டர் (176 மில்லியன் கன அடி)
சோத்துப்பாறை அணை
அமைவிடம்: தேனி மாவட்டம்.
கட்டப்பட்ட காலம்: 2001.
கொள்ளளவு: 2.83 மில்லியன் கன மீட்டர் (100 மில்லியன் கன அடி)
பொய்கையாறு அணை
அமைவிடம்: கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி அருகில்.
கட்டப்பட்ட காலம்: 2000.
கொள்ளளவு: 2.97 மில்லியன் கன மீட்டர் (105 மில்லியன் கன அடி)
வடக்குப் பச்சையாறு அணை
அமைவிடம்: திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகில்.
கட்டப்பட்ட காலம்: 2003.
கொள்ளளவு: 12.51 மில்லியன் கன மீட்டர் (442 மில்லியன் கன அடி)
அடவிநயினார் கோயில் அணை
அமைவிடம்: திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை அருகில்.
கட்டப்பட்ட காலம்: 2003.
கொள்ளளவு: 4.93 மில்லியன் கன மீட்டர் (174 மில்லியன் கன அடி)
சண்முகா நதி அணை
அமைவிடம்: தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே இராயப்பன்பட்டியில்.
கட்டப்பட்ட காலம்: 2004.
கொள்ளளவு: 2.25 மில்லியன் கன மீட்டர் (79.56 மில்லியன் கன அடி)
கொடுமுடியாறு அணை
அமைவிடம்: திருநெல்வேலி களக்காடு அருகே திருக்குறுங்குடியில்.
கட்டப்பட்ட காலம்: 2003.
கொள்ளளவு: 3.45 மில்லியன் கன மீட்டர் (122 மில்லியன் கன அடி)
குண்டேரிப்பள்ளம் அணை
அமைவிடம்: ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகில்.
கட்டப்பட்ட காலம்: 1978.
கொள்ளளவு: 3.06 மில்லியன் கன மீட்டர் (108 மில்லியன் கன அடி)
நகரியாறு சாஸ்தாகோயில் அணை
அமைவிடம்: விருதுநகர் மாவட்டம், தேவதானம் அருகில்.
கட்டப்பட்ட காலம்: 2004.
கொள்ளளவு: 1.03 மில்லியன் கன மீட்டர் (36.47 மில்லியன் கன அடி)
பெரும்பள்ளம் அணை
அமைவிடம்: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகில்.
கட்டப்பட்ட காலம்: 1990.
கொள்ளளவு: 3.28 மில்லியன் கன மீட்டர் (232 மில்லியன் கன அடி)
வறட்டுப்பள்ளம் அணை
அமைவிடம்: ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகில்.
கட்டப்பட்ட காலம்: 1978.
கொள்ளளவு: 3.94 மில்லியன் கன மீட்டர் (140 மில்லியன் கன அடி)
பாலாறு- பொருந்தலாறு அணை
அமைவிடம்: திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகில்.
கட்டப்பட்ட காலம்: 1978.
கொள்ளளவு: 43.19 மில்லியன் கன மீட்டர் (1524 மில்லியன் கன அடி)
உப்பாறு அணை
அமைவிடம்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகில்.
கட்டப்பட்ட காலம்: 1968.
கொள்ளளவு: 14.92 மில்லியன் கன மீட்டர் (328 மில்லியன் கன அடி)
பரப்பாலாறு அணை
அமைவிடம்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகில்.
கட்டப்பட்ட காலம்: 1974.
கொள்ளளவு: 5.60 மில்லியன் கன மீட்டர் (198 மில்லியன் கன அடி)
வட்டமலைக்கரை ஓடை அணை
அமைவிடம்: திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகில்.
கட்டப்பட்ட காலம்: 1978.
கொள்ளளவு: 7.59 மில்லியன் கன மீட்டர் (268 மில்லியன் கன அடி)
நொய்யல் ஆத்துப்பாளையம் அணை
அமைவிடம்: கரூர் மாவட்டம், கார்வழி அருகில்.
கட்டப்பட்ட காலம்: 1991.
கொள்ளளவு: 6.46 மில்லியன் கன மீட்டர் (235 மில்லியன் கன அடி)
குதிரையாறு அணை
அமைவிடம்: திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகில்.
கட்டப்பட்ட காலம்: 1990.
கொள்ளளவு: 7.16 மில்லியன் கன மீட்டர் (253 மில்லியன் கன அடி)
மேல் நீராறு கலிங்கு
அமைவிடம்: கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை அருகில்.
கட்டப்பட்ட காலம்: 1975.
கொள்ளளவு: 1.10 மில்லியன் கன மீட்டர் (39 மில்லியன் கன அடி)
கீழ் நீராறு கலிங்கு
அமைவிடம்: கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை அருகில்.
கட்டப்பட்ட காலம்: 1982.
கொள்ளளவு: 4.93 மில்லியன் கன மீட்டர் (174 மில்லியன் கன அடி)
குடகனாறு அணை
அமைவிடம்: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அழகாபுரியில்.
கட்டப்பட்ட காலம்: 1993.
கொள்ளளவு: 12.30 மில்லியன் கன மீட்டர் (434 மில்லியன் கன அடி)
பெருவாரிப்பள்ளம் அணை
அமைவிடம்: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே தமிழக கேரள எல்லை.
கட்டப்பட்ட காலம்: 1971.
கொள்ளளவு: 11.02 மில்லியன் கன மீட்டர் (620 மில்லியன் கன அடி)
தூணக்கடவு அணை
அமைவிடம்: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே தமிழக கேரள எல்லை.
கட்டப்பட்ட காலம்: 1965.
கொள்ளளவு: 9.06 மில்லியன் கன மீட்டர் (557 மில்லியன் கன அடி)
வரதமாநதி அணை
அமைவிடம்: திண்டுக்கல் மாவட்டம், பழனி-கொடைக்கானல் வழி.
கட்டப்பட்ட காலம்: 1978.
கொள்ளளவு: 3.06 மில்லியன் கன மீட்டர் (111 மில்லியன் கன அடி)
நொய்யல் ஒரத்துப்பாளையம் அணை
அமைவிடம்: திருப்பூர் மாவட்டம்.
கட்டப்பட்ட காலம்: 1992.
கொள்ளளவு: 17.44 மில்லியன் கன மீட்டர் (616 மில்லியன் கன அடி)
நங்காஞ்சி ஆறு அணை
அமைவிடம்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகில்.
கட்டப்பட்ட காலம்: 2007.
கொள்ளளவு: 7.20 மில்லியன் கன மீட்டர் (254.27 மில்லியன் கன அடி)
நல்ல தங்காள் ஓடை அணை
அமைவிடம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகில்.
கட்டப்பட்ட காலம்: 2007.
கொள்ளளவு: 6.32 மில்லியன் கன மீட்டர் (223.19 மில்லியன் கன அடி)
சூரியகோயில் அணை
அமைவிடம்: சேலம் மாவட்டம், ஆத்தூர், பாப்பநாயக்கன்பட்டியில்.
கட்டப்பட்ட காலம்: 1993.
கொள்ளளவு: 5.41 மில்லியன் கன மீட்டர் (190 மில்லியன் கன அடி)
ஆனைமடுவு அணை
அமைவிடம்: சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே புழுதிக்குட்டையில்.
கட்டப்பட்ட காலம்: 1993.
கொள்ளளவு: 7.43 மில்லியன் கன மீட்டர் (267 மில்லியன் கன அடி)
சித்தமல்லி அணை
அமைவிடம்: அரியலூர் மாவட்டம்.
கட்டப்பட்ட காலம்: 1987.
கொள்ளளவு: 6.36 மில்லியன் கன மீட்டர் (227 மில்லியன் கன அடி)
பொன்னியாறு அணை
அமைவிடம்: கரூர் மாவட்டம் கடவூர் அருகில்.
கட்டப்பட்ட காலம்: 1974.
கொள்ளளவு: 3.40 மில்லியன் கன மீட்டர் (120.07 மில்லியன் கன அடி)
விசுவக்குடி அணை
அமைவிடம்: பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடியில்.
கட்டப்பட்ட காலம்: 2015.
கொள்ளளவு: 10 மில்லியன் கன மீட்டர் (212.47 மில்லியன் கன அடி)
கொட்டரை அணை
அமைவிடம்: பெரம்பலூர் கொட்டரையில்.
கட்டப்பட்ட காலம்: 2016-2021
கொள்ளளவு: 10 மில்லியன் கன மீட்டர் (212.47 மில்லியன் கன அடி)
உப்பாறு அணை
அமைவிடம்: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுபத்தூர்.
கட்டப்பட்ட காலம்: 1986.
கொள்ளளவு: 2.27 மில்லியன் கன மீட்டர் (80.16 மில்லியன் கன அடி)
தொகுப்பு: மு.உமாபதி.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.


