My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

அசோலாவின் சிறப்புகள்!

அசோலாவின் சிறப்புகள்! azolla https://pachaiboomi.net/479-2/

சோலா தனித்தன்மை வாய்ந்த தாவரமாகும். ஏனெனில், இது வளர்வதற்கு மண் தேவையில்லை. மேலும், மிக வேகமாக வளரும் அசோலா, 2-3 நாட்களில் இரண்டு மடங்காகப் பெருகி விடும்.

காற்று வெளியில் உள்ள கார்பன் டை ஆக்சைடை நிலை நிறுத்தி, தழைச்சத்து சார்ந்த பொருள்களை உருவாக்குவதால், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் குறையும்.

தழைச்சத்தை நிலை நிறுத்தும் அசோலா, மேலும் பல நன்மைகளை நெற்பயிருக்கு அளிக்கிறது. நெல் வயல்களில் அடர்ந்து பரவி, களைகளைக் கட்டுப்படுத்துகிறது. எளிதில் சிதையும் அசோலா, தழை, மணி மற்றும் இதர சத்துகள் நெல் வயலில் வெளியிடும். இவை நெற்பயிருக்குப் பயன்படும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

நெற்பயிரைக் காட்டிலும் சாம்பல் சத்தைக் கிரகித்துக் கொள்ளும் அசோலா, சாம்பல் சத்துக் குறைவாக உள்ள மண்ணில் சிதையும் போது, அங்குள்ள நெற்பயிருக்குச் சாம்பல் சத்து எளிதாகக் கிடைக்கும். மண்வளம் நெடுங்காலம் கெடாமல் இருக்க உதவுகிறது.

ஆலைக் கழிவு நீரிலுள்ள குரோமியம், காப்பர், துத்தநாகம் போன்ற கடின உலோகங்களை நீக்கும், உயிர்வளித் தீர்வாக அசோலா செயல்படுகிறது. நிலம் முழுதும் பரவும் அசோலா, நீருக்குள் வெய்யில் புகுவதைக் குறைத்து, ஆவியாதல் மூலம் ஏற்படும் தழைச்சத்து இழப்பைத் தடுக்கிறது.

மேலும், மண்ணில் அமில காரத் தன்மையை உயர விடாமல் தடுக்கிறது. அசோலாவை நெல்லுடன் சேர்த்து வளர்த்தால், மீத்தேன் வெளியாதல் குறைந்து, நெல் மகசூல் அதிகமாகும்.


முனைவர் த.உதயநந்தினி


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • மகசூல் உற்பத்தியில் தேனீக்களின் பங்கு!

  • பெரோமோன் மற்றும் ஒட்டும் பொறிகள் மூலம் பூச்சி மேலாண்மை!

  • வெற்றியைத் தரும் வெட்டிவேர் சாகுபடி!   

  • பால் தந்தால் தான் தரமான தீவனம் தருவீர்களா?

  • இயற்கை வேளாண்மை என்றால் என்ன?

  • விவசாயத்தில், திட்டமிடல், முதலீடு, உழைப்பு அவசியம்!

  • பயிர்களுக்குப் பயன்படும் மண்புழுக் குளியல் நீர்!

  • புண்ணாக்கு வகைகளில் உள்ள சத்துகள்!

  • தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை 2026-2027!