My page - topic 1, topic 2, topic 3

அகத்திக்கீரை சாகுபடி!

அகத்திக்கீரை சாகுபடி!

கத்திக் கீரையில் 36 சதம் புரதமும், 5.5 சதம் கொழுப்பும், 6.40 சதம் நார்ச்சத்தும் இருக்கும். இது, பாசன வசதியுள்ள இடங்களில் நன்கு வளரும். நன்கு வளர்ந்த செடிகளை நமது மார்பளவு உயரத்தில் கிள்ளி விட்டு வாதுகளை உருவாக்குவதன் மூலம் மகசூலைக் கூட்டலாம். அறுவடை செய்த கீரையை 1-2 மணி நேரம் நிழலில் வைத்திருந்து எடுத்து, கால்நடைகளுக்குத் தீவனமாக அளிக்கலாம்.

சாகுபடி விவரம்

நல்ல வடிகால் வசதியுள்ள இடங்களில் இறவைப் பயிராக ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம்.

எக்டருக்கு 25 டன் தொழுவுரம், 10 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து, 12.5 கிலோ சாம்பல் சத்து ஆகியவற்றை அடியுரமாக இட்டு, நன்கு உழுது நிலத்தைப் பண்படுத்த வேண்டும்.

பிறகு, ஒரு மீட்டர் இடைவெளியில் பார்களை அமைத்து, ஒரு மீட்டர் இடைவெளியில் விதைகளை ஊன்ற வேண்டும்.

இவ்வகையில் ஊன்றுவதற்கு எக்டருக்கு 7.5 கிலோ விதைகள் தேவைப்படும்.

பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அல்லது தேவைக்கு ஏற்ப, பாசனம் செய்யலாம்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

அவ்வப்போது களைகளை அகற்றி நிலத்தைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 12.5 கிலோ மணிச்சத்தை மேலுரமாக இட வேண்டும்.

அறுவடை

பயிரிட்டதில் இருந்து எட்டு மாதங்கள் கழித்து முதல் அறுவடையைச் செய்யலாம்.

அடுத்து, 60-80 நாட்களுக்கு ஒருமுறை மீண்டும் மீண்டும் அறுவடை செய்யலாம்.

இவ்வகையில், ஆண்டுக்கு 100 டன் அகத்திக்கீரை மகசூலாகக் கிடைக்கும்.


கொ.ஆ.தொரைசாமி, மு.வீரசெல்வெம், ப.செந்தில்குமார், நா.ஸ்ரீபாலாஜி.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும் படிக்கலாம்:

  • கோடை உழவு கோடி நன்மை தரும்!

  • நாவற் பழங்களைக் கையாளும் முறைகள்!

  • சன்னல் ஓரத்தில் சத்துச் சுரங்கம்!

  • வேலி மசால் சாகுபடி!

  • கோடை நெல் சாகுபடி!

  • பயிர்களைக் காக்கும் பூச்சி விரட்டிகள்!

  • முந்திரி சாகுபடியில் கூடுதல் மகசூலுக்கான உத்திகள்!

  • ஆடி, ஆவணிப் பட்டத்தில் துவரை சாகுபடி!

  • நிலக்கடலையில் கூடுதல் மகசூலுக்கு உதவும் ஜிப்சம்!