My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

பால் உற்பத்தியில் எருமைகளின் பங்கு!

பால் உற்பத்தியில் எருமைகளின் பங்கு! murrah buffalo ac721e0123828cab6422a28d239a2b22 https://pachaiboomi.net/589-2/

மது அன்றாட உணவில், முக்கிய ஊட்ட உணவாக இருப்பது பாலாகும். இது, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரின் சரிவிகித உணவிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்திய பொருளாதாரத்தில் பால் உற்பத்திக்குப் பெரும் பங்குண்டு.

அதாவது, நாட்டின் மொத்த உள்நாட்டு வேளாண்மை உற்பத்தியில் 33 சதம் பாலாகும். ஏழை விவசாயிகளின் தினசரி வருமானம், பசு அல்லது எருமைப் பால் மூலம் கிடைக்கிறது.

பால் உற்பத்தியில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் நம் நாடு 2015-16-இல் உற்பத்தி செய்த பால் 155.05 இலட்சம் மெட்ரிக் டன். இதில் எருமைப்பால் சுமார் 75 இலட்சம் மெட்ரிக் டன். மேலும், உலகத்தில் உற்பத்தியாகும் மொத்தப் பாலில் 12 சதம் எருமைப் பாலாகும். இதில் 70 சதம் நம் நாட்டு எருமைகள் மூலம் கிடைக்கிறது.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

ஏனெனில், உலகத்தில் உள்ள மொத்த எருமைகளில் 58 சத எருமைகள் இந்தியாவில் உள்ளன. சுமார் 108.7 மில்லியன் எருமைகள் நம் நாட்டில் உள்ளன. உத்திரப்பிரதேசம், இராஐஸ்தான், பஞ்சாப், ஹரியானா மற்றும் ஆந்திர மக்கள் எருமைகளை விரும்பி வளர்க்கிறார்கள்.

தமிழ்நாட்டில் ஆறு, ஏரி, குளங்கள் உள்ள இடங்களில் எருமைகள் மிகுதியாக உள்ளன. குறிப்பாக, திருவள்ளூர், நாமக்கல், காஞ்சிபுரம், ஈரோடு, சேலம் போன்ற மாவட்டங்களில் நிறைய உள்ளன. பால் உற்பத்தியில் தமிழகம் பத்தாம் இடத்திலுள்ளது.

தமிழ்நாட்டு மொத்தப் பாலுற்பத்தி 7.4 மில்லியன் டன். இதில் 7 சதம் தான் எருமைப் பால், மீதமுள்ள 93 சதத்தில் 8 சதம் நாட்டு மாட்டுப்பால். 85 சதம் கலப்பின மாட்டுப் பாலாகும்.

தமிழ்நாட்டில் 25 இலட்சம் நாட்டு மாடுகள், 8 இலட்சம் எருமைகள் இருந்தாலும், நாட்டு மாடுகளுக்கு இணையாகப் பாலைத் தருகின்றன. தமிழகம் எருமைகளின் எண்ணிக்கையில் 14-வது இடத்தில் உள்ளது. 2007-இல் 20 இலட்சமாக இருந்த எருமைகள் இப்போது 8 இலட்சமாகக் குறைந்து விட்டன.

உலகச் சந்தையில் எருமைப்பாலின் விலைதான் அதிகம். ஏனெனில் எருமைப் பாலில் சுமார் 4 சதம் புரதமும், 6-10 சதம் கொழுப்பும் உள்ளன. பசும்பாலை விட எருமைப் பாலில் கொலஸ்டிரால் மிகவும் குறைவாக உள்ளது. அதாவது, 0.65 மி.கி./கி. ஆனால், பசும்பாலில் 3.14 மி.கி./கி. உள்ளது.

எருமைப் பாலில் வைட்டமின் ஏ, மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற முக்கிய நுண் சத்துகள் நிறைய உள்ளன. புரதம், பெரிய கொழுப்புக் குமிழ்கள், சத்து நிறைய இருப்பதால் இது, தயிர், வெண்ணெய், பன்னீர், பாலாடைக்கட்டி, பால்கோவா போன்ற பொருட்கள் தயாரிப்புக்குச் சிறந்தது.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும், பசு நெய்யில் 0.48 மி.கி./கி. உள்ளதை விட, எருமை நெய்யில் 0.64 மி.கி./கி. நல்ல கொலஸ்டிரால் இருப்பதால், உடலுக்கு மிகவும் நல்லது.

கடந்தாண்டின் பால் உற்பத்திக் கணக்குப்படி, ஒரு கலப்பினப் பசு ஒரு நாளில் சுமார் 7 கிலோ பாலும், நாட்டுப்பசு சுமார் 3 கிலோ பாலும் தருகின்றன. ஒரு எருமை ஒரு நாளில் சுமார் 5 கிலோ பாலைத் தருகிறது. எருமைப் பால் உற்பத்தியை, பொருளாதார நோக்கில் பார்த்தால், தமிழ்நாட்டு எருமை ஒரு நாளில் சுமார் 5 லிட்டர் பாலைத் தருகிறது.

ஒரு எருமையைப் பராமரிக்க, 39 ரூபாய் செலவாகிறது. அதாவது, ஒரு லிட்டர் பால் உற்பத்திக்கு ஆகும் செலவு 8 ரூபாய் மட்டுமே. ஆனால், ஒரு லிட்டர் பால் 40-50 ரூபாய் வரை விற்கிறது. ஆகவே, எருமைகளை வளர்த்து வளம் பெறுவோம்.


பால் உற்பத்தியில் எருமைகளின் பங்கு! Malarmathy https://pachaiboomi.net/589-2/

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மருத்துவர் மு.மலர்மதி,

முனைவர் நா.முரளி, மருத்துவர் ம.ஜெயக்குமார், முனைவர் இரா. சரவணன், கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல் – 637 002.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • நிலையான மற்றும் கூடுதல் பால் உற்பத்திக்கான வழிமுறைகள்!

  • கறவை மாடுகளின் சூலகத்தில் உருவாகும் நீர்க்கட்டிகள்!

  • கறவை மாடுகளில் ஏற்படும் மலட்டுத் தன்மைக்கான காரணிகள்!

  • எருமைகளில் சினைப்பருவ நிர்வாகம்!

  • கறவை மாடுகளில் ஏற்படும் கருச்சிதைவு நோய்!

  • கறவை மாடுகளுக்கு அடர் தீவனம் அளிப்பது எப்படி?

  • ஆடுகளுக்குத் தீமை செய்யும் பார்த்தீனியம்!

  • கோழிப் பண்ணைக்கான இடத்தேர்வும் பண்ணை அமைப்பும்!

  • வளர்கோழிப் பராமரிப்பு முறைகள்!