My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

தொடர் சாகுபடி உத்தி!

தொடர் சாகுபடி

ன்று பல பகுதிகளில் ஊடுபயிர் சாகுபடி மற்றும் வரப்புப் பயிர் சாகுபடியைச் செய்யத் தயக்கம் காட்டும் விவசாயிகள், ஆள் பற்றாக் குறையால் வரிசை விதைப்பு அல்லது வரிசை நடவை மேற்கொண்டு வருகின்றனர். உரிய பயிர் எண்ணிக்கையைப் பேணுவதில்லை. உரிய இடைவெளி விட்டால் தான் எல்லாப் பயிரும் சீராக விளையும்.

தொடர் சாகுபடி

தொடர் சாகுபடி என்பது, நிலத்தில் ஏற்கெனவே சாகுபடி செய்த பயிர், ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் அறுவடைக்குத் தயாராக இருக்கும் போது, இன்னொரு பயிரை, நில ஈரம் மற்றும் மண்வளத்தைக் கருத்தில் கொண்டு விதைத்து விடுதல் அல்லது நடவு செய்தல் ஆகும். ஓட்டப் பந்தயத்தில் தொடர் ஓட்டம் இருப்பதைப் போல, பயிரின் வயதைக் கருத்தில் கொண்டு, முதல் பயிர் அறுவடைக்குத் தயாரானதும், அடுத்த பயிரை இட வேண்டும்.

இதனால், ஆள் தேவை மற்றும் நிலத் தயாரிப்புச் செலவைக் கணிசமாகக் குறைக்கலாம். குறிப்பாக, எந்த ஒரு தாவரமும் தனது தேவைக்கு மேல், ஒரு சொட்டு நீரையோ, ஒரு கிராம் உரத்தையோ கிரகிக்க முடியாது என்னும் உண்மை பலருக்குத் தெரியவில்லை. விவசாயிகளில் பலர், ஆற்றுநீர் வந்தாலோ, அருகில் நீர் கிடைத்தாலோ, அதிகமாகப் பாய்ச்சி, களைகளை முளைக்க விட்டு அவதிப் படுகிறார்கள்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

தென்னந் தோப்புக்கும் இதே நிலை தான். அதிக நீரானது அதிகக் களைக்கு வழி வகுக்கும். பயிருக்குக் கிடைக்க விடாமல், பள்ளமான பகுதிக்குச் சத்துகளை இடமாற்றம் செய்து விடும். சில சமயம், அருகில் உள்ள தோட்டங்களுக்கு நம் நிலத்தின் சத்துகள் கரைத்து எடுத்துச் செல்லப்படும். களைகள் பெரிதாக வளர ஊக்குவிக்கும் தானியப் பயிர்கள் சாகுபடியான இடங்களில், பசுந்தாள் உரப்பயிர் அல்லது பயறுவகைப் பயிர்களைத் தொடர் சாகுபடி முறையில் பயிர் செய்யலாம்.

தக்காளி, கத்தரியைப் பயிர் செய்த நிலத்தில், கொத்தவரை, குத்தவரையைப் பயிரிடலாம். பந்தல் பயிர்களின் நடுவில், தக்காளி, மிளகாயைப் பயிரிடலாம். இதனால் நேரம், பணம், மனித வளம் மீதமாகும். 


தொடர் சாகுபடி உத்தி! DR.ELANGOVAN N 1 https://pachaiboomi.net/188-2/

முனைவர் பா.இளங்கோவன்,

வேளாண் இணை இயக்குநர், காஞ்சிபுரம்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • மானாவாரிக்கு ஏற்ற புதிய வீரிய ஒட்டு மக்காச்சோளம்!

  • தர்ப்பூசணியில் அதிக மகசூலுக்கான வழிமுறைகள்!

  • நெற்பயிரைத் தாக்கும் நோய்களும் அவற்றுக்கான தீர்வுகளும்!

  • குறைந்த நீரில் கை கொடுக்கும் சிறுதானியங்கள்!

  • மா சாகுபடி சிறக்க உதவும் உயிர் உரங்கள்!

  • பாரம்பரிய நெல் இரகங்களுக்கு ஏற்ற பட்டங்கள்!

  • மலர் சாகுபடியில் மனம் போல் காசு பார்க்கலாம்!

  • மிளகாய் சாகுபடி தொழில் நுட்பங்கள்!

  • மண் புழுக்களைச் சேகரிக்கும் முறைகள்!