My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்!

ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்

லைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் குறித்தும் அதன் பயன்கள் பற்றியும் இதில் தெரிந்துகொள்வோம்.

நோக்கங்கள்

புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கி, தரிசு நிலங்களை, சாகுபடிக்கு ஏற்ற நிலங்களாக மாற்றி, சாகுபடிp பரப்பை அதிகரித்தல்.

வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரித்தல்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

உழவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துதல்,

நிதி ஆதாரம்

சமுதாய நீர் ஆதாரங்களை உருவாக்குதல் – மாநில அரசு திட்டம்.

ஒருங்கிணைந்த வேளாண் இயந்திரமயமாக்கும் துணை இயக்கத் திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் திட்டம், பிரதம மந்திரி வேளாண் நீர்ப் பாசனத் திட்டம்,

ஒரு துளி நீரில் அதிக விளைச்சல் – துணை நிலை நீர் மேலாண்மைத் திட்டம் ஆகிய ஒன்றிய அரசின் பங்களிப்புத் திட்டங்களின் செயல்பாடுகள், அந்தந்த திட்டங்களில் உள்ள நிதி ஆதாரம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படுத்தப்படும்.

மானியங்களும் சலுகைகளும்

அனைத்து இனங்களுக்கும் 100 சதம் மானியம்.

பல்வேறு ஒன்றிய அரசு திட்டங்களின் நெறிமுறைகளின்படி நிர்ணயித்து உள்ள உச்சவரம்புத் தொகைக்கு மிகாமல் மானியம் வழங்குதல்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

திட்டப்பகுதி

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையால் தெரிவு செய்யப்பட்ட 1,997 கிராமங்கள்.

செயல்படுத்தப்படும் இனங்கள்

பாசனப் பரப்பு இல்லாத, தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்புகளில், ஆழ்துளைக் கிணறு, குழாய்க் கிணறு போன்ற, சமுதாய நீர் ஆதாரத்தை உருவாக்குதல்.

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு, ஆழ்துளைக் குழாய்க் கிணறு மூலம் நீர் ஆதாரத்தை உருவாக்குதல்.

பண்ணைக் குட்டைகளை அமைத்தல்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, சிறு பாசனக் குளங்கள், ஊருணிகள், குளங்கள் மற்றும் வரத்துக் கால்வாய்களைத் தூர்வாரி மேம்படுத்துதல்.

தகுதி

தேர்ந்தெடுக்கப்பட்ட 1,997 கிராமங்களின் திட்டப் பகுதிகளில் உள்ள அனைத்து விவசாயிகள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட 1,997 கிராமங்களின் திட்டப் பகுதிகளில் உள்ள, ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறு குறு விவசாயிகள்.

அணுக வேண்டிய முகவரி

சம்மந்தப்பட்ட வருவாய்க் கோட்டத்தில் உள்ள உதவி செயற் பொறியாளர், வேளாண் பொறியியல் துறை.


தமிழக வேளாண்மை – உழவர் நலத்துறை


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை 2026-2027!

  • பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையம்!

  • சூரிய மின்வேலி அமைக்க மானியம்!

  • விதை விற்பனை உரிமம் பெறுவதற்கான விதிமுறைகள்! 

  • மீனவர்களுக்காக இராமேஸ்வரம் கடலில் இறால் வளர்ப்புத் திட்டம்!

  • அரசின் வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு!

  • பண்ணைக் குட்டை அமைக்க நூறு சதம் மானியம்!

  • பம்பு செட் வாங்க விவசாயிகளுக்கு ரூ.15,000 மானியம்!

  • தஞ்சாவூர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்!