My page - topic 1, topic 2, topic 3

நிலக்கடலையில் போரான் பற்றாக்குறை!

நிலக்கடலையில் போரான் பற்றாக்குறை!

போரான் சத்துப் பற்றாக்குறை உள்ள நிலத்தில் நிலக்கடலையை சாகுபடி செய்து இருந்தால், அது நிலக்கடலை மகசூலைப் பெரியளவில் பாதிக்கும். எனவே, இதைச் சரி செய்வது முக்கியம்.

போரான் சத்துக்குறை இருந்தால், நிலக்கடலைச் செடியின் நுனி இலைகள் சிறுத்து, உருமாறி, தடித்து, மொரமொரப்பாக இருக்கும். நடுத்தண்டின் நுனிக் குருத்துக் கருகும்.

கடலைக் காய்களின் தோலில் கரும் புள்ளிகள் தோன்றும். பருப்புச் சிறுத்து விடும், பொக்குக் கடலைகள் அதிகமாகும்.

பருப்பை உடைத்துப் பார்த்தால், பருப்பின் நடுவில் குழிவான பழுப்பு நிறப் பள்ளங்கள் இருக்கும்.

விதையின் கருக்குருத்து பழுப்பு நிறமாக மாறிக் கருகி விடும். இதை, Hollow heart என்று சொல்வார்கள்.

சரி செய்தல்

போரான் சத்துக்குறை உள்ள நிலத்தில், எக்டருக்கு 10 கிலோ போராக்ஸ் வீதம் எடுத்து அடியுரமாக இட வேண்டும்.

ஒரு லிட்டர் நீருக்கு 3 கிராம் போராக்ஸ் வீதம் கலந்து, செடிகள் பூக்கும் போதும், காய்கள் பிடிக்கும் போதும், 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

இயக்குநர்,

மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிலையம், குடுமியான்மலை.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும் படிக்கலாம்:

  • தேசிய விவசாயிகள் தினம் 2025!

  • பாம்புக் கடி – தப்பும் முறைகள்!

  • பார்த்தீனியச் செடிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

  • களர், உவர் நிலத்தைச் சரி செய்வது எப்படி?

  • விவசாயிகள் செய்வதற்கு ஏற்ற துணைத் தொழில்கள்!

  • செல்வம் தரும் கால்நடைகளைச் சாலையில் விடலாமா?

  • இயற்கை வேளாண்மை பாரதத்துக்குச் சொந்தமானது! – பிரதமர் நரேந்திர மோடி சூளுரை!

  • ஜப்பானிய காடைகள்!

  • வறட்சிக்கு ஏற்ற வளமான நெல்லி!