My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

பீஜாமிர்தம் தயாரிப்பு!

பீஜாமிர்தம்

தேவையான பொருள்கள்

பசுவின் சாணம் 5 கிலோ, பசுவின் கோமியம் 5 லிட்டர், பசும்பால் 1 லிட்டர், சுண்ணாம்பு 50 கிராம், நீர் 20 லிட்டர், நல்ல மண் 50 கிராம்.

பீஜாமிர்தம் தயாரிப்பு முறை

ஐந்து கிலோ சாணத்தைக் கைகளால் நன்றாகப் பிசைந்து, ஒரு துணியில் வைத்து மூட்டையாகக் கட்ட வேண்டும்.

இதை 20 லிட்டர் நீரில் வைத்து இரவு முழுவதும், அதாவது 12 மணி நேரம் ஊறவிட வேண்டும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

அடுத்து, இதில் ஒரு லிட்டர் நீரை எடுத்து அதில் 50 கிராம் சுண்ணாம்பைச் சேர்த்து ஓர் இரவு முழுவதும் வைக்க வேண்டும்.

அடுத்து, அடுத்த நாள் காலையில் இந்த நீரில் பசுவின் சாணத்தை மூன்று முறை தொடர்ந்து பிழிந்து விட வேண்டும்.

பிறகு, இந்தக் கரைசலில் ஒரு கைப்பிடி மண்ணைச் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும்.

அடுத்து, சுண்ணாம்புக் கரைசல் கலந்த நீரில் 5 லிட்டர் கோமியத்தைச் சேர்க்க வேண்டும்.

பிறகு, இந்தக் கரைசலில் ஓர் இரவு முழுவதும் வைத்திருந்து நொதிக்க விட்டால், பீஜாமிர்தக் கரைசல் தயாராகி விடும்.

மேலும் விவரங்களுக்கு, திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்களை 04147 – 250001 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145


திட்ட ஒருங்கிணைப்பாளர்,

வேளாண்மை அறிவியல் நிலையம், திண்டிவனம் – 604 002.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • விவசாயிகளின் நண்பன் கரையான்!

  • பூனை குறுக்கே சென்றால் அபசகுனமா?

  • பன்றிகளுடன் மீன் வளர்ப்பு!

  • பயிருக்கு அரணாகும் உயிர்வேலி!

  • கோழியின் எச்சம் சிறந்த இயற்கை உரம்!

  • தாய்க்கோழிகள் தேர்வு!

  • சுண்ணாம்பு மண் சீர்திருத்தம்!

  • புகையான் கட்டுப்பாடு!

  • ஆடு வளர்ப்பில் தீவனப் பராமரிப்பு!