My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

சொர்ணவாரி பட்டத்துக்கு ஏற்ற நெல் இரகங்கள்!

சொர்ணவாரி பட்ட

மிழ்நாட்டில், குறுவை, சம்பா, தாளடி எனப் பல பருவங்களில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இவ்வகையில், சொர்ணவாரி பட்டத்தில் சாகுபடி செய்வதற்கு ஏற்ற நெல் இரகங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

டி.பி.எஸ். என்னும் திருப்பதிசாரம் 5

இதன் வயது 118 நாட்கள்.

பயிரின் உயரம் மத்திமமாக இருக்கும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

இலைச் சுருட்டுப்புழு, தண்டுத் துளைப்பான், ஆனைக்கொம்பன், புகையான் மற்றும் தத்துப்பூச்சித் தாக்குதலை மிதமாகத் தாங்கி வளரும்.

எக்டருக்கு 6,300 கிலோ மகசூல் கிடைக்கும்.

நெல் பருமனாக இருக்கும். அரிசி வெள்ளையாக இருக்கும். இட்லி செய்ய ஏற்றது.

கோ.54

இதன் வயது 115-118 நாட்கள்.

பயிரின் உயரம் மத்திமமாக இருக்கும்.

புகையான், குலை நோய், இலையுறைக் கருகல் நோய் மற்றும் பழுப்புப் புள்ளி நோயை மிதமாகத் தாங்கி வளரும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

எக்டருக்கு 6,350 கிலோ நெல் மகசூல் கிடைக்கும்.

அரிசி, மத்திய சன்னமாக வெள்ளை நிறத்தில் இருக்கும்.

கோ.55

இதன் வயது 115 நாட்கள்.

பயிரின் உயரம் மத்திமமாக இருக்கும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

எக்டருக்கு 6,050 கிலோ நெல் மகசூல் கிடைக்கும்.

அரிசி, மிகச் சன்னமாக, வெள்ளை நிறத்தில் இருக்கும்.

அரவைத் திறன் 65 சதமாகவும், முழு அரிசி காணும் திறன் 62 சதமாகவும் இருக்கும்.

ஏ.டி.ட்டீ.57

இதன் வயது 115 நாட்கள்.

எக்டருக்கு 6,500 கிலோ நெல் மகசூல் கிடைக்கும்.

அரிசி, மத்திய சன்னமாக, வெள்ளை நிறத்தில் இருக்கும்.

அரவைத் திறன் 69 சதமாகவும், முழு அரிசி காணும் திறன் 60 சதமாகவும் இருக்கும்.

ஏ.டி.ட்டீ.56

இதன் வயது 110-115 நாட்கள்.

எக்டருக்கு 6,248 கிலோ நெல் மகசூல் கிடைக்கும்.

இலைச் சுருட்டுப்புழு மற்றும் ஆனைக்கொம்பன் தாக்குதலை முழுமையாகத் தாங்கி வளரும்.

புகையான், பச்சைத் தத்துப்பூச்சி, குலை நோய், பாக்டீரிய இலைக்கருகல் நோய், இலையுறைக் கருகல் நோய் ஆகியவற்றை மிதமாகத் தாங்கி வளரும்.

ஏ.டி.ட்டீ.59

இதன் வயது 110-115 நாட்கள்.

பயிர், நடுத்தர உயரத்தில் சாயாமல் இருக்கும்.

இது, ஏ.டி.ட்டீ.37க்கு மாற்று இரகமாகும்.

எக்டருக்கு 6,100 கிலோ மகசூல் கிடைக்கும்.

இலையுறைக் கருகல் மற்றும் துங்ரோ நோயை முற்றிலும் தாங்கி வளரும்.

பாக்டீரிய இலைக்கருகல், இலையுறை அழுகல் மற்றும் நெற்பழ நோயை மிதமாகத் தாங்கி வளரும்.

இட்லி செய்வதற்கு ஏற்றது.


முனைவர் சி.பானுமதி,

முனைவர் இரா.அகிலா, முனைவர் க.சிவகாமி, முனைவர் செ.தமிழ்ச்செல்வி, முனைவர் அ.புனிதா, வேளாண்மை அறிவியல் நிலையம், திரூர், திருவள்ளூர் மாவட்டம்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • ஆண்டு முழுவதும் பயன் தரும் தீவனப் பயிர்கள்!

  • மானாவாரிக்கு ஏற்ற புதிய வீரிய ஒட்டு மக்காச்சோளம்!

  • தர்ப்பூசணியில் அதிக மகசூலுக்கான வழிமுறைகள்!

  • நெற்பயிரைத் தாக்கும் நோய்களும் அவற்றுக்கான தீர்வுகளும்!

  • குறைந்த நீரில் கை கொடுக்கும் சிறுதானியங்கள்!

  • மா சாகுபடி சிறக்க உதவும் உயிர் உரங்கள்!

  • பாரம்பரிய நெல் இரகங்களுக்கு ஏற்ற பட்டங்கள்!

  • மலர் சாகுபடியில் மனம் போல் காசு பார்க்கலாம்!

  • மிளகாய் சாகுபடி தொழில் நுட்பங்கள்!