My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

சம்பா நெல் சாகுபடி உத்திகள்!

சம்பா நெல் சாகுபடி உத்திகள்! Samba farming Tamil Nadu https://pachaiboomi.net/556-2/

மிழ்நாட்டின் மொத்த சாகுபடி நிலப்பரப்பில் 33 சதத்தில் நெல் பயிரிடப்படுகிறது. நெல் பயிரானது ஆண்டின் மூன்று பருவங்களிலும் பயிரிடப்பட்டாலும், இரண்டாம் பருவமான சம்பா, தாளடி, பிசானம் பருவத்தில் தான் மிக அதிகமாகப் பயிரிடப்படுகிறது. கிடைக்கும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, சம்பா பருவத்துக்கு ஏற்ற சாகுபடி தொழில் நுட்பங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம், விவசாயிகள் அதிக மகசூலைப் பெற முடியும்.

விதையளவும் விதை நேர்த்தியும்

ஒரு ஏக்கருக்கு 16 கிலோ விதைகள் தேவைப்படும். விதைப்பதற்கு முன், 1 கிலோ விதைகளுக்கு 10 கிராம் சூடோமோனாஸ் வீதம் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். இப்படி நேர்த்தி செய்த விதைகளை, நனைந்த கோணிச் சாக்கில் கட்டி, 24 மணி நேரம் இருட்டில் வைத்து, முளைக்கட்டி விதைக்கலாம். முளைக்கட்டிய விதைகளுடன் ஒரு பொட்டலம் அசோஸ்பயிரில்லம், ஒரு பொட்டலம் பாஸ்போபாக்டீரியா நுண்ணுயிர் உரங்களைக் கலந்து நேர்த்தி செய்து விதைக்கலாம்.

நாற்றங்கால் பராமரிப்பு

ஒரு ஏக்கர் நடவு செய்ய 8 சென்ட் நாற்றங்கால் தேவைப்படும். கடைசி உழவுக்கு முன், 400 கிலோ தொழுவுரம் அல்லது கம்போஸ்ட் இட வேண்டும். மேலும், அடியுரமாக 16 கிலோ டி.ஏ.பி அல்லது 64 கிலோ யூரியா மற்றும் 48 கிலோ சூப்பர் பாஸ்பேட்டை இட வேண்டும். நாற்றங்காலில் விதைத்த மூன்றாம் நாள் 740 மி.லி பூட்டாக்குளோர் களைக்கொல்லியைத் தெளித்து, களைகளைக் கட்டுப்படுத்தலாம். களிமண் பாங்கான நாற்றங்காலில் வேர் அறுபடுவதைத் தவிர்க்க, நாற்றுகளைப் பறிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன், சென்ட்டுக்கு 2 கிலோ ஜிப்சம் வீதம் இட வேண்டும்.

நாற்றின் வயது மற்றும் இடைவெளி

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மத்திய கால இரகங்கள் எனில், 25-30 நாட்கள், நீண்ட கால இரகங்கள் எனில், 35-40 நாட்கள் வயதுள்ள நாற்றுகளைப் பறித்து நட வேண்டும். குத்துக்கு 2 நாற்றுகள் வீதம் நட வேண்டும். மத்திய கால இரகங்கள் எனில், 20×10 செ.மீ. இடைவெளியும், நீண்ட கால இரகங்கள் எனில் 20×15 செ.மீ இடைவெளியும் விட்டு நட வேண்டும்.

நடவு வயல் பராமரிப்பு

கோடையுழவு செய்து நிலத்தைத் தயார் செய்து வைத்துக் கொண்டால், நடவு வயலுக்கான நீர்த் தேவையைக் குறைக்கலாம். அதிக ஆழமுள்ள களிமண்ணை இறுகச் செய்ய, 400 கிலோ எடையுள்ள உருளையை, மூன்று ஆண்டுக்கு ஒருமுறை வயலில் உருட்ட வேண்டும். உழுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன், வயலில் நீரைத் தேக்கி வைக்க வேண்டும். தொழி உழவு செய்யும் போது 2.5 செ.மீ. நீர் நிலத்தில் இருக்க வேண்டும். களர் உவர் மண் எனில், ஏக்கருக்கு 15 கிலோ சிங்க் சல்பேட், 20 கிலோ மணல் வீதம் கலந்து, மண்ணின் மேலாக இட வேண்டும்.

ஒருங்கிணைந்த உர நிர்வாகம்

நடவு வயலில், ஏக்கருக்கு மட்கிய தொழுவுரம் 5 டன் அல்லது மட்கிய தென்னை நார்க்கழிவு 5 டன் அல்லது 2.5 டன் பசுந்தாள் உரத்தை, கடைசி உழவுக்கு முன் சீராகப் பரப்பி, மண்ணில் கலக்கச் செய்ய வேண்டும். நடவுக்கு முன், ஏக்கருக்கு 4 பொட்டலம் அசோஸ்பயிரில்லம், 4 பொட்டலம் பாஸ்போபாக்டீரியா, 20 கிலோ தொழுவுரம் வீதம் எடுத்துக் கலந்து வயலில் இட வேண்டும். நடவு செய்த பத்து நாட்களுக்குள், ஏக்கருக்கு 200 கிலோ அசோலா வீதம் இட்டுப் பராமரித்து, களை எடுக்கும் போது மண்ணில் கலந்து விட வேண்டும்.

மேலும், 130 கிலோ யூரியா, 125 கிலோ சூப்பர் பாஸ்பேட், 125 கிலோ பொட்டாஷ் ஆகியவற்றையும் இட வேண்டும். இவற்றில், சூப்பர் பாஸ்பேட் முழுவதையும் அடியுரமாக இட வேண்டும். பொட்டாசில் 62.5 கிலோவை அடியுரமாகவும், மீதியை இரு பங்காகப் பிரித்து, நடவு செய்த 45 மற்றும் 75 நாட்களில் மேலுரமாகவும் இட வேண்டும். யூரியாவை 26 கிலோ வீதம் ஐந்து பங்காகப் பிரித்து, நடவு செய்த 15, 30, 45, 60, 75 ஆகிய நாட்களில் மேலுரமாக இட வேண்டும்.

ஏக்கருக்கு 10 கிலோ துத்தநாக சல்பேட் மற்றும் 5 கிலோ தாமிர சல்பேட் அல்லது 5 கிலோ தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நெல் நுண்ணூட்டக் கலவையுடன் 20 கிலோ மணலைக் கலந்து, நாற்று நடுவதற்கு முன், சீராகத் தூவி விட வேண்டும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

களை நிர்வாகம்

வயலில் களைகளைக் கட்டுப்படுத்த, நடவு செய்த மூன்றாம் நாள், ஏக்கருக்கு 1 லிட்டர் பூட்டாகுளோர் அல்லது பென்டிமெத்தலின் களைக்கொல்லி மருந்து, 20 கிலோ மணல் வீதம் எடுத்துக் கலந்து, வயலில் குறைந்தளவில் நீரைக் கட்டித் தெளிக்க வேண்டும். இதைச் செய்த பிறகு, 2 நாட்களுக்கு நீரை வடிக்கவோ, புதிதாக நீர்க் கட்டவோ கூடாது. நடவு செய்த 15 நாட்கள் கழித்து, களைகள் 2-3 இலைகளுடன் இருக்கும் போது, ஏக்கருக்கு 80 மி.லி. நாமினி கோல்டு, அல்லது களைகள் 4-5 இலைகளுடன் இருக்கும் போது, 500 கிராம் 2,4 டி சோடியம் உப்பை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

நீர் நிர்வாகம்

சேற்றுழவை, டிராக்டர் அல்லது பவர் டில்லர் கேஜ்வீல் மூலம் செய்தால், 20 சதவீதம் வரை நீரைச் சேமிக்கலாம். நடவு செய்த 7 நாட்கள் வரை வயலில் 2 செ.மீ. அளவில் நீர் இருக்க வேண்டும். தேங்கும் வகையில் தொடர்ந்து நீர்ப் பாய்ச்சுவதைத் தவிர்த்து, பாய்ச்சிய நீர் மறைந்து மண்ணில் சிறு சிறு வெடிப்புகள் தோன்றிய பிறகு 2.5 செ.மீ. உயரம் வரை நீரைப் பாய்ச்சலாம்.

இப்படி, பாய்ச்சலும் காய்ச்சலுமாகப் பாசனம் செய்வதால், 30 முதல் 40 சதவீதம் வரை நீரைச் சேமிக்கலாம். நெல்லின் முக்கிய நீர்த்தேவைப் பருவங்களான, தூர்ப் பிடிக்கும் பருவம், புடைப்புப் பருவம், பூக்கும் பருவம், கதிர் உருவாகும் பருவம் மற்றும் பால் பிடிக்கும் பருவத்தில், போதியளவில் நீர்ப் பாய்ச்ச வேண்டும். அறுவடைக்குப் பத்து நாட்களுக்கு முன், பாசனத்தை நிறுத்தி விட வேண்டும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

இலைவழி ஊட்டம்

ஒரு சதம் யூரியா, 2 சதம் டி.ஏ.பி. மற்றும் ஒரு சதம் பொட்டாசு 1 சதம் கலவையை, கதிர் உருவாகும் போது ஒரு முறையும், அடுத்துப் பத்து நாட்கள் கழித்தும் தெளித்தால், மகசூல் கூடும்.

ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு

ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனாஸ் பூசணக்கொல்லி வீதம் எடுத்து, நடவு செய்த 45 மற்றும் 60 நாட்களில் வயலில் இடுவதன் மூலம், பெரும்பாலான நோய்களைக் கட்டுப்படுத்தலாம். ஏக்கருக்கு 200 கிராம் டிரைசைக்கிளசோல் அல்லது 200 கிராம் கார்பன்டாசிம் அல்லது 400 கிராம் மான்கோசெப் வீதம் தெளித்து, நெற்பயிரைத் தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்தலாம். நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, ஒரு சதம் அசடிராக்டின் அல்லது 5 சதம் வேப்பங்கொட்டைச் சாறு அல்லது 400 மி.லி. புரோபனோபாஸ் மருந்தைத் தெளிக்கலாம்.


சம்பா நெல் சாகுபடி உத்திகள்! NSATHISH KUMAR https://pachaiboomi.net/556-2/

முனைவர் ந.சதீஸ்குமார்,

முனைவர் இரா.நாகேஸ்வரி, முனைவர் இரா.ஜெயஸ்ரீனிவாஸ், முனைவர் ப.துக்கையண்ணன்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • ஆண்டு முழுவதும் பயன் தரும் தீவனப் பயிர்கள்!

  • மானாவாரிக்கு ஏற்ற புதிய வீரிய ஒட்டு மக்காச்சோளம்!

  • தர்ப்பூசணியில் அதிக மகசூலுக்கான வழிமுறைகள்!

  • நெற்பயிரைத் தாக்கும் நோய்களும் அவற்றுக்கான தீர்வுகளும்!

  • குறைந்த நீரில் கை கொடுக்கும் சிறுதானியங்கள்!

  • மா சாகுபடி சிறக்க உதவும் உயிர் உரங்கள்!

  • பாரம்பரிய நெல் இரகங்களுக்கு ஏற்ற பட்டங்கள்!

  • மலர் சாகுபடியில் மனம் போல் காசு பார்க்கலாம்!

  • மிளகாய் சாகுபடி தொழில் நுட்பங்கள்!