My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

பயிர்க்கழிவை மட்க வைக்கும் பூசா டி கம்போசர் குப்பி!

பயிர்

பூசா டி கம்போசர் என்பது, பயிர்க் கழிவை உரமாக மாற்றும் நோக்கில், தில்லியில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்த, தொழில் நுட்பம் ஆகும்.

இது, அனைத்துப் பயிர்க் கழிவுகள், சமையல் கழிவுகள் மற்றும் தோட்டக் கழிவுகளை உரமாக மாற்றப் பயன்படுகிறது.

ஐந்து மெட்ரிக் டன் பண்ணைக் கழிவை உரமாக மாற்ற, நான்கு பூசா டி கம்போசர் குப்பிகள் போதுமானது.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

இந்தக் கரைசலை உற்பத்தி செய்து பயன்படுத்த, 12 நாட்கள் ஆகும்.

முதலில் 150 கிராம் வெல்லத்தை ஐந்து லிட்டர் நீரில் கலந்து கொதிக்க வைத்து, ஆற விட்டு, 50 கிராம் உளுந்து மாவைச் சேர்க்க வேண்டும்.

அடுத்து, இதில் டி கம்போசர் குப்பிகளைக் கலந்து, நுண்ணுயிரிகள் பெருகுவதற்காக, நான்கு நாட்கள் வைத்திருக்க வேண்டும்.

பிறகு, 5 லிட்டர் நீரில் 150 கிராம் வெல்லத்தைச் சேர்த்துக் கொதிக்க வைத்து, ஆற விட்டு, முதல் கரசலில் சேர்க்க வேண்டும்.

25 லிட்டர் கரைசல் கிடைக்கும் வரை, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, இப்படிச் செய்ய வேண்டும்.

பிறகு, இந்த 25 லிட்டர் கரைசலை, 475 லிட்டர் நீரில் கலந்து, ஒரு எக்டர் நெல் வைக்கோல் அல்லது விவசாயக் கழிவை அப்படியே வயலில் போட்டு அதன் மீது தெளிக்க வேண்டும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

நிலத்தில் போதிய ஈரம் இருக்க வேண்டும். இதன் மூலம், 25 நாளில் அனைத்துப் பயிர்க் கழிவும் மட்கி மண்ணுக்கு உரமாகும்.

பூசா டி கம்போசரை, spilsry.in/product/pusa decomposer/ என்னும் இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம். நான்கு குப்பிகள் அடங்கிய பாக்கெட்டின் விலை 315 ரூபாய் ஆகும்.


இயக்குநர்,

மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிலையம், குடுமியான்மலை.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • மகசூல் உற்பத்தியில் தேனீக்களின் பங்கு!

  • பெரோமோன் மற்றும் ஒட்டும் பொறிகள் மூலம் பூச்சி மேலாண்மை!

  • வெற்றியைத் தரும் வெட்டிவேர் சாகுபடி!   

  • பால் தந்தால் தான் தரமான தீவனம் தருவீர்களா?

  • இயற்கை வேளாண்மை என்றால் என்ன?

  • விவசாயத்தில், திட்டமிடல், முதலீடு, உழைப்பு அவசியம்!

  • பயிர்களுக்குப் பயன்படும் மண்புழுக் குளியல் நீர்!

  • புண்ணாக்கு வகைகளில் உள்ள சத்துகள்!

  • தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை 2026-2027!