My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

கொல்லிமலையில் நடந்து வரும் இயற்கை விவசாயம் பற்றி ஆட்சியர்!

கொல்லிமலை

நாமக்கல்லில் இருந்து 55 கி.மீ. தொலைவில் கொல்லிமலை உள்ளது. நாமக்கல், இராசிபுரம், சேந்தமங்கலம், சேலம் ஆகிய இடங்களில் இருந்து கொல்லிமலைக்குச் செல்லப் பேருந்து வசதியுள்ளது. கொல்லிமலையை அடைய, மலைப்பாதையில் 26 கி.மீ. செல்ல வேண்டும். 72 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட ஆபத்தான பாதையாக இருப்பதால், வாகன ஓட்டிகள் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும்.

கொல்லிமலையில் நடந்து வரும் இயற்கை விவசாயம் பற்றி ஆட்சியர்! Col Asia Mariyam https://pachaiboomi.net/collector-about-the-kollimalai-organic/
மு.ஆசியா மரியம்

கொல்லிமலையில் நடந்து வரும் இயற்கை விவசாயம் பற்றி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் அவர்கள் நம்மிடம் கூறியதாவது:

“இந்த இயற்கை முறை விவசாயத்தை நாங்கள் கொல்லிமலையில் மட்டும் மேற்கொள்ளவில்லை. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களிலும் ஒரு வட்டாரத்திற்கு ஒரு கிராமம் என்று தேர்ந்தெடுத்து, அதை ஆட்சியர், வேளாண் துறை அதிகாரிகள் அனைவரும் தத்தெடுத்துச் சோதனை முறையில் செயல்படுத்தி வருகிறோம். விரைவில் மாவட்டம் முழுவதும் இந்த இயற்கை விவசாயத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம். எங்களுடைய இந்த முயற்சிகளுக்கு மாநில வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் அவர்களும் பெரிதும் ஆதரவு தருகிறார்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

கொல்லிமலையைப் பொறுத்தவரை கீழே சோதனைச் சாவடியை அமைத்து, அங்கே செல்லும் ஒவ்வொரு வாகனத்தையும் சோதனை செய்து பிளாஸ்டிக் பொருள்கள் இருந்தால் அவற்றை மேலே மலைப்பகுதிக்குக் கொண்டு செல்வதைத் தடுத்து வருகிறோம். அதையும் மீறி மேலே கொண்டு சென்று போடப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை மூன்று மாதத்திற்கு ஒருமுறை வனத்துறை மற்றும் கல்லூரி மாணவர்கள் உதவியுடன் சுத்தம் செய்து வருகிறோம்.

கொல்லிமலையின் மேல் உள்ள கடைகளிலும் பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்வதைத் தடுத்து, சுத்தமாகவும் பசுமையாகவும் கொல்லிமலையைப் பராமரித்து வருகிறோம். கொல்லிமலையைப் பார்க்க வரும் மக்கள், இந்த மலையின் தொன்மையைக் காக்கும் விதத்தில் எங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்’’ என்றார்.


மு.உமாபதி


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

உங்கள் கருத்து?

மேலும் படிக்கலாம்:

  • சரியான உத்திகளைக் கடைப்பிடித்தால் இலாபம் பார்க்கலாம்!

  • எல்-நினோ காலத்தில் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய உத்திகள்!

  • உணவுப் பொருள்களில் மறைந்திருக்கும் அஃப்ளாடாக்சின் நச்சு!

  • உலக மருத்துவ ஆய்வுகளில் கவனம் பெறும் பிரண்டை!

  • உயிர்ம வேளாண்மைச் சான்றைப் பெறுவது எப்படி?

  • மேலே மின்சார உற்பத்தி; கீழே பயிர் சாகுபடி!

  • நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முறைகள்!

  • சம்பா மற்றும் தாளடிக்கான நெல் இரகங்கள்!

  • ஜப்பானிய காடை வளர்ப்பு – 1