My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மதிப்புக்கூட்டிய பால் பொருள்களின் வைப்புக் காலம்!

மதிப்புக்கூட்டிய பால் பொருள்களின் வைப்புக் காலம்! Milk Products https://pachaiboomi.net/milk-value-added-items/

பால், சுத்தமான, சுவையான, சமச்சீரான, சத்தான சரிவிகித உணவுப் பொருளாகும். அதனால் தான், பச்சிளங் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் உணவாகப் பால் விளங்குகிறது. எனவே, பாலானது நமது அன்றாட உணவில் தனித்த இடத்தை வகிக்கிறது. இத்தகைய சிறப்புமிக்க பாலை, 30 டிகிரி செல்சியஸ் வெப்பமுள்ள சாதாரண அறையிலும், 4 டிகிரி செல்சியஸ் வெப்பமுள்ள குளிர்ந்த அறையிலும், எத்தனை நாட்கள் சேமித்து வைக்கலாம் என்பது பலரும் அறிந்திராத செய்தியாகும். அதைப் பற்றி இங்கே விவரமாகப் பார்க்கலாம்.

கறவை மாட்டிலிருந்து சுத்தமான முறையில் கறக்கப்பட்ட பால், கோடைக் காலத்தில் சுமார் மூன்று மணி நேரமும், குளிர் காலத்தில் சுமார் ஐந்து மணி நேரமும் கெடாமல் இருக்கும். குறைந்தளவில் உற்பத்தி செய்யப்படும் பாலை, இந்தக் காலத்துக்குள் விற்று விடலாம். ஆனால், அதிகளவில் கிடைக்கும் பாலை, இந்தக் காலத்துக்குள் விற்று முடிப்பது சற்றுக் கடினம்.

எனவே, பாலைப் பதப்படுத்தி அல்லது மதிப்புக்கூட்டுப் பொருள்களாக மாற்றித் தான் விற்பனை செய்ய வேண்டும். பாலைப் பதப்படுத்தி, அதில் சர்க்கரை, நிறமூட்டிகள் போன்றவற்றைச் சேர்த்து அல்லது பாலில் உள்ள நீரை வடிகட்டி கொழுப்புச் சத்தைச் செறிவூட்டி அல்லது பாலைத் திரிய வைத்து, புரதச் சத்தைச் செறிவூட்டி, மதிப்பூட்டிய பால் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.  

மதிப்பூட்டிய பால் பொருள்களின் வகைகள்

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

உறைநிலைப் பால் பொருள்கள், பாலைத் திரிய வைத்துத் தயாரிக்கும் பால் பொருள்கள், புளிக்க வைப்பதன் மூலம் கிடைக்கும் பால் பொருள்கள், சுண்டக் காய்ச்சித் தயாரிக்கும் கெட்டியான பால் பொருள்கள் என, நான்கு வகைகள் உள்ளன.

மதிப்பூட்டிய பால் பொருள்களின் வைப்புக் காலம்

பால் பொருள்கள்30 டிகிரி செல்சியஸ் வெப்பமுள்ள அறையில்4 டிகிரி செல்சியஸ் வெப்பமுள்ள அறையில்
புதப்படுத்தப்பட்ட பால்10 மணி நேரம்2 நாட்கள்
டேட்ராபேக் பால்3 மாதங்கள்1 ஆண்டு
பாலேடு1 வாரம்
வெண்ணெய்2 மாதங்கள்
நெய்18 மாதங்கள்3 மாதங்கள்
பன்னீர்2 வாரங்கள்1 நாள்
கோவா1 வாரம்1 மாதம்
ரோஸ்மில்க்1 நாள்4 நாட்கள்
குலோப்ஜாமூன்1 வாரம்
ரஸகுல்லா1 வாரம்
ஸ்ரீகந்த்1 வாரம்
மொஸரல்லா பாலாடைக்கட்டி2 வாரங்கள்1 நாள்
பால் தூள்3 மாதங்கள்18 மாதங்கள்
கொழுப்பில்லாப் பால் தூள்6 மாதங்கள்2 ஆண்டுகள்  

எனவே, பாலை மதிப்புக்கூட்டுப் பொருள்களாக மாற்றிக் கெடாமல் பாதுகாத்தால், நெடுநாட்கள் சேமித்து வைப்பதுடன், அதிகளவில் இலாபத்தையும் பெறலாம்.


மதிப்புக்கூட்டிய பால் பொருள்களின் வைப்புக் காலம்! Dr. M.Sutha https://pachaiboomi.net/milk-value-added-items/

முனைவர் மூ.சுதா,

உதவிப் பேராசிரியர், கால்நடை மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி-627358. முனைவர் க.தேவகி, உதவிப் பேராசிரியர், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம், செங்கல்பட்டு-603 203.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

உங்கள் கருத்து?

மேலும் படிக்கலாம்:

  • மதிப்பூட்டிய பன்றி இறைச்சிப் பொருள்கள்!

  • விளைபொருள்களின் மதிப்பைக் கூட்டினால் வருமானம் கூடும்!

  • முருங்கையின் மருத்துவ மதிப்பை உயர்த்தும் குளுகோ மொரிங்கின்!

  • மதிப்புக் கூட்டிய தக்காளிப் பொருள்கள்!

  • கோழிக்கறி சுவையாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

  • கால்நடைக் கழிவுகள் தரும் மதிப்புமிகு பொருள்கள்!

  • நெல்லிக்காய் மதிப்புக்கூட்டுப் பொருள்கள்!

  • தேங்காய் – மதிப்புமிகு பொருள்கள்!

  • தினையில் உள்ள சத்துகளும், மதிப்புக் கூட்டல் முறைகளும்!