My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

ஏழைகளின் கனவு வீடுகள்!

ஏழைகளின் கனவு வீடுகள்! 2. Palaniyandi https://pachaiboomi.net/453673-2/

க்களால் நான், மக்களுக்காகவே நான் என வாழ்ந்த தமிழக முன்னாள் முதல்வர் அம்மா, ஏழை எளிய மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களைக் கொண்டு வந்தார். அவ்வகையில், தமிழகத்தில் குடிசைகளே இல்லாத நிலையை உருவாக்கும் வகையில், கொண்டு வரப்பட்டது தான், முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம். இத்திட்டத்தின் கீழ் 2011-2012 மற்றும் 2012-2013 ஆண்டுகளில், ஒரு வீட்டுக்கான மானியமாக வழங்கப்பட்ட 1.80 இலட்சம் ரூபாய், 2013-2014 ஆண்டிலிருந்து 2.10 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது. சொந்த மனை உள்ளவர்கள் இத்திட்டத்தின் கீழ் பசுமை வீடுகளைக் கட்டலாம்.

நாமக்கல் மாவட்டத்தில் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ், 2011-12ஆம் ஆண்டில் 1,575 பயனாளிகள், 2012-13ஆம் ஆண்டில் 1,565 பயனாளிகள், 2013-14ஆம் ஆண்டில் 1,565 பயனாளிகள், 2014-15ஆம் ஆண்டில் 1,565 பயனாளிகள், 2015-16ஆம் ஆண்டில் 1,526 பயனாளிகள், 2016-17ஆம் ஆண்டில் 540 பயனாளிகள், 2017-18 ஆண்டில் 538 பயனாளிகள் என, மொத்தம் 8.874 பேர்கள் தேர்வு செய்யப்பட்டு உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களில் இதுவரை 7,873 பசுமை வீடுகளைக் கட்டி முடித்துள்ளனர். மீதமுள்ள 1,001 பேர் தங்களுக்கான பசுமை வீடுகளைக் கட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற்ற நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், வசந்தபுரம் ஊராட்சி, குப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கே.சாந்தியின் தாயார் தங்கம்மாள் (75) தெரிவித்ததாவது:

“நான் ஏழைத் தொழிலாளி. எனக்கு குடிசை வீடு மட்டுமே இருந்தது. எனது கணவர் இறந்து விட்டார். சாந்தி என்ற மகள் உள்ளார். மழை பெய்தால் ஒழுகும் குடிசை வீட்டில் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தோம். எப்படியாவது ஒரு கான்கிரீட் வீட்டைக் கட்ட வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. ஆனால், குறைந்த வருமானமே கிடைப்பதால் எனது ஆசை நிறைவேறவில்லை. குடும்பச் செலவுகள் போக, கொஞ்சம் கொஞ்சமாகச் சேமித்த பணத்தைக் கொண்டு எனது மகளுக்குத் திருமணம் செய்து வைத்தேன்.

ஏழைகளின் கனவு வீடுகள்! 3.Thangammal https://pachaiboomi.net/453673-2/

இந்த நிலையில், முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டம் உள்ளதாகவும், சொந்தமாக மனை இருந்தால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும், வீட்டைக் கட்ட ரூ.2.10 இலட்சம் நிதியுதவியாக வழங்குவதாகவும் கேள்விப்பட்டேன். நான்தான் நல்ல வீடு இல்லாமல் குடிசையிலேயே வாழ்ந்து விட்டேன். என் மகளாவது கான்கிரீட் வீடு கட்டி நன்றாக வாழட்டுமே என்று நினைத்து, எனது மகள் சாந்தியின் பெயரில் விண்ணப்பம் கொடுத்தோம். இதையடுத்து, முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீட்டைக் கட்டுவதற்கான உத்தரவு கிடைத்தது.

இப்பொழுது அழகான கான்கிரீட் வீட்டைக் கட்டி விட்டோம். இதனால், கான்கிரீட் வீடு என்னும் எனது கனவு நிறைவேறி விட்டது. என்னைப் போன்ற ஏழைத் தாய்மார்களின் கனவுகள் நிறைவேறும் வகையில், முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தைக் கொண்டு வந்து, இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் எங்களின் இதயத்தை விட்டு என்றுமே மறையாத அம்மாவுக்கும், இத்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தி எங்களின் கனவை நனவாக்கித் தந்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி திரு. கே.பழனிசாமி அவர்களுக்கும் எங்களது கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்’’ என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், வசந்தபுரம் ஊராட்சி, குப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மனைவி பூங்கொடி (36) தெரிவித்ததாவது,

எனது கணவர் கோயில் சிற்ப வேலை செய்யும் தொழிலாளி. நான் வீட்டு வேலைகளைச் செய்து வருகிறேன். எங்களுக்குச் சஞ்சய், சரண் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் பள்ளியில் படித்து வருகின்றனர். எங்கள் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. நாங்கள் கூரை வீட்டில்தான் வாழ்ந்து வந்தோம். மழை பெய்தால் ஒழுகும். அந்த நேரத்தில் குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் கஷ்டப்பட்டோம். நாம் எப்பொழுது நல்ல வீடு கட்டுவோம் அம்மா என்று குழந்தைகள் கேட்கும். அப்போது எனக்கு மிகுந்த வேதனையாக இருக்கும். அதற்கு நிறையப் பணம் வேண்டுமே என்று வருத்தத்தோடு சொல்லுவேன்.

இந்த நிலையில், முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டம் உள்ளதாகவும், இதன்கீழ் கான்கிரீட் வீட்டைக் கட்ட ரூ.2.10 இலட்சம் நிதியுதவியாகக் கிடைக்குமென்றும் தெரிந்தது. உடனே, நாங்கள் நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பத்தைக் கொடுத்தோம். அதைத் தொடர்ந்து எங்களுக்கு வீடு கட்ட உத்தரவு கிடைத்தது. வீட்டைக் கட்டுவதற்குத் தரமான கம்பிகளையும் வழங்கியதோடு, மூன்று தவணைகளில் வீடு கட்டுவதற்கான தொகையை எனது வங்கிக் கணக்கில் செலுத்தினார்கள். இப்பொழுது கான்கிரீட் வீட்டைக் கட்டி முடித்துள்ளோம்.

ஏழைகளின் கனவு வீடுகள்! 1.Poongodi https://pachaiboomi.net/453673-2/

நாங்களும் அழகான வீட்டைக் கட்டி வாழ்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அம்மா அவர்களுக்கும், அவர் வழியில் நல்லாட்சி நடத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கும் எனது சார்பாகவும், எனது கணவர், குழந்தைகள் சார்பாகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் என்றென்றும் அம்மாவுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி திரு. கே.பழனிசாமி அவர்களுக்கும் நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்போம்’’ எனப் பெருமையுடன் தெரிவித்தார்.

நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், சிவியாம்பாளையம் ஊராட்சி, சிவியாம் பாளையம் அருந்ததியர் தெருவைச் சேர்ந்த பி.பழனியாண்டி (60) தெரிவித்ததாவது:

“நான் விவசாய கூலித்தொழிலாளி. என் மனைவி பத்மினி. எனக்கு ஒரு மகனும், இரண்டு மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். நாங்கள் கூரை வீட்டில் வாழ்ந்து வந்தோம். எப்படியாவது கான்கிரீட் வீடு கட்ட வேண்டுமென்று மிகுந்த ஆசையோடு இருந்தேன். வறுமை, குடும்பச் சூழ்நிலை காரணமாக கான்கிரீட் வீடு கட்டுவது வெறும் கனவாக மட்டுமே இருந்தது.

இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் ரூ.2.10 இலட்சம் மதிப்பில், கான்கிரீட் வீடு கட்டித் தருவதாகக் கேள்விப்பட்டேன். உடனே என்னுடைய வீட்டுமனைப் பத்திர நகல் மற்றும் உரிய ஆவணங்களோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தில் காங்கிரீட் வீடு வேண்டி விண்ணப்பித்தேன். இதைத் தொடர்ந்து, பசுமை வீட்டைக் கட்டுவதற்கான உத்தரவு எனக்குக் கிடைத்தது. உடனே வீடு கட்டுவதற்கான அடித்தளம் போடும் பணியை முடித்தேன். அதன் பிறகு கட்டடம் கட்டுவதற்குத் தேவையான கம்பிகளும், மூன்று தவணைகளில் பணமும் கிடைத்தது.

மேலும், தனிநபர் கழிப்பிடம் கட்டுதற்கெனத் தனியாக ரூ.12,000 மானியமும் கிடைத்தது. இப்போது அழகான கான்கிரீட் வீட்டில் வசித்து வருகிறேன். நல்ல வீடு இல்லையே என்ற கவலையில் இருந்த நான், காங்கிரீட் வீடு கட்டுமளவுக்குத் திட்டத்தைக் கொண்டு வந்த தமிழக முன்னாள் முதல்வர் அம்மா அவர்களுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி திரு.கே.பழனிசாமி அவர்களுக்கும் கோடான கோடி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நானும், எனது குடும்பமும் அம்மா அவர்களுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் என்றென்றும் நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்போம்’’ என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ், காங்கிரீட் வீடுகளைக் கட்டி வசதியோடும் பாதுகாப்போடும் வாழ்ந்து வரும் பயனாளிகள், முன்னாள் முதல்வர் அம்மா அவர்களுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.


மு.அண்ணாதுரை,

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், நாமக்கல் மாவட்டம்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை 2026-2027!

  • பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையம்!

  • சூரிய மின்வேலி அமைக்க மானியம்!

  • விதை விற்பனை உரிமம் பெறுவதற்கான விதிமுறைகள்! 

  • மீனவர்களுக்காக இராமேஸ்வரம் கடலில் இறால் வளர்ப்புத் திட்டம்!

  • அரசின் வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு!

  • பண்ணைக் குட்டை அமைக்க நூறு சதம் மானியம்!

  • பம்பு செட் வாங்க விவசாயிகளுக்கு ரூ.15,000 மானியம்!

  • தஞ்சாவூர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்!