My page - topic 1, topic 2, topic 3

பயிர்களுக்கு உயிர் உரங்களின் அவசியம்!

பயிர்களுக்கு உயிர் உரங்களின் அவசியம்!

உயிர் உரங்கள், மண் வளத்தைப் பாதுகாத்து, நீடித்த, நிலையான வேளாண்மைக்கு வழி வகுக்கும். காற்றிலுள்ள நைட்ரஜன் வாயுவைத் தழைச்சத்தாக மாற்றி, பயிர்களுக்கு அளிக்கும்.

செய்தி வெளியான இதழ்: 2018 செப்டம்பர்.

யிர்களுக்குப் பயனளிக்கும் நுண்ணுயிர்களை ஆய்வகத்தில் பெருக்கி, அவற்றுக்கு உரிய வளர் பொருளுடன் கலந்து தயாரிக்கப்படும் இடுபொருள், உயிர் உரம் எனப்படும். இதில், தழைச்சத்தை நிலை நிறுத்தும் உயிர் உரம், மணிச்சத்தைக் கரைக்கும் உயிர் உரம் என வகைகள் உள்ளன.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

பயறு வகைப் பயிர்களில் தழைச்சத்தை நிலை நிறுத்தும் உரம் ரைசோபியம் எனப்படும். பயறுவகை அல்லாத பயிர்களில், இந்த வேலையைச் செய்யும் உயிர் உரம் அசோஸ் பயிரில்லம் எனப்படும். அனைத்துப் பயிர்களுக்கும் பயன்படுவது பாஸ்போ பாக்டீரியா எனப்படும்.

உயிர் உரங்களின் பயன்கள்

மண் வளத்தைப் பாதுகாத்து, நீடித்த, நிலையான வேளாண்மைக்கு வழி வகுக்கும். காற்றிலுள்ள நைட்ரஜன் வாயுவைத் தழைச்சத்தாக மாற்றி, பயிர்களுக்கு அளிக்கும்.

கிட்டா நிலையில் நிலத்தில் உள்ள மணிச்சத்தை, பயிருக்கு எளிதில் கிடைக்கும் வகையில் மாற்றித் தரும். பயிர் வளர்ச்சி ஊக்கிகளான, இன்டோல் அசிட்டிக் அமிலம், ஜிப்ரலின், பயோடின், வைட்டமின் பி ஆகியவற்றை, நுண்ணுயிர்கள் உற்பத்தி செய்வதால், பயிர்கள் செழித்து வளரும்.

நோய்களை எதிர்க்கும் சக்தியை மண்ணில் உண்டாக்கும். பயிர்களுக்கு வறட்சியைத் தாங்கும் சக்தியைத் தரும். 20-25 சத, தழைச்சத்து, மணிச்சத்து உரங்களைச் சேமிக்கலாம்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மாசற்ற சுற்றுச்சூழல் ஏற்படும். இயற்கை வழிப் பண்ணையம் சிறக்க உதவும். மகசூல் 15-20 சதம் வரை கூடும். அந்நியச் செலவாணியை மிச்சப்படுத்தும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

அசோஸ்பயிரில்லம்

அசோஸ் பயிரில்லம் என்பது, காற்றிலுள்ள தழைச்சத்தை மண்ணில் நிலைப்படுத்தும் ஒருவகை பாக்டீரியம். இது, மண்ணில் பரவலாக இருக்கும். இந்த பாக்டீரியம், ரைசோபியத்தைப் போல, வேருக்குள் சென்று வேர் முடிச்சுகளை உருவாக்காது.

மாறாக, வேர்ப்பகுதியின் உள்ளும் புறமும் இருக்கும். பயிருடன் இணைந்து வாழும். நெல், சோளம், கம்பு, இராகி, மக்காச்சோளம், தினை, சாமை, பருத்தி, கரும்பு போன்ற பயிர்களுக்குத் தழைச்சத்தைக் கிரகித்து அளிக்கும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

வேரிலிருந்து வெளியாகும் கசிவு, அசோஸ் பயிரில்லத்தைக் கவர்ந்து, அதற்கு உணவாகவும் பயன்படுகிறது. அதற்குப் பிரதிபலனாக நைட்ராஜினேஸ் என்னும் நொதியைப் பயன்படுத்தி, காற்றிலுள்ள தழைச்சத்தைப் பயிருக்குக் கிடைக்கச் செய்கிறது.

மேலும், பயிர் வளர்ச்சி ஊக்கிகளான, இன்டோல் அசிட்டிக் அமிலம், ஜிப்ரலின், சைட்டோகைனின் போன்ற வேதிப் பொருள்களை உற்பத்தி செய்து, பயிரின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது.

அசோஸ் பயிரில்லம் எந்தப் பருவத்திலும், எந்தப் பகுதியிலும் பயன்படும் சிறப்பு வாய்ந்த நுண்ணுயிர். அனைத்து வகை மண்ணிலும் இருந்தாலும், அமில, கார நிலங்களைப் பொறுத்து, இதன் செயல்திறன் வேறுபடும்.

ஆயினும் அமில, காரத் தன்மையைத் தாங்கி வளர்ந்து பயனளிக்கும் வகைகளைப் பயன்படுத்தலாம். உலகளவில் அசோஸ் பயிரில்லத்தில் பல வகைகள் உள்ளன. லிபோ்பெரம் என்பது, நெற்பயிருக்கும், பிரேசிலன்ஸ் என்பதை, மற்ற பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.

ரைசோபியம்

இது, பயறுவகைப் பயிர்களின் வேர்களில் வேர் முடிச்சுகளை ஏற்படுத்தி, கூட்டு வாழ்க்கை நடத்தும் பாக்டீரியம் ஆகும். இது, வேர்க்கசிவால் ஈர்க்கப்பட்டு, சல்லிவேர் வழியாக உள்ளே சென்று வேர் முடிச்சுகளை உருவாக்கும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

இந்த முடிச்சுகளில் உள்ள நைட்ரோஜினேஸ் என்னும் நொதிப்பொருள் மூலம், காற்றிலுள்ள தழைச்சத்தை நிலை நிறுத்தும். இத்தகைய தழைச்சத்தை வேர் முடிச்சுகளில் சேமித்து வைப்பதால் தான், பயறுவகைப் பயிர்களை, சுழற்சி முறையில் சாகுபடி செய்கிறோம். பயறு வகைகளுக்கு ஏற்ற ரைசோபிய வகைகளைப் பயன்படுத்த வேண்டும்.

பாஸ்போபாக்டீரியா

பயிர்கள் செழித்து வளரத் தேவையான முக்கியச் சத்துகளில், தழைச்சத்துக்கு அடுத்தது மணிச்சத்து. வேர் வளர்ச்சி, இனப்பெருக்கம் மற்றும் கூடுதல் மகசூலுக்குத் தேவையான தழைச்சத்தை ஈர்த்து, பயிருக்கு அளிக்க, மணிச்சத்து மிகவும் தேவை.

இந்த மணிச்சத்து, மண்ணில் எளிதில் பல்வேறு வேதி மாற்றங்களுக்கு உட்பட்டு, கிட்டாத நிலைக்கு சென்று விடுகிறது. எடுத்துக் காட்டாக, மணிச்சத்து, அமில மண்ணில், இரும்பு மற்றும் அலுமினிய அயனிகளோடு இணைந்து, அவற்றின் பாஸ்பேட்டுகளாக மாறிவிடும்.

அதே போல, கார மண்ணில், கால்சியம் மற்றும் மக்னீசியத்துடன் இணைந்து, அவற்றின் பாஸ்பேட்டுகளாக மாறி விடும். இந்த பாஸ்பேட்டுகளைப் பயிர்களால் நேரடியாக எடுத்துக் கொள்ள இயலாது.

இத்தகைய நிலையில் மணிச்சத்தைக் கரைத்து தரும் வேலையை, பாஸ்போ பாக்டீரியா நுண்ணுயிர்கள் செய்யும். இவை, தமது செல்களில் சுரக்கும் ஃபியுமரிக், சக்சீனிக் ஆகிய அங்கக அமிலங்கள் மூலம், கரையாத மணிச்சத்தைக் கரைத்து, பயிர்கள் எடுத்துக் கொள்ளும் நிலைக்கு மாற்றித் தரும்.

மேலும், இந்த நுண்ணுயிர்கள், பாஸ்படேஸ் என்னும் நொதிப் பொருளைச் சுரந்து, மணிச்சத்தைக் கரைத்துப் பயிருக்கு அளிக்கும். ரைசோபியம், அசோஸ் பயிரில்லம், பாஸ்போ பாக்டீரியா ஆகிய மூன்றையும் கலந்து இட்டால், அவற்றின் செயல் திறன் கூடும்.

இது, மணிச்சத்துக் குறைந்த நிலங்களில், அமில வகை மண்ணில் நன்கு செயலாற்றி, மிகுந்த பயனைத் தரும். பாஸ்போ பாக்டீரியா எந்தப் பருவத்துக்கும் ஏற்ற நுண்ணுயிர் உரமாகும்.


முனைவர் வெ.செ.மைனாவதி, முனைவர் சி.வள்ளி, கால்நடை உணவியல் நிலையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் – 603 203.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும் படிக்கலாம்:

  • பயிர்ப் பாதுகாப்பில் உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகள்!

  • ஊடுபயிர்களைத் தேர்வு செய்வது எப்படி?

  • வறட்சியிலும் வளம் கொழிக்கும் நாவல்!

  • நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம்!

  • மீன் கழிவை உரமாக மாற்றுவது எப்படி?

  • தக்காளியைத் தாக்கும் நோய்கள்!

  • மணத்தக்காளி சாகுபடி!

  • களர் உவர் நிலத்தை விளைநிலமாக மாற்றுவது எப்படி?

  • பால் உற்பத்தியில் பசுந்தீவனத்தின் அவசியம்!