My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

கரும்புத்தோகை மற்றும் ஆலைக்கழிவை ஊட்டமேற்றிய உரமாக மாற்றுதல்!

Fertilizer

கரும்புத்தோகை மற்றும் கரும்பாலைக் கழிவை ஊட்டமேற்றிய உரமாக மாற்றுவது குறித்து இங்கே பார்க்கலாம்.

» காய்ந்த கரும்புத் தோகையை, 15 செ.மீ. உயரம், 7 மீட்டர் நீளம், 3 மீட்டர் அகலத்தில் பரப்ப வேண்டும்.

» அதற்கு மேல், 5 செ.மீ. உயரத்துக்கு கரும்பாலைக் கழிவைப் பரப்ப வேண்டும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

» அதற்கு மேல், நூறு கிலோ தோகைக்கு, 2 கிலோ சூப்பர் பாஸ்பேட், 2 கிலோ ஜிப்சம் மற்றும் ஒரு கிலோ யூரியா வீதம் எடுத்துப் பரவலாகத் தூவிவிட வேண்டும்.

» அடுத்து, அடுக்கு முழுவதும் நன்கு நனையும் வகையில் நீரைத் தெளிக்க வேண்டும்.

» இப்படி, மீண்டும் மீண்டும் இதே பொருள்களைக் கொண்டு இந்த அடுக்குக்கு மேல் அடுக்காக, 1.5 மீட்டர் உயரம் வரும் வரை அமைக்க வேண்டும்.

» நீரைத் தெளிப்பதற்கு மாற்றாக, தொழுவுரக் கரைசலையும் தெளிக்கலாம்.

» பிறகு, அடுக்கு முழுவதையும், மண்ணும் ஆலைக்கழிவும் சமமாகக் கலந்த கலவையால், 15 செ.மீ. உயரத்துக்கு மூடி விட வேண்டும்.

» அடுக்கு முழுவதும் நனையும் வகையில், 15 நாட்களுக்கு ஒருமுறை நீரைத் தெளித்து வர வேண்டும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

» மூன்று மாதமானதும் அடுக்கைப் புரட்டி நன்கு கலந்து விட்டு, ஒரு மாதம் வரை அப்படியே விட்டுவிட வேண்டும்.

» நான்காம் மாத முடிவில் மறுபடியும் புரட்டிக் கலந்து விட்டு, 5-வது மாத முடிவு வரை, 15 நாள் இடைவெளியில் நீரைத் தெளித்து வர வேண்டும்.

» இப்படித் தயாரிக்கப்படும் கரும்புத்தோகை கம்போஸ்ட்டில், 1.60 சதம் தழைச்சத்து, 1.10 சதம் மணிச்சத்து, 0.40 சதம் கால்சியம், 0.60 சதம் மக்னீசியம், 0.48 சதம் கந்தகம் இருக்கும்.

» மேலும், மில்லியனில் ஒரு பங்கு வீதம் இரும்புச்சத்து 2710, மெக்னீசியம் 450, துத்தநாகம் 370, தாமிரம் 80 மற்றும் கரிமம் மற்றும் தழைச்சத்து 22:1 சதவீதம் இருக்கும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900


இயக்குநர்,

மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிலையம், குடுமியான்மலை.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • உயிரியல் நுண்ணறிவுடன் கூடிய அறிவுசார் வேளாண்மை!

  • நன்மை செய்யும் ஒட்டுண்ணிகள்!

  • நெல் தன் வரலாறு கூறுதல்!

  • தென்னையில் ஊடுபயிர்கள்!

  • குறைந்த செலவிலான கால்நடைத் தீவனம் அசோலா!

  • நம்பிக்கையும் அறிவியலும் சந்திக்கும் ஆடிப்பட்டம்!

  • பசுந்தீவன உற்பத்திக்கு உதவும் மழைத் துப்பாக்கிப் பாசனம்!

  • பயிர் வளர்ச்சி மற்றும் கூடுதல் மகசூலுக்கு உதவும் இலைவழி உரமிடல்!

  • தென்னை சாகுபடியில் உர மேலாண்மை!