அறுபதாம் குறுவை நெல் வயது 90-100 நாட்கள். 86 செ.மீ. உயரம் வளரும். அறுபது நாளில் பூப்பதால் இது அறுபதாம் குறுவை எனப்படுகிறது. குறுவை மற்றும் நவரைப் பட்டத்தில் நாற்று விட்டு நடவு செய்ய ஏற்ற இரகம். நெல், மஞ்சள் நிறத்தில் குட்டை மற்றும் மோட்டா வடிவில் இருக்கும். சாப்பாட்டுக்கான அரிசி இரகம். எக்டருக்கு 4.80 டன் மகசூல் கிடைக்கும்.
இந்த அரிசியில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் இரத்தச் சோகை குணமாகும். நார்ச்சத்து அதிகளவில் இருப்பதால், மலச்சிக்கல் நீங்கும். மேலும், நரம்பு சார்ந்த நோய்களையும் குணமாக்கும்.
Discover more from பச்சை பூமி
விளம்பரம்:
பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
Subscribe to get the latest posts sent to your email.


