My page - topic 1, topic 2, topic 3

வேலிமசால் சாகுபடி!

வேலிமசால் சாகுபடி!

கால்நடைகளுக்கு, புல்வகைத் தீவனப் பயிர்களுடன், பயறுவகைத் தீவனப் பயிர்களையும் கொடுத்தால் தான், அவற்றுக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும் கிடைக்கும். ஆடு மாடுகளுக்கு, மூன்றில் ஒரு பங்கு அளவில், தானியப்புல் வகைத் தீவனப் பயிர்கள் மற்றும் பயறுவகைத் தீவனப் பயிர்களை வழங்க வேண்டும். புரதம் மிகுந்த வேலிமசாலைக் கால்நடைகளுக்குக் கொடுத்தால், சத்துப் பற்றாக்குறையைப் போக்க முடியும்.

வேலிமசால் சிறப்புகள்

+ பல்லாண்டுத் தாவரமாகப் பயிர் செய்யலாம்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

+ இதில், 20-22 சதமென, அதிகளவில் புரதச்சத்து உள்ளது.

+ ஒரு செடி 15-20 கிளைகளை விடும்.

+ ஒரு செடியில், 75-100 என, அதிகக் காய்கள் காய்க்கும்.

+ ஓராண்டில் ஏக்கருக்கு 50 டன் பசுந்தீவனமும், 200-250 கிலோ விதைகளும் கிடைக்கும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

+ ஆண்டுக்கு ஏழு முறை அறுவடை செய்யலாம்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

+ பூச்சி மற்றும் நோயெதிர்ப்புத் தன்மை மிக்கது.

பருவம்

இறவைப் பயிராக, ஆண்டு முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் பயிரிடலாம். மானாவாரிப் பயிராக, ஜூன் முதல் அக்டோபர் வரையில் பயிரிடலாம்.

நிலம் தயாரித்தல்

இரும்புக் கலப்பை மூலம், 2-3 முறை நன்கு உழ வேண்டும். பிறகு, 50 செ.மீ. இடைவெளியில், பார்களையும் தேவையான வாய்க்கால்களையும் அமைக்க வேண்டும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

உர நிர்வாகம்

கடைசி உழவுக்கு முன், ஏக்கருக்கு 5 டன் தொழுவுரம் அல்லது கம்போஸ்ட்டை அடியுரமாக இட வேண்டும். மேலும், இராசயன உரங்களை, மண் பரிசோதனை செய்து அதன்படி இடலாம். அல்லது ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 100 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 14 கிலோ பொட்டாசையும் அடியுரமாக இட வேண்டும்.

விதையளவு

ஏக்கருக்கு 8 கிலோ விதைகள் தேவைப்படும். இந்த விதைகளை, வரிசைக்கு வரிசை 60 செ.மீ., செடிக்குச் செடி 20 செ.மீ. இடைவெளி இருக்கும் வகையில், விதைக்க வேண்டும்.

விதை நேர்த்தி

ஒரு கிலோ விதைக்கு 200 மி.லி. அடர் கந்தக அமிலம் வீதம் கலந்து, 15 நிமிடங்கள் வரை கலக்க வேண்டும். அப்போது ஏற்படும் உராய்வால் விதையின் கடினத் தன்மை நீங்கி, அதிக முளைப்புத்திறன் கிடைக்கும். விதைகளை, 80 டிகிரி சென்டிகிரேடு வெப்ப நிலையுள்ள வெந்நீரில் 5 நிமிடம் வைத்திருக்க வேண்டும். பிறகு, குளிர்ந்த நீரில் 10 மணி நேரம் ஊற வைத்து எடுத்து, உலர வைத்து விதைக்க வேண்டும். இப்படிச் செய்தால் விதைகளின் முளைப்புத்திறன் அதிகரிக்கும்.

மேலும், ஏக்கருக்கு தேவைப்படும் விதைகளை, ஒரு பொட்டலம் ரைசோபியம் கலந்த ஆறிய அரிசிக் கஞ்சியில் கலந்து நேர்த்தி செய்து, 30 நிமிடங்கள் நிழலில் உலர்த்தி, விதைக்க வேண்டும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

களை நிர்வாகம்

விதைத்த 30 நாட்களில் ஒருமுறை கைக்களை எடுக்க வேண்டும். பின்பு, களைகள் அதிகமாகத் தென்பட்டால், மீண்டும் ஒருமுறை கைக்களை எடுக்கலாம்.

நீர் நிர்வாகம்

விதைப்பு நீர், மூன்றாம் நாள் உயிர்நீர்ப் பாய்ச்ச வேண்டும். பிறகு, 7-10 நாட்களுக்கு ஒருமுறை, மண் மற்றும் காலநிலையைப் பொறுத்துப் பாசனம் செய்ய வேண்டும்.

இலைவழி உரமிடுதல்

விதை உற்பத்திக்காக வேலிமசாலைப் பயிரிட்டால், செடிகள் 50 சதவீதம் பூக்கும் நிலையில், ஏக்கருக்கு 200 பி.பி.எம். சாலிசிலிக் அமிலம் வீதம் எடுத்து, 200 லிட்டர் நீரில் கலந்து, பத்து நாட்கள் இடைவெளியில், மூன்று முறை தெளிக்க வேண்டும். இதனால், தரமான விதைகள் கிடைக்கும்.

பயிர்ப் பாதுகாப்பு

வேலிமசால் பயிரைப் பூச்சியோ நோயோ தாக்குவதில்லை. எனவே, பயிர்ப் பாதுகாப்புத் தேவைப்படாது.

அறுவடை

விதைத்த 90 நாட்கள் கழித்து, தரையில் இருந்து 50 செ.மீ உயரத்தில் வெட்டி, அறுவடை செய்யலாம். பிறகு, 40 நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்து அறுவடை செய்யலாம். கலப்புப் பயிராக இருந்தால், விதைத்த 60 நாட்களில் முதல் அறுவடையும், பிறகு, 45 நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்தும் அறுவடை செய்யலாம்.
விதை உற்பத்திக்கு, பூக்கள் மலர்ந்த 35 நாட்கள் கழித்து, காய்கள் பழுப்பு நிறமான பிறகு, விதைகள் மிளிர் பழுப்பு நிறமான பிறகு, அறுவடை செய்ய வேண்டும். சரியான நேரத்தில் பறிக்கா விட்டால், காய்கள் வெடித்து விதைகள் சிதறி, மகசூல் பாதிக்கப்படும்.

மகசூல்

ஓராண்டில், ஏக்கருக்கு 50 டன் பசுந்தீவனம் கிடைக்கும். ஏக்கருக்கு 200-250 கிலோ விதைகள் கிடைக்கும். இந்த விதைகளை 14×14 சதுர கன அளவுள்ள பி.எஸ்.எஸ். சல்லடை மூலம் சலித்து, தரமான விதைகளைப் பிரித்தெடுக்க வேண்டும்.

விதைச் சேமிப்பு

விதைகளின் ஈரப்பதம் 8-10 சதம், 8-9 சதம் மற்றும் 8 சதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும். இவ்வகையில் உலர்த்திய விதைகளை, 8-9 மாதங்கள் வரை துணிப் பைகளிலும், 12-15 மாதங்கள் வரை உள்ளுறை கொண்ட சாக்குப் பைகளிலும், 15 மாதங்கள் வரை 700 காஜ் கனமுள்ள நெகிழிப் பைகளிலும் சேமித்து வைக்கலாம்.


வேலிமசால் சாகுபடி!

முனைவர் ந.சதீஸ்குமார், முனைவர் சி.ரா.ஸ்ரீரங்கசாமி, முனைவர் ப.துக்கையண்ணன், முனைவர் இரா.ஜெயஸ்ரீனிவாஸ்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும் படிக்கலாம்:

  • தரமான கறவை மாடுகள்!

  • கறவை மாடுகளில் கால்சியக் குறையால் ஏற்படும் பாதிப்புகள்!

  • கால்நடைகளுக்கான உணவில் தாதுப்புகளின் அவசியம்!

  • பயறுவகைத் தீவனப் பயிர்கள்!

  • கால்நடைகளின் தாதுப்புகள் தேவையைச் சரி செய்யும் தாதுப்புக் கட்டி!

  • கறவை மாடுகளின் இனப்பெருக்கத் திறனை மேம்படுத்தும் முறைகள்!

  • கன்று வீச்சு நோய்!

  • கால்நடைகளில் உண்ணிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

  • செயற்கை முறைக் கருவூட்டல்!