My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மாடித் தோட்டத்தில் காய்கறி சாகுபடி!

மாடித் தோட்டத்தில் காய்கறி சாகுபடி! TerraceGarden https://pachaiboomi.net/54645-6/

மது உடல் நலத்துக்கு உகந்த சத்துமிகு காய்கறிகளைப் பெறுவதற்குச் சிறந்த வழி, நமது வீட்டு மாடியில் அங்கக முறையில் மாடித்தோட்டத்தை அமைப்பது தான். உலக சுகாதார நிறுவனம், ஒரு மனிதர் தினமும், 400 கிராம் காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறது.

மேலும், இதன் மூலம் 14 சதம் குடற்புற்று நோய் 11 சதம் இதயக் கோளாறுகள் மற்றும் 9 சதம் பக்கவாதம் மூலம் ஏற்படும் உயிரிழப்பைத் தவிர்க்க இயலும் என்றும் அறிவுறுத்துகிறது. தினசரி உணவில் கார்போஹைட்ரேட் 300 கிராம், புரோட்டீன் 50 கிராம் மற்றும் வைட்டமின்களைச் சேர்த்துக் கொள்வது, உடல் நலத்துக்கு மிகவும் அவசியம்.

மாடித் தோட்டத்தில் நமக்குத் தேவையான கீரை வகைகள், கொடிவகைக் காய்கறிகள், செடிவகைக் காய்கறிகள், நறுமணப் பயிர்கள் போன்றவற்றைப் பயிர் செய்யலாம். இதன் மூலம், சத்து மிகுந்த, புத்தம் புதிய, இரசாயனக் கலப்பு மற்றும் நஞ்சில்லாத காய்கறிகளை உற்பத்தி செய்து, உணவில் பயன்படுத்தி நலமாக வாழலாம்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

தற்போது நகரங்களில் மக்கள் பெருக்கம் மிகுந்துள்ளதால், அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகரித்து உள்ளன. வீட்டுத் தோட்டம் போட இடமே இல்லாத நிலையில், வீட்டு மாடியில், தொட்டிகளில் காய்கறிச் செடிகளை வளர்ப்பதன் மூலம், அன்றாடக் காய்கறிகள் தேவையைச் சரி செய்யலாம்.

நான்கு பேர்கள் உள்ள குடும்பத்துக்குத் தேவையான காய்கறிகளை, 1,200 சதுரடியுள்ள மாடியில், முப்பது தொட்டிகளில், காய்கறிச் செடிகளை வளர்ப்பதன் மூலம் பெறலாம். மாடியின் தரைக்குள் நீர் இறங்காத வகையில், தரையில், சிமெண்ட் அல்லது நீர்ப்புகா பூச்சு அல்லது பாலித்தீன் விரிப்பை விரித்து வைக்க வேண்டும்.

தொட்டிகளில் தொழுவுரம், நன்கு மட்கிய தென்னை நார்க்கழிவு, மணல் ஆகியவற்றைக் கலந்து நிரப்ப வேண்டும். தக்காளி, கத்தரி மற்றும் மிளகாய்ச் செடிகளை வளர்ப்பதற்கு, குழித்தட்டில் விதைகளை விதைத்து நாற்றுகளை உற்பத்தி செய்ய வேண்டும்.

நாற்றுகள் நன்கு வளர்ந்ததும், வாளிப்பான நாற்றுகளை எடுத்து, தொட்டிகளில் நட வேண்டும். மற்ற காய்கறிகளான, வெண்டை மற்றும் கீரை விதைகளை, நேரடியாகத் தொட்டிகளில் விதைக்கலாம்.

ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் இடைவெளியில் தொட்டிகளில் நாற்றுகளை நட்டால், தொடர்ச்சியாகக் காய்கறிகளை அறுவடை செய்யலாம். பூச்சிகளைக் கட்டுப்படுத்த, வேப்பிலைச் சாறு, வேப்பங் கொட்டைச்சாறு மற்றும் வேப்ப எண்ணெய் பயன்படும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மாடித் தோட்டத்துக்கு ஏற்ற காய்கறிகள்

சிறுகீரை, தண்டுக்கீரை, கொத்தமல்லி, வெந்தயக்கீரை, பீர்க்கங்காய், சுரைக்காய், புடலங்காய், வெள்ளரி, வெங்காயம், கத்தரி, மிளகாய், தக்காளி, வெண்டை, கொத்தவரை, தட்டைப்பயறு, அவரைக்காய், இஞ்சி, புதினா, கறிவேப்பிலை.

நன்மைகள்

சத்து மிகுந்த புத்தம் புதிய காய்கறிகளைத் தினசரி உணவில் சேர்க்கலாம். வீட்டில் சேரும் அங்ககக் கழிவுகளை உரமாக இடலாம். இதனால், இரசாயனம் கலந்த காய்கறிகளால் ஏற்படும் உடல்நலக் குறையைத் தவிர்க்கலாம். உணவே மருந்து என்னும் பழமொழிக்கு ஏற்ப, மாடித்தோட்டம் அமைத்தல், நல்ல பொழுது போக்காகவும் அமையும்.


மாடித் தோட்டத்தில் காய்கறி சாகுபடி! VIJAY SELVARAJ https://pachaiboomi.net/54645-6/

முனைவர் க.செ.விஜய் செல்வராஜ்,

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

காய்கறி ஆராய்ச்சி நிலையம், பாலூர். முனைவர் அ.பாரதி, டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஈச்சங்கோட்டை, தஞ்சாவூர் – 614 902.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • சரியான உத்திகளைக் கடைப்பிடித்தால் இலாபம் பார்க்கலாம்!

  • எல்-நினோ காலத்தில் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய உத்திகள்!

  • உணவுப் பொருள்களில் மறைந்திருக்கும் அஃப்ளாடாக்சின் நச்சு!

  • உலக மருத்துவ ஆய்வுகளில் கவனம் பெறும் பிரண்டை!

  • உயிர்ம வேளாண்மைச் சான்றைப் பெறுவது எப்படி?

  • மேலே மின்சார உற்பத்தி; கீழே பயிர் சாகுபடி!

  • நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முறைகள்!

  • சம்பா மற்றும் தாளடிக்கான நெல் இரகங்கள்!

  • ஜப்பானிய காடை வளர்ப்பு – 1