My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விவசாயப் பழமொழிகள்! | பகுதி-3

பழமொழிகள்
  1. ஏரி நிறைந்தால் கரை கசியும்!

  2. மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும்!

  3. ஏருழுகுறவன் இளப்பமானால், எருது மச்சான் முறை கொண்டாடும்!

  4. காய்ந்தும் கெடுத்தது பேய்ந்தும் கெடுத்தது!

  5. மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும்!

  6. அகல உழுகிறதை விட ஆழ உழு!

  7. வடக்கே கருத்தால் மழை வரும்!

  8. விதை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?

  9. நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்!

  10. உழுகிற நாளில் ஊருக்குப் போனால் அறுக்கிற நாளில் அரிவாள் எதற்கு?

  11. மாடு மேய்க்காமல் கெட்டது, பயிர் பார்க்காமல் கெட்டது!

  12. பழுத்த ஓலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம்!

  13. துள்ளுகிற மாடு பொதி சுமக்காது!

  14. காய்த்த மரத்தில் கல்லடி படத்தான் செய்யும்!

  15. பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை!

  16. மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா?

  17. கொட்டிக் கொட்டி அளந்தாலும் குறுணி பதக்கு ஆகாது!

  18. விண் பொய்த்தால் மண் பொய்க்கும்!

  19. பங்குனி என்று பருப்பதுமில்லை, சித்திரை என்றும் சிறுப்பதுமில்லை!

  20. சுண்டைக்காய் காற்பணம், சுமை கூலி முக்காற்பணம்!


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

உங்கள் கருத்து?

மேலும் படிக்கலாம்:

  • எல்-நினோ காலத்தில் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய உத்திகள்!

  • உணவுப் பொருள்களில் மறைந்திருக்கும் அஃப்ளாடாக்சின் நச்சு!

  • உலக மருத்துவ ஆய்வுகளில் கவனம் பெறும் பிரண்டை!

  • உயிர்ம வேளாண்மைச் சான்றைப் பெறுவது எப்படி?

  • மேலே மின்சார உற்பத்தி; கீழே பயிர் சாகுபடி!

  • நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முறைகள்!

  • சம்பா மற்றும் தாளடிக்கான நெல் இரகங்கள்!

  • ஜப்பானிய காடை வளர்ப்பு – 1

  • ஜப்பானிய காடை வளர்ப்பு முறை!