My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

வேலி மசால் சாகுபடி!

வேலி மசால் சாகுபடி! Veli masal https://pachaiboomi.net/56437-2/

வேலி மசாலில் 119.2 சதம் புரதமும், 55.3 சதம் செரிக்கும் தன்மையும் உள்ளன. சுமார் 2 மீட்டர் உயரம் வரை வளரும் இச்செடி, விதைத்த 60 நாட்களில் பூக்கும். இந்த நேரத்தில் அறுவடை செய்தால் மறுபடியும் துளிர்த்து 40 நாட்களில் பூக்கும். வேலி மசாலைக் கம்பு நேப்பியர் புல்லுடன் கலப்புப் பயிராகவும் சாகுபடி செய்யலாம்.

வேலி மசாலை ஆண்டு முழுவதும் எல்லா வகை மண்ணிலும் பயிரிடலாம். எக்டருக்கு 20 கிலோ விதைகள் தேவைப்படும்.

இந்த விதைகளை 5 நிமிடம் வெந்நீரில் இட்டு எடுத்து நிழலில் உலர்த்த வேண்டும். பிறகு, 10 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து எடுத்து 50 செ.மீ. இடைவெளியில் அடர்த்தியாக விதைக்க வேண்டும்.

சாகுபடி நிலத்தில் எக்டருக்கு 12.5 டன் தொழுவுரம், 10 கிலோ தழைச்சத்து, 60 கிலோ மணிச்சத்து, 30 கிலோ சாம்பல் சத்து வீதம் எடுத்து, அடியுரமாக இட வேண்டும்.

விதைத்த 30 நாளில் களைகளை நீக்க வேண்டும். அடுத்து, ஒவ்வொரு அறுவடைக்குப் பிறகும் களைகளை அகற்ற வேண்டும்.

பாசனம் 10-15 நாட்களுக்கு ஒருமுறை செய்ய வேண்டும். விதைத்து 70-90 நாட்களில் முதல் அறுவடையைச் செய்யலாம்.

பிறகு 40-45 நாட்களுக்கு ஒருமுறை மீண்டும் மீண்டும் அறுவடை செய்யலாம்.

இப்படி அறுவடை செய்யும் போது ஆண்டுக்கு 80-120 டன் வேலி மசால் தீவனமாகக் கிடைக்கும். 


கொ.ஆ.தொரைசாமி, மு.வீரசெல்வெம், ப.செந்தில்குமார், நா.ஸ்ரீபாலாஜி.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

மேலும் படிக்கலாம்:

  • நெற்பயிரைத் தாக்கும் நோய்களும் அவற்றுக்கான தீர்வுகளும்!

  • குறைந்த நீரில் கை கொடுக்கும் சிறுதானியங்கள்!

  • பாரம்பரிய நெல் இரகங்களுக்கு ஏற்ற பட்டங்கள்!

  • மலர் சாகுபடியில் மனம் போல் காசு பார்க்கலாம்!

  • மிளகாய் சாகுபடி தொழில் நுட்பங்கள்!

  • மண் புழுக்களைச் சேகரிக்கும் முறைகள்!

  • சூரியகாந்தி சாகுபடியில் உயர் மகசூலுக்கான உத்திகள்!

  • நிலையான வேளாண்மைக்கு மண்வளமே அடித்தளம்!

  • கரும்புத்தோகை மற்றும் ஆலைக்கழிவை ஊட்டமேற்றிய உரமாக மாற்றுதல்!