My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

உயிரியல் முறையில் நூற்புழுக் கட்டுப்பாடு!

உயிரியல் முறையில் நூற்புழுக் கட்டுப்பாடு! Rice root nematode infested Copy e1616351081965 https://pachaiboomi.net/56465-18/

நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த, இரசாயன நூற்புழுக் கொல்லிகளைப் பயன்படுத்துவதால் பல்வேறு தீங்குகள் விளைகின்றன. இம்முறையால் பயிரில் தங்கும் இரசாயன நஞ்சு, மக்களையும் கால்நடைகளையும் பாதிக்கிறது. சுற்றுச்சூழல் மாசடைகிறது. ஆகையால் இந்த நூற்புழுக்களை, உயிரியல் முறையில் கட்டுப்படுத்தலாம் என இப்போது கண்டறியப்பட்டுள்ளது.

நுண்ணுயிர்களான சூடோமோனாஸ் புளுரோசன்ஸ், பாஸ்சூரியா பெனிட்ரன்ஸ்; பூசணங்களான டிரைக்கோடெர்மா விரிடி, பொக்கோனியா கிளாமிடோஸ்போரியா; ஆக்டினோமைசிட்ஸ் என்னும் ஸ்ட்ரோப்டோமைசஸ் அவர்மெட்டிலிஸ் போன்றவை, தாவர நூற்புழுக்களை நன்றாகக் கட்டுப்படுத்தி, மகசூலை அதிகரிக்கச் செய்கின்றன.

நூற்புழுக்களுக்கு எதிராக இந்த உயிர்க் கொல்லிகள் செயல்படுகின்றன. அதாவது, வேரின் மேற்பகுதியில் போர்வையைப் போல மூடி, நூற்புழுக்களை உள்ளே விடாமல் தடுக்கின்றன. இவற்றால் பயிர்களில் ஏற்படும் இரசாயன மாற்றம், பயிர்களிடம் நூற்புழுக்களை அண்ட விடாமல் செய்கிறது.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

உயிர்க்கொல்லிச் செல்களில் சுரக்கும் திரவம், நூற்புழுக்களின் நரம்புப் பகுதியைத் தாக்கிச் செயலிழக்கச் செய்கிறது. மேலும்,  நூற்புழுக்களின் முட்டைகளைத் தாக்கி அவற்றின் மீது வளர்ந்து, நூற்புழுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்கிறது.

பாக்டீரிய வித்துகள், நூற்புழுக்களின் உடலில் ஒட்டி வளர்வதுடன், உடலிலும் ஊடுருவி அவற்றை அழிக்கின்றன. மணிச்சத்தை அதிகமாகக் கொடுத்தால், நூற்புழுக்களின் தாக்குதலைத் தாங்கிப் பயிர்கள் வளரும். பயிர் வளர்ச்சி ஊக்கிகளைத் தெளித்தால், நூற்புழுக்களால் ஏற்படும் மகசூல் இழப்பைச் சரி செய்யலாம்.

பயிர்களும் அளவுகளும்

நெல்: நெல்வேர், வேர்முடிச்சு, வெண்நுனியிலை நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த, ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் புளுரோசன்ஸ், 400 மில்லி நீர் வீதம் எடுத்துக் கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும். எக்டருக்கு 1.5 கிலோ சூடோமோனாஸ் வீதம் எடுத்து நீரில் கலந்து, நாற்றுகளின் வேர்களை இதில் நனைத்து நட வேண்டும். எக்டருக்கு 2.5 கிலோ வீதம் வயலில் தூவ வேண்டும். தொண்டைக் கதிர் பருவத்தில் எக்டருக்கு ஒரு கிலோ சூடோமோனாஸ் வீதம் எடுத்து 10 நாள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.

பயறு வகைகள்: முட்டைக்கூடு நூற்புழுவைக் கட்டுப்படுத்த, ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி வீதம் எடுத்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். எக்டருக்கு 2.5 கிலோ சூடோமோனாஸ் வீதம் நிலத்தில் தூவ வேண்டும்.

காய்கறி பயிர்கள்: வேர்முடிச்சு நூற்புழுவைக் கட்டுப்படுத்த, நாற்றங்காலில் ச.மீ.க்கு ஒரு கிலோ வேர் உட்பூசணம் அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் வீதம் இட வேண்டும். ஒரு எக்டர் நிலத்தில் 2.5 கிலோ சூடோமோனாசைத் தூவ வேண்டும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

எலுமிச்சை: வேர் நூற்புழுவைக் கட்டுப்படுத்த, மரத்துக்கு 20 கிராம் சூடோமோனாஸ் புளுரோசன்ஸ் வீதம், நான்கு மாதத்துக்கு ஒருமுறை மரத்தைச் சுற்றி இட வேண்டும்.

திராட்சை: வேர்முடிச்சு நூற்புழு மற்றும் நூற்புழு, பூசணக் கூட்டு நோயைக் கட்டுப்படுத்த, கொடிக்கு 100 கிராம்  சூடோமோனாஸ் புளுரோசன்ஸ் வீதம் கவாத்துக்குப் பின் இட வேண்டும்.

உருளைக் கிழங்கு: முட்டைக்கூடு நூற்புழுவைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு 2.5 கிலோ சூடோமோனாஸ் புளுரோசன்ஸ் வீதம் நிலத்தில் தூவ வேண்டும்.

சூடோமோனாஸ் புளுரோசன்ஸ், டிரைக்கோடெர்மா விரிடி, வேர் உட்பூசணம் போன்றவற்றை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் தயாரித்து விற்பனை செய்கிறது. இவற்றின் மூலம், சிக்கன முறையில் சுற்றுச்சூழலைப் பாதிக்கா வகையில் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தி, மகசூலை அதிகரிக்கலாம்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900


உயிரியல் முறையில் நூற்புழுக் கட்டுப்பாடு! VIJILA e1630874779507 https://pachaiboomi.net/56465-18/

முனைவர் வீ.விஜிலா,

முனைவர் மு.இராமசுப்பிரமணியன், முனைவர் இராஜா. இரமேஷ், வேளாண்மை அறிவியல் நிலையம், நீடாமங்கலம், திருவாரூர் மாவட்டம்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

உங்கள் கருத்து?

மேலும் படிக்கலாம்:

  • உயிரியல் நுண்ணறிவுடன் கூடிய அறிவுசார் வேளாண்மை!

  • நன்மை செய்யும் ஒட்டுண்ணிகள்!

  • நெல் தன் வரலாறு கூறுதல்!

  • தென்னையில் ஊடுபயிர்கள்!

  • குறைந்த செலவிலான கால்நடைத் தீவனம் அசோலா!

  • நம்பிக்கையும் அறிவியலும் சந்திக்கும் ஆடிப்பட்டம்!

  • பசுந்தீவன உற்பத்திக்கு உதவும் மழைத் துப்பாக்கிப் பாசனம்!

  • பயிர் வளர்ச்சி மற்றும் கூடுதல் மகசூலுக்கு உதவும் இலைவழி உரமிடல்!

  • தென்னை சாகுபடியில் உர மேலாண்மை!