My page - topic 1, topic 2, topic 3

மீன்வள மேம்பாட்டில் மீனவப் பெண்களின் பங்கு!

மீன்வள மேம்பாட்டில் மீனவப் பெண்களின் பங்கு!

மீன்வளம், வளர்ந்து வரும் மக்கள் தொகைக்குத் தேவையான இயற்கை வளங்களில் முக்கியமான ஒன்றாகும். மேலும், இது உலகளவில் உணவு மற்றும் வாழ்வாதாரத்தைத் தொடர்ந்து வழங்குகிறது. மீன் வளர்ப்பு வளர்ச்சியால் மீன் உற்பத்தி அதிகரித்து வருகிறது. தரவுகளின் கணக்குப்படி, உலகின் மொத்த மீன் உற்பத்தி 179 மில்லியன் டன்னாகும். அதில், இந்தியாவின் பங்கு 7.58 சதமாகும். உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மீன்வளத் துறையின் பங்கு 274 பில்லியன் டாலர் (1.7%) ஆகும். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மீன்வளத் துறையின் பங்கு ஒரு சதமாகும்.

தொன்று தொட்டு நமக்குத் தெரிந்த நாளில் இருந்து ஆண்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருவதையும், பெண்கள் அந்த மீன்களை விற்பது மற்றும் சமைப்பது போன்ற குடும்ப வேலைகளில் ஈடுபட்டு வருவதையும் பார்க்கிறோம். ஆனால், தற்போது அவர்களின் பணி நிலையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை, இந்தக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

ஒட்டுமொத்தமாக, மீன்பிடி மற்றும் மீன் வளர்ப்பில் நேரடியாக ஈடுபட்டுள்ள மக்களில் 21 சதவீதத்துக்கு மேல் பெண்களே உள்ளனர். மீன் வளர்ப்பில் 28 சதவீதப் பெண்களும், மீன் பிடித்தலில் 18 சதவீதப் பெண்களும் பங்கு வகிக்கின்றனர். சிறிய மற்றும் பெரியளவில் மீன் பிடித்தல் மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

மீன்வளத் துறையில் மீனவ மகளிரின் தற்போதைய நிலை

மீன்வளத் துறையில் சுமார் 28 மில்லியன் மக்கள், கடல் மற்றும் உள்நாட்டு மீன் வளர்ப்புத் துறையின் செயல்களில், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட்டு வருகின்றனர். உள்நாட்டு மீன் வளர்ப்பு மற்றும் உற்பத்தியில், தெலுங்கானாவைச் சேர்ந்த 22.4 சதவீத மீனவப் பெண்கள் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர். 4.9 மில்லியன் கடல் மீனவர்களில் 47 சதம் பெண்களும், 23 மில்லியன் உள்நாட்டு மீனவர்களில் 44 சதம் பெண்களும் உள்ளனர்.

கடலோர மீனவப் பெண்களின் மக்கள் தொகை, தமிழ்நாட்டைத் தொடர்ந்து கேரளா மற்றும் ஒடிசாவில் அதிகமாக உள்ளது. பீகாரில் மீனவப் பெண்கள் 28 சதம் உள்ளனர், உத்தரப் பிரதேசத்தில் 17.8 சதம், மேற்கு வங்கத்தில் 11.92 சதம் மீனவ மகளிர் உள்ளனர். கேரளாவில் 67 சதம் மீனவப் பெண்கள் உள்ளனர். மொத்த முழு நேர மீனவப் பெண்களில் 67 சதம் பேர்கள், கடலில் மீன் பிடிப்பதை முழுநேரத் தொழிலாகக் கொண்டுள்ளனர்.

கடல் மீன் பிடிப்பைப் பகுதி நேரத் தொழிலாகக் கொண்டுள்ள பெண்கள் மராட்டியத்தில் அதிகமாக உள்ளனர். அதைத் தொடர்ந்து கேரளத்திலும் அசாமிலும் உள்ளனர். அசாமின் மீனவப் பெண்களில் 43 சதம் பேர்கள், உள்நாட்டு மீன் பிடிப்பைப் பகுதி நேரத் தொழிலாகக் கருதுகின்றனர். இவர்கள், மீன் பிடித்தல், மீன் குஞ்சுகள் சேகரிப்பு மற்றும் மீன்களைப் பதப்படுத்துதல் மற்றும் விற்பனையில் ஈடுபடுகின்றனர்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

இந்தியாவின் மீன்வளம் மற்றும் மீனவர்களின் எண்ணிக்கை

உள்நாட்டு மற்றும் நன்னீர் மீன் பிடிப்பில், 1,30,13,978 பெண்கள், 1,01,03,842 ஆண்கள் என மொத்தம் 2,31,17,820 பேர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடல்மீன் மற்றும் உப்புநீர், உவர்நீர் மீன் பிடிப்பில், 26,51,652 பெண்கள், 22,94,065 ஆண்கள் என மொத்தம் 49,45,717 பேர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆக மொத்தம் இந்தியாவில், 1,56,65,630 மகளிர், 1,23,97,907 2 ஆண்கள் என, 80,63,537 பேர்கள், மீன் பிடிப்புத் தொழிலில் உள்ளனர்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மீன் பிடிப்பில் பெண்களின் பணிகள்

மீன்பிடி வலைகளை உருவாக்குதல் மற்றும் சரி செய்தல். மீன்பிடித் தூண்டில் கொக்கிகளைத் தயாரித்தல். மீன்களைப் பதப்படுத்துதல். மதிப்புக்கூட்டிய மீன் உணவுகளை விற்பனை செய்தல். மீன் மற்றும் இறால்களை நேரடியாக மக்களைத் தேடிச் சென்று விற்பனை செய்தல். வண்ண மீன்களை வளர்த்தல். கடற்பாசி வளர்ப்பில் ஈடுபடுதல்.

மீன்பிடி வலைகளை உருவாக்குதல் மற்றும் சரி செய்தல்

பெரும்பாலும் ஆண்களே மீன் பிடித்து வருவதை நாம் அறிவோம். அப்படி ஈடுபடும் போது பழுதாகும் வலைகளைச் சரி செய்யும் வேலையை மீனவப் பெண்கள் செய்கின்றனர். இதனால், எவ்விதத் தடங்கலும் இல்லாமல் மீன் பிடிப்புத் தொடர்ந்து நடைபெறுகிறது. உதாரணமாக, 2019-ஆம் ஆண்டில், பந்தர் பெய்லா மாவட்டத்தில், பன்ட்லாந்தின் சமூக மக்கள், வலைகள் தயாரிப்பில் பயிற்சி பெற்றனர். இந்த எட்டு நாள் பயிற்சியில் பெண்களே அதிகமாகக் கலந்து கொண்டனர்.

இதில், மீன்பிடி வலைகள் பழுது பார்ப்புக்கான உள்நாட்டுத் தேவையைச் சரி செய்ய வேண்டிய அவசியத்தைச் சமூக உறுப்பினர்கள் வெளிப்படுத்தினர். வலைத் தயாரிப்பில் விரிவான அனுபவமுள்ள சோமாலியப் பெண், இந்தப் பயிற்சியை நடத்தினார். எனவே, மீன்பிடி சமூகப் பெண்களிடம் வலைத் தயாரிப்பு மற்றும் வலை பழுது பார்ப்புத் திறன்களை உருவாக்குதல் மூலம், பெண்கள் தங்கள் குடும்ப வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மீன்பிடித் தூண்டில் கொக்கிகள் தயாரிப்பு

மீன்பிடித் துண்டில் கொக்கிகள் தயாரிப்பிலும் மீனவ மகளிர் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இத்தொழிலில், தமிழ்நாட்டின் கடலோர கிராமங்களில் உள்ள பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். மீன் பிடிக்கும் பருவம் போன்றவற்றைப் பற்றி நன்கு அறிந்திருப்பதால், மிகச் சிறந்த வலைத் தயாரிப்பில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக, இழுவை வலைகளில் உள்ள கொக்கிகள் பெண்களால் செய்யப்படுகின்றன.

இப்படி, கைவினை நுட்பங்களும், அனுபவங்களும் இணைந்து, பெண்களை, சிறிய தொழில் முனைவோராக மாற்றி வருவது கண்கூடு. இந்நிலையில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம், இத்தகைய தொழில்கள் பெண்களின் பங்களிப்பால் செழித்து வருகின்றன.

மீன் பதப்படுத்துதல்

மீன் பதப்படுத்துதல் என்பது, பெண்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் மற்றொரு பகுதியாகும். உற்பத்தி செய்யப்படும் அல்லது பிடித்து வரும் அதிகப்படியான மீன்களைப் பதப்படுத்துவதன் மூலம், அதிக நாட்கள் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளதால், இந்தப் பணியில் பெண்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.

மீன் விற்பனையும், பாரம்பரிய மீன் பதப்படுத்துதலும், தென் மாநிலங்களில் உள்ள மீனவப் பெண்களின் விருப்பமான வேலைகளாக உள்ளன. மீனைச் சுத்தம் செய்தல், உப்புப் போட்டு ஊறுகாய்த் தயாரித்தல், உலர்த்துதல் போன்றவை பாரம்பரியப் பதன முறைகளாகும்.

புகை ஏற்றுதல், உறைவிப்பது போன்றவை, நவீனப் பதன முறைகள் ஆகும். பெண்கள் வெய்யிலில் மீனை உலர்த்தும் முறை மூலம், அதிக இலாபம் ஈட்டுகின்றனர். இம்முறையில், 3-6 மாதம் வரை மீன்கள் கெடாமல் இருக்கும். மீன் பற்றாக்குறை உள்ள நாடுகளுக்கு இவ்வகை மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஊதாரணமாக, லட்சத்தீவில், மினிகாய், சூரை மீன்களில் இருந்து, மாஸ்மின், ரிஹா மற்றும் அக்ரு போன்ற, பதப்படுத்தப்பட்ட மீன் உணவைப் பயன்படுத்துகின்றனர்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

சந்தைப்படுத்துதல்

சந்தைப்படுத்துதல் என்பது, பெண்கள் ஈடுபடும் முக்கிய வேலைகளில் ஒன்றாகும். உள்ளூர் மீன் விற்பனையை, பெண்கள் பரவலாகச் செய்து வருகின்றனர். அதைத் தவிர, அவர்கள் சொந்தமாக மீன் கடைகளை நடத்துவதில், மீன் மற்றும் உலர் மீன்களை விற்பனை செய்வதில் ஈடுபடுகின்றனர். மக்களை நேரடியாகச் சந்தித்து மீன் விற்பனையில் ஈடுபடும் பெண்கள், 17 சத புதிய மீன்களையும், 7 சத மீன்களைக் கருவாடாகவும் விற்பனை செய்கின்றனர்.

மேலும், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் செயல்பட்டு வருகின்றனர். நவீன உத்திகளைப் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்குகின்றனர். பயிற்சிகள் மூலம் திறன்களை மேம்படுத்தி, சரியான சூழலை உருவாக்கி, அவர்களுக்குப் போதுமான ஊதியம் மற்றும் அங்கீகாரம் அளித்தால், இத்துறையில் பெண்களின் பங்களிப்பை மேலும் கூட்டலாம்.


க.ந.கிருஷ்ணவேணி, அ.உமா, இ.பிரபு, கி.அபர்ணா, அ.மோனிஷ்குமார், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழக மீன் வளர்ப்புத் தொழிற் காப்பகம் மற்றும் தொழிற் பயிற்சி இயக்ககம், முட்டுக்காடு, சென்னை.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும் படிக்கலாம்:

  • நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முறைகள்!

  • சம்பா மற்றும் தாளடிக்கான நெல் இரகங்கள்!

  • ஜப்பானிய காடை வளர்ப்பு – 1

  • ஜப்பானிய காடை வளர்ப்பு முறை!

  • மரவள்ளி இலையில் மக்களுக்கான உணவுப் பொருள்கள்!

  • விளைச்சலைக் கெடுக்கும் எலிகளும் கட்டுப்பாடுகளும்!

  • முயல் வளர்ப்பும் விற்பனை வாய்ப்புகளும்!

  • பழ ஈக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

  • சங்க இலக்கியத்தில் காட்டப்படும் யாடும் ஆடும்!