My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

பனிவரகு சாகுபடி!

பனிவரகு சாகுபடி! Proso millet https://pachaiboomi.net/5465-29/

னிவரகு தொன்று தொட்டுப் பயிரிடப்படும் குறுந்தானியப் பயிர்களில் ஒன்றாகும். இது, மலைவாழ் மக்களால், மண்வளம் குறைந்த பகுதிகளில் மானாவாரியில் பயிர் செய்யப்படுகிறது. ஏலகிரி, ஏற்காடு, கல்வராயன், சேர்வராயன் மற்றும் கொல்லிமலைப் பகுதியில் தொன்று தொட்டு விளையும் பயிர் பனிவரகு. புதிது புதிதாகச் சில பணப்பயிர்கள் புகுந்து விட்டதால், காணாமல் போனது, இந்தக் கானகப் பயிர். பருவமழை பட்டும் படாமல் பெய்தாலும் பனிவரகை விதைக்கலாம்.

பருவம், நிலம் தயாரித்தல்

ஆடி, புரட்டாசிப் பட்டம் ஏற்றவை. செம்மண், இருமண் கலந்த நிலங்கள் உகந்தவை. கோடையுழவு மூலம், மண்ணரிப்பைத் தடுத்து, மழைநீரைச் சேமிக்கலாம். கோடை மழையில் முளைக்கும் களைகள் கட்டுப்படும். நிலத்தடியில் இருக்கும் கூட்டுப் புழுக்கள், உழவின் போது மேலே வந்து அழிவதால், சாகுபடிக் காலத்தில் பூச்சித் தாக்குதல் குறையும்.

விதையளவு

வரிசை விதைப்புக்கு, எக்டருக்கு 10 கிலோ விதைகள் தேவைப்படும். தூவுவதற்கு 12.5 கிலோ விதைகள் தேவைப்படும். இடைவெளி, வரிசைக்கு வரிசை 22.5 செ.மீ., பயிருக்குப் பயிர் 7 செ.மீ. விட வேண்டும்.

விதைப்பு

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

கை விதைப்பு அல்லது விதைப்பான் அல்லது கொர்ரு கருவி மூலம் வரிசை விதைப்புச் செய்யலாம். இப்படிச் செய்தால், மண்ணின் ஈரம் காயுமுன், அதிகப் பரப்பில் விதைத்து முடிக்கலாம்.

விதை நேர்த்தி

ஒரு எக்டருக்குத் தேவையான விதைகளை, 3 பொட்டலம் அசோபாஸ் கலந்த அரிசிக் கஞ்சியில் கலந்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். நிலத்தில் இடுவதாக இருந்தால், எக்டருக்குப் பத்துப் பொட்டலம் அசோபாசை, 25 கிலோ மணல், 25 கிலோ தொழுவுரம் கலந்து தூவ வேண்டும்.

உரமிடுதல்

கடைசி உழவுக்கு முன், எக்டருக்கு 12.5 டன் மட்கிய தொழுவுரம் வீதம் இட்டு உழ வேண்டும். பிறகு, 20 கிலோ தழைச்சத்து, 20 கிலோ மணிச்சத்தையும் அடியுரமாக இட வேண்டும். மேலும், 20 கிலோ தழைச்சத்தை, விதைத்த 20-25 நாட்கள் கழித்து, கிடைக்கும் ஈரத்தைப் பயன்படுத்தி, மேலுரமாக இட வேண்டும்.

பயிர்களைக் களைதல்

விதைத்த 12-15 நாட்களில், பயிர்களைக் கலைத்து, தேவையான பயிர்களைப் பராமரிக்க வேண்டும். விதைத்த 18-20 நாட்களில் களையெடுக்க வேண்டும். பிறகு, தேவைப்பட்டால், 40 நாளில் மீண்டும் களையெடுக்கலாம்.

நீர் நிர்வாகம்

பனிவரகுப் பயிர் நன்கு வளர்வதற்கு, 300-350 மி.மீ. மழை போதும். தேவையான ஈரப்பதம் மண்ணில் இல்லை என்றால் அல்லது தேவையான மழைப்பொழிவு இல்லை என்றால், பண்ணைக் குட்டையில் சேமிக்கப்பட்ட மழைநீரைப் பயன்படுத்த வேண்டும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

பயிர்ப் பாதுகாப்பு

இந்தப் பயிரைப் பூச்சிகளும் நோய்களும் தாக்குவதில்லை. எனவே, பயிர்ப் பாதுகாப்பு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

அறுவடை, மகசூல்

நன்கு காய்ந்து முற்றிய கதிர்களை அறுவடை செய்து, களத்தில் காய வைத்து அடித்து, தானியங்களைப் பிரித்துச் சுத்தம் செய்ய வேண்டும். மானாவாரியில் எக்டருக்கு 1,800 முதல் 2,300 கிலோ தானியமும், 4,000 முதல் 6,500 கிலோ தட்டையும் கிடைக்கும்.

மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருள்கள்

பனிவரகில் இருந்து, அரிசி, அவல், உப்புமா, சப்பாத்தி, ரொட்டி, தோசை, கூழ், புட்டு, முறுக்கு, பக்கோடா, சேலட் போன்ற, பலவகை உணவுப் பொருள்களைத் தயாரிக்கலாம்.

சந்தை நிலவரம்

சந்தை நிலவரப்படி, ஒரு கிலோ பனிவரகு 20 முதல் 25 ரூபாய் வரை விற்கப்படுகிறது. தற்போது குறுந்தானியங்களில் உள்ள சத்துப் பொருள்களைப் பற்றியும், அவற்றின் நன்மைகளைப் பற்றியும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு வருவதால், எதிர் காலத்தில் இதன் தேவை மேலும் அதிகரிக்கும். எனவே, பனிவரகின் விலை மேலும் உயரும் வாய்ப்பு உள்ளது.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர்களிலும் பனிவரகின் தேவை அதிகமாக உள்ளது. இருப்பினும், ஒரு பகுதியில் உள்ள உழவர்கள் பெருவாரியாய் முடிவெடுத்து, ஒன்றாக இணைந்து செயல்பட்டால், விற்பனையில் சிக்கல் இருக்காது.


பனிவரகு சாகுபடி! SOWNDARARAJAN AO e1755582043427 https://pachaiboomi.net/5465-29/

மா.சௌந்தர்ராஜன்,

வேளாண்மை உதவி இயக்குநர், தொட்டியம், திருச்சி மாவட்டம்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • ஆண்டு முழுவதும் பயன் தரும் தீவனப் பயிர்கள்!

  • மானாவாரிக்கு ஏற்ற புதிய வீரிய ஒட்டு மக்காச்சோளம்!

  • தர்ப்பூசணியில் அதிக மகசூலுக்கான வழிமுறைகள்!

  • நெற்பயிரைத் தாக்கும் நோய்களும் அவற்றுக்கான தீர்வுகளும்!

  • குறைந்த நீரில் கை கொடுக்கும் சிறுதானியங்கள்!

  • மா சாகுபடி சிறக்க உதவும் உயிர் உரங்கள்!

  • பாரம்பரிய நெல் இரகங்களுக்கு ஏற்ற பட்டங்கள்!

  • மலர் சாகுபடியில் மனம் போல் காசு பார்க்கலாம்!

  • மிளகாய் சாகுபடி தொழில் நுட்பங்கள்!