My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

சாமை சாகுபடி!

சாமை சாகுபடி! Saamai cultivation https://pachaiboomi.net/546556-2/

மானாவாரியில் பயிரிட ஏற்ற மகத்தான பயிர் சாமை. குறுகிய காலத்தில், குறைவான இடுபொருள் செலவில் வருமானம் தரும் பயிர். இதில், அதிக மகசூலைத் தரும் இரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அவற்றைப் பயிர் செய்தால் கூடுதல் மகசூலைப் பெறலாம்.

உயர் விளைச்சல் இரகங்கள்

கோ.3: வயது 85 நாட்கள். தானிய மகசூல் 1,100 கிலோ. வைக்கோல் மகசூல் 2,750 கிலோ. வறட்சியைத் தாங்கும். பூச்சி, நோய்த் தாக்குதல் குறைவு.

கோ.4: வயது 75-80 நாட்கள். தானிய மகசூல் 1,890 கிலோ. வைக்கோல் மகசூல் 5,780 கிலோ. வறட்சியைத் தாங்கும். பூச்சி, நோய்த் தாக்குதல் குறைவு.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

பையூர்2: வயது 100 நாட்கள். தானிய மகசூல் 850 கிலோ. வைக்கோல் மகசூல் 2,125 கிலோ. வறட்சியைத் தாங்கி வளரும்.

கோ.1: வயது 90 நாட்கள். தானிய மகசூல் 1,300 கிலோ. வைக்கோல் மகசூல் 3,250 கிலோ. தானியம் இளமஞ்சள் நிறத்தில் இருக்கும்.

ஊடுபயிர்

தமிழகத்தில் தனிப் பயிராகவே சாமை பயிரிடப்படுகிறது. மலைப் பகுதிகளில் சாமையுடன், துவரை, அவரை, பேயெள், சோளம், கடுகு ஆகியன கலப்புப் பயிராக இடப்படுகின்றன. சாமையை, துவரை அல்லது அவரை அல்லது பேயெள் அல்லது கடுகுடன் 8:2 வீதம் ஊடுபயிராக விதைக்கலாம்.

நிலம் தயாரிப்பு

முந்தைய பயிர் அறுவடைக்குப் பின் நிலத்தை உழவு செய்தால், மண்ணின் ஈரப்பதத்தைக் காக்கலாம். களைகள் கட்டுப்படும். எனவே, சித்திரை, வைகாசியில் இறக்கைக் கலப்பை அல்லது மரக்கலப்பை மூலம் இரண்டு முறை, ஆழமாக உழ வேண்டும். விதைப்பதற்கு முன்பு, மறுபடியும் ஒருமுறை உழுது நிலத்தைச் சமன் செய்ய வேண்டும். விதை மிகச் சிறியதாக இருப்பதால் அது முளைத்து வெளிவர 5-7 நாட்கள் ஆகும். இடை உழவு செய்தால் களைகள் கட்டுப்படும். நிலம் நல்ல காற்றோற்றத்துடன் பயிர் செழித்து வளர்வதற்கு ஏற்ற பதத்திலிருக்கும்.

விதைப்பு

சாமையைக் கை விதைப்பு முறையில் விதைப்பதற்கு, எக்டருக்கு 12 கிலோ விதை தேவைப்படும். ஆனால், பயிரின் வளர்ச்சி ஒரே சீராக இருக்காது. கொர்ரு அல்லது விதைப்பான் மூலம் வரிசை விதைப்புச் செய்தால் அதிகப் பரப்பளவில், ஈரம் காயும் முன்பே விதைக்கலாம். இம்முறையில் விதைக்க, எக்டருக்கு 10 கிலோ விதை தேவை. வரிசைக்கு வரிசை 22.5 செ.மீ. பயிருக்குப் பயிர் 7.5 செ.மீ. இடைவெளியில், 2.5 செ.மீ. ஆழத்தில் விதைக்க வேண்டும்.

உர நிர்வாகம்

கடைசி உழவுக்கு முன்னால் எக்டருக்கு 5 டன் மட்கிய தொழு உரத்தை இட வேண்டும். மண் பரிசோதனை முடிவுக்கு ஏற்ப உரமிட வேண்டும். இல்லையெனில், பரிந்துரை அளவான தழை, மணி, சாம்பல் சத்துகளை, எக்டருக்கு 40:20:20 கிலோ இட வேண்டும். விதைக்கும் போதே அடியுரமாக மணி, சாம்பல் சத்துகள் முழுவதையும் இட்டுவிட வேண்டும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

தழைச்சத்தில் பாதியை அடியுரமாக இட்டு விட்டு, மீதியைச் சரிபாதியாகப் பிரித்து, விதைத்த 25-30, 40-45 நாட்களில் மேலுரமாக இட வேண்டும். பருவமழை சரியில்லா நிலையில், மண் ஈரமாக இருக்கும் போது ஒரே தடவையில் மேலுரமாக இட்டு விடலாம்.

களை நிர்வாகம்

வரிசை விதைப்பு என்றால், 2-3 முறை இடையுழவு செய்தும், அடுத்து, கையாலும் களைகளை அகற்ற வேண்டும். கை விதைப்பு என்றால், இடையுழவு செய்ய இயலாது. அதனால், இரண்டு முறை கையினால் களைகளை நீக்க வேண்டும்.

பயிர்களைக் களைதல்

முதல் களை எடுத்ததும் அல்லது விதைத்த இருபது நாளில் மானாவாரிப் பயிரில் வரிசைக்கு வரிசை 22.5 செ.மீ. மற்றும் பயிருக்குப் பயிர் 7.5 செ.மீ. இடைவெளியில் பயிர்களைக் களைக்க வேண்டும். களைத்த பயிர்களை, பயிர் இல்லாத இடங்களில் நடவு செய்யலாம்.

ஈரப்பதத்தைப் பாதுகாத்தல்

சாமை சாகுபடி மானாவாரியில் செய்யப்படுகிறது. இதில் நல்ல விளைச்சல் கிடைக்க, மண்ணின் ஈரப்பதத்தைக் காப்பது அவசியம். முந்தைய பயிர் அறுவடைக்குப் பிறகு, நிலத்தை உழ வேண்டும். கோடை உழவு செய்ய வேண்டும். நிலச்சரிவுக்கு குறுக்கே உழு வேண்டும். சரிவுக்கு ஏற்ப, 10-12 மீட்டர் இடைவெளியில் தடுப்பு வரப்புகளை இட வேண்டும். 3.3-4.0 மீட்டர் இடைவெளியில் ஆழச்சால்களை அமைக்க வேண்டும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

சாமைப்பயிர் நன்கு வளர்வதற்கு, 300-350 மி.மீ. மழை தேவை. விதைக்கும் போது, முளைக்கும் போது, பூக்கும் போது, கதிர்கள் பால் பிடிக்கும் போது, மண்ணில் ஈரம் இருக்க வேண்டும். போதிய ஈரப்பதம் இல்லையெனில், பண்ணைக் குட்டைகளில் உள்ள நீரை எடுத்து, தெளிப்பான் மூலம் இரண்டு முறை பயிர்களில் நன்கு தெளிக்க வேண்டும்.

பயிர்ப் பாதுகாப்பு

இப்பயிரை எந்த நோயும் தாக்குவதில்லை. குருத்து ஈ சாமையைத் தாக்கி, விளைச்சலைப் பாதிக்கச் செய்யும். இப்பூச்சியை கட்டுப்படுத்த, விதைப்பைத் தள்ளிப் போடாமல் பருவமழை தொடங்கியதும் விதைத்து விட வேண்டும்.

அறுவடையும் சேமிப்பும்

கதிர்கள் நன்கு காய்ந்து முற்றிய பிறகு அறுவடை செய்து களத்தில் காய வைத்து அடித்து, தானியங்களைப் பிரித்தெடுக்க வேண்டும். பிறகு, நன்றாகக் காய வைத்து, சுத்தம் செய்து சேமிக்க வேண்டும். இப்படிச் செய்தால், எக்டருக்கு 1,500-2,000 கிலோ தானியம் மற்றும் 4,000-6,000 கிலோ தட்டை கிடைக்கும். தானியத்தைச் சாக்குப் பைகள் அல்லது பல்வேறு வகையான சேமிப்புக் கலன்களில் நீண்ட நாட்களுக்கு சேமிக்கலாம்.

சந்தை நிலவரம்

ஒரு கிலோ சாமை 20-25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தற்போது சாமை மற்றும் பிற குறு தானியங்களில் உள்ள சத்துப் பொருள்கள் குறித்தும், அவற்றின் நன்மைகள் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் இவற்றின் தேவை மேலும் அதிகரிக்கும் என்பதால் சாமையின் விலை மேலும் உயரக்கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே, உழவர் பெருமக்கள், சாமையை அதிகளவில் உற்பத்தி செய்யலாம்.


சாமை சாகுபடி! SOWNDARARAJAN AO e1755582043427 https://pachaiboomi.net/546556-2/

மா.சௌந்தர்ராஜன்,

 வேளாண்மை உதவி இயக்குநர், தொட்டியம், திருச்சி மாவட்டம்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • ஆண்டு முழுவதும் பயன் தரும் தீவனப் பயிர்கள்!

  • மானாவாரிக்கு ஏற்ற புதிய வீரிய ஒட்டு மக்காச்சோளம்!

  • தர்ப்பூசணியில் அதிக மகசூலுக்கான வழிமுறைகள்!

  • நெற்பயிரைத் தாக்கும் நோய்களும் அவற்றுக்கான தீர்வுகளும்!

  • குறைந்த நீரில் கை கொடுக்கும் சிறுதானியங்கள்!

  • மா சாகுபடி சிறக்க உதவும் உயிர் உரங்கள்!

  • பாரம்பரிய நெல் இரகங்களுக்கு ஏற்ற பட்டங்கள்!

  • மலர் சாகுபடியில் மனம் போல் காசு பார்க்கலாம்!

  • மிளகாய் சாகுபடி தொழில் நுட்பங்கள்!