My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் - மாவட்ட ஆட்சியர் ஆய்வு! NKL 23 3 7 https://pachaiboomi.net/67584-2/

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளங்கள், அரசு புறம்போக்கு இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் வளர்ந்து, இயற்கைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும், சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மு.ஆசியா மரியம் இன்று (23.03.2017) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தொட்டியபட்டி ஊராட்சியிலுள்ள தொட்டியபட்டி சின்ன ஏரி, ஓ.சௌதாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆவாரங்காட்டுக் குட்டை மற்றும் மணியக்காரன் குட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முளைத்துள்ள சீமைக்கருவேல மரங்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்கள் மற்றும் ஜே.சி.பி. பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன.

இதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் மு.ஆசியா மரியம், மக்களுக்கும், இயற்கைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் சீமைக் கருவேல மரங்களை முற்றிலும் அகற்றுவதில் அலுவலர்கள் முனைப்புடன் பணியாற்ற வேண்டும். இந்த மரங்களை அகற்றும் பணியில் அரசு அலுவலர்களோடு பொது மக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

நாமக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 1328.23 ஏக்கர் பரப்பிலும், ஊராட்சிப் பகுதிகளில் 1409.11 ஏக்கர் பரப்பிலும், பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 4522.13 ஏக்கர் பரப்பிலும், இதர இடங்களான 792.57 ஏக்கர் பரப்பிலும் என மொத்தம் 8052.05 ஏக்கர் பரப்பில் இருக்கும் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இவ்வகையில், இதுவரை 1538.54 ஏக்கர் பரப்பில் இருந்த சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்களிலுள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றார்.

இதைத் தொடர்ந்து வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், அலவாய்ப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் ஊராட்சி ஒன்றியப் பொது நிதியிலிருந்து ரூ.1.35 இலட்சம் மதிப்பீட்டில் திறந்தவெளி பொதுக் கிணற்றிலிருந்து மின் மோட்டார் மூலம் மக்களுக்குக் குடிநீர் வழங்கும் பணியையும் மாவட்ட ஆட்சித் தலைவர் மு.ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் உதவி செயற் பொறியாளர் ஜி.பாலசுப்பிரமணியம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி அலுவலர்கள் எஸ்.இந்திராணி, ப.தெய்வாணை, உதவிப் பொறியாளர்கள் பி.ஜி.பழனிச்சாமி, எம்.பூபதி உட்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.      


மு.அண்ணாதுரை,

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், நாமக்கல் மாவட்டம்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை 2026-2027!

  • பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையம்!

  • சூரிய மின்வேலி அமைக்க மானியம்!

  • விதை விற்பனை உரிமம் பெறுவதற்கான விதிமுறைகள்! 

  • மீனவர்களுக்காக இராமேஸ்வரம் கடலில் இறால் வளர்ப்புத் திட்டம்!

  • அரசின் வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு!

  • பண்ணைக் குட்டை அமைக்க நூறு சதம் மானியம்!

  • பம்பு செட் வாங்க விவசாயிகளுக்கு ரூ.15,000 மானியம்!

  • தஞ்சாவூர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்!